Word |
English & Tamil Meaning |
---|---|
மார்நோவு | mār-nōvu n. <>id.+ See மார்வலி. (M. L.) . |
மார்பகம் | mārpakam n. <>மார்பு + அகம். See மார்பம். சீதை கொண்கனைத் திருவுறை மார்பகஞ் சேர்த்தான் (கம்பரா. அயோத். மந்திரப். 59). . |
மார்பம் | mārpam n. <>id. See மார்பு, 1, 2. பொன்றுஞ்சு மார்பம் (சிலப்.19, 61). . |
மார்பாக | mārpāka adv. <>மாரிபம் + ஆ-. On behalf of, through; மூலமாய். |
மார்பாணி | mārpāṇi n. <>மார்பு + ஆணி. 1. A kind of eruption on the breast; ஒருவகை மார்புப் புண். (W.) 2. Capital or principal nail, king pin; 3. Nail driven into one's chest, as a punishment; |
மார்பின்னுதல் | mār-piṉṉutal n. <>மார்1+. See மார்க்கூடுபின்னுதல். (M. L.) . |
மார்பு | mārpu n. 1. cf. மார்வு [M. mārpu.] 1. Bosom, breast, chest; நெஞ்சு. கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள், 1288). 2. Woman's breast; 3. Rim, top; 4. Tank; 5. Breadth; 6. See மார்1, 2. Loc. 7. A kind of camphor; |
மார்புக்குழி | mārpu-k-kuḻi n. <>மார்பு+. 1. Heart pit; மார்பெலும்பின் கீழுள்ள குழி. 2. Thoracic cavity; |
மார்புச்சளி | mārpu-c-caḷi n. <>id.+. See மார்ச்சளி. (M. L.) . |
மார்புநோவு | mārpu-nōvu n. <>id.+. (M. L.) 1. Breast-pang, Angina pectoris மார்பிலுண்டாம் வலிவகை. 2. Pleurodynia, pain in the chest; |
மார்புவீக்கம் | mārpu-vīkkam n. <>id.+. Inflammation of the breast; நெஞ்சில் வீங்கியிருக்கை. (M. L.) |
மார்பூசி | mārpūci n. <>id.+. Breast-pin, brooch; மேலாடையி லணியும் ஊசி. (W.) |
மார்பெலும்பு | mārpelumpu n. <>id.+ எலும்பு See மார்க்கண்டவெலும்பு. (W.) . |
மார்வம் | mārvam n. <>மார்வு. See மார்பு, 1. கோளரியா யொண்டிறலோன் மார்வத்துகிர் வைத்தது (திவ். இயற். 2, 18). . |
மார்வலி | mār-vali n. <>மார்1+. See மார்பு நோவு. Loc. . |
மார்வாடி | mārvāṭi n. See மார்வாரி. . |
மார்வாரி | mārvāri n. <>U. mārwārī. A caste of traders and money lenders, from Mārwār in Central India; மத்திய இந்தியாவிலுள்ள மார்வார் நாட்டிலிருந்து வந்து லேவாதேவி, வியாபாரம் முதலிய தொழில் புரியும் ஒருவகைச் சாதியார். |
மார்வு | mārvu n. perh. மருவு-. See மார்பு, 1. நின்மார்விற் றார்கோலி மழை (பு. வெ. 9, 16). . |
மார்வெழுத்து | mārveḻuttu n. <>மார்வு+. Name or mark of a lord imprinted on the breast of his slave; ஒருவனுக்கு அடிமை என்பதற்குக் குறியாக அவ்வடிமையின் மார்பிற் பொறிக்கப்பட்ட தலைவன் பெயர் அல்லது இரேகை. (ஈடு, 5, 10, ப்ர.) |
மாரகத்தானம் | māraka-tāṉam n. <>māraka+. The eighth house from the ascendant, indicating the time of one's death; சாதகனின் மரணகாலத்தைக் குறிக்கும் இலக்கினத்துக்கு எட்டாமிடம். |
மாரகதசை | māraka-tacai n. <>id.+. (Astrol.) The period of influence or tacai of a planet in a person's life, during which his death occurs; சாதகனுடைய சாவைக் குறிக்கும் கிரகத்துக் குள்ள தசை. |
மாரகம் | mārakam n. <>māraka. (W.) 1. That which causes death; மரணத்தைச் செய்வது. 2. Death; 3. Epidemic, plague; |
மாரகன் | mārakaṉ n. <>māraka. 1. He who causes death; மரணத்தை யுண்டாக்குவோன். (யாழ். அக.) 2. (Astrol.) The planet which causes or indicates death; |
மாரகாகளம் | mara-kākaḷam n. <>māra+. The Indian cuckoo, as the trumpet of Kāma; [மன்மதனுடைய காகளம்] குயில். மாரகாகள மெழுவ தோர் மதுமலர்க் காவில் (பாரத. குருகுல. 8). |
மாரசம் | māracam n. perh. mahā-rasa. Calcinated silver; வெள்ளி பஸ்மம். (சங். அக.) |
மாரசயன் | māra-cayaṉ n. <>māra-jaya. The Buddha, as conqueror of Māraṉ; [மாரனை வென்றோன்] புத்தன். (W.) |
மாரட்டம் | māraṭṭam n. <>mahā-rāṣṭra. The Maharatta country; மகாராட்டிர தேசம். மாலை மாரட்டத் தகத்தன . . . குதிரை (சீவக. 2161). |
மாரடி 1 - த்தல் | mār-aṭi- v. intr. <>மார்1+. 1. To beat the breast, as when women bewail the dead; இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக் கொள்ளுதல். மாரடித் திரியும் (அரிச். பு. நாட். 36). 2. To worry oneself; |