Word |
English & Tamil Meaning |
---|---|
மாரிமா | māri-mā n. prob. id.+. 1. Indian hog plum . See காட்டுமா. . 2. South Sea Islands hog plum, 1. tr., Spondias dulcis; |
மாரிமுத்து | māri-muttu n. <>மாரி2+. See மாரி2, 2. (யாழ். அக.) . |
மாரிமுத்துப்புலவர் | mārimuttu-pula-var n. A Vēḷāḷa poet of Tillai-viṭaṅkaṉ, near Chidambaram, author of puliyūr-veṇpā and other minor poems, 18 c.; புலியூர்வெண்பா முதலிய நூல்களியற்றிவரும் சிதம்பரத்தையடுத்த தில்லைவிடங்கனூரினரும் 18-ஆம் நூற்றாண்டினருமான ஒரு வேளாளப் புலவர். (அபி. சிந்.) |
மாரியம்மன் | māri-y-ammaṉ n. <>மாரி2+. See மாரி2, 3. . |
மாரியம்மன்கொண்டாடி | māri-y-am-maṉ-koṇṭāṭi n. <>மாரியம்மன்+. One possessed by the spirit of māri-y-ammaṉ; மாரியம்மனால் ஆவேசிக்கப்பெற்று ஆடுபவன். (W.) |
மாரியம்மை | māri-y-ammai n. <>மாரி2+. See மாரியம்மன். (W.) . |
மாரியாத்தாள் | māri-y-āttāl n. <>id.+. See மாரியம்மன். Colloq. . |
மாரியாயி | māri-y-āyi n. <>id.+. See மாரியம்மன். Loc. . |
மாரியுள்ளான் | māri-y-uḷḷāṉ n. prob. மாரி1+. Common snipe Gallinago Scolopa-cinus, as a bird of cold weather; உள்ளான் வகை. (M. M.) |
மாரிழவு | mār-iḻavu n. <>மாரி1+. Bewailing the dead by beating one's breast; இழவில் மாரடித்துக்கொள்ளுகை. (W.) |
மாரீசம் 1 | māricam n. <>mārīca. 1. Hypocrisy, dissimulation; வஞ்சகம். (W.) 2. Swoon; |
மாரீசம் 2 | māricam n. <>Mārīci. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) |
மாரீசம் 3 | mārīcam n. <>marīca. See மிளகுத்தைலம். (இராசவைத். 103.) . |
மாரீசன் | māricaṉ n. <>Mārīca. A Rākṣasa, who, in the guise of a golden deer and at Rāvaṇas instigation, enticed Rāma away from his hermitage; இராமனை வஞ்சித்தற்காக இராவணன் ஏவலாற் பொன்மானுருக்கொண்ட அரக்கன். இந்திய மடக்கி நின்ற மாரீச னிருக்கை சேர்ந்தான் (கம்பரா. மாரீச. 169). |
மாருசி | māruci n. <>marīci. See மிளகு. (இராசவைத். அரும். பக். 92.) . |
மாருசு | mārucu n. <>Arab. mahzar Request, petition; விண்ணப்பம். Loc. |
மாருதகணம் | māruta-kaṇam n. <> māruta+. (Pros.) Metrical foot of two nēr and one nirai (- - u u), as tēmāṅkaṉi, considered inauspicious at the commencement of a poem; தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம். (திவா.) |
மாருததீர்த்தம் | māruta-tīrttam n. <>id.+. See மாருதஸ்நானம். சாலப் பசுவின் காற்றூளி யாடல் தனிமா ருததீர்த்தம் (கூர்மபு. நித்தியகன்ம. 4). . |
மாருதப்படை | māruta-p-paṭai n. <>id.+. Mystic arrow of Vāyu, the God of wind; வாயவியாஸ்திரம். (கந்தபு. மூன்றாம்யுத். 92.) |
மாருதம் | mārutam n. <>māruta. Air, Wind; காற்று. (பிங்.) மறிகடலு மாருதமும் (திவ். இயற். 1, 10). |
மாருதன் | mārutaṉ. n. <>māruta. Vāyu, the God of wind; வாயுபகவான். மாருத னிசைந்து . . . தேரின் மீமிசைப் பாய்ந்து (கந்தபு. படையெ. 2). |
மாருதஸ்தானம் | māruta-sṉāṉam n. <>māruta+. Exposing oneself of the dust raised by cows' hoofs, considered a sacred bath; கோ தூளியை உடன்மேற்கொள்ளலாகிய ஸ்நானம். |
மாருதி | māruti n. <>māruti. 1. Hanumān, as a son of the Wind-god; அனுமான். மாருதி யல்ல னாகி னீயெனு மாற்றம் பெற்றேன் (கம்பரா. அங்கத. 13). 2. Bhīmasēna, as a son of the wind-god; |
மாருதிநாதம் | māruti-nātam n. Sand mixed with lead ore; வங்கமணல். (W.) |
மாருதேயன் | mārutēyaṉ n. <>mārutēya. Hanumān; அனுமான். தனி வினாயினான் மாருதேயன் (கம்பரா. ஆறுசெல். 9). |
மாரெரிச்சல் | mār-ericcal n. <>மார்1+. Heartburn, Cardialgia; அசீரணத்தாலுண்டாகும் மார்பெரிச்சல் நோய். (M. L.) |
மாரோடம் | mārōṭam n. prob. mōraṭa. Red catechu. See செங்கருங்காலி. ஆய்பூந் தில்லையு மணிமாரோடமும் (பெருங்.உஞ்சைக்.50, 31). . |
மாரௌரவம் | mā-rauravam n. <>மா4+. A hell; நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 204.) |
மால்(லு) 1 - தல் | māl- 3 v. intr. To be confused, perturbed; மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செலி யெருவை (அகநா. 3). |