Word |
English & Tamil Meaning |
---|---|
மாலைக்காமாலை | mālai-k-kāmālai n. <>மாலை1+. See மாலைக்கண், 1. (யாழ். அக.) . |
மாலைக்காரர் | mālai-k-kārar n. <>மாலை3+. Garland-makers; மாலை தொடுப்போர். மாலைக்காரருங் காலக் கணிதரும் (மணி. 28,40). |
மாலைக்குளி | mālai-k-kuḷi n. <>மாலை1+. See மாலைக்குளியல். (பதார்த்த. 1307.) . |
மாலைக்குளியல் | mālai-k-kuḷiyal n. <>id.+. Evening bath; அந்திநோத்துக் குளிக்கை. (பதார்த்த. 1307, தலைப்பு.) |
மாலைக்குளியன் | mālai-k-kuḷiyaṉ n. <>id.+. Fop, dandy, as bathing in the evenings; மாலையிற் குளித்து அலங்கரித்துக்கொள்ளும் டாம்பீகன். (விறலிவிடு. 237.) |
மாலைக்கோவில் | mālai-k-kōvil n. Shrine where a shapeless stone is worshipped; உருவம் வகுக்காத சிலையை வைத்து வணங்குங் கோயில். Loc. |
மாலைகட்டி | mālai-kaṭṭi n. <>மாலை3+. One who makes garlands of flowers for use in temples; கோயிலுக்குப் பூமாலை கட்டுவோன் Colloq. |
மாலைசாத்து - தல் | mālai-cāttu- v. intr. <>id.+. To adorn with garlands, as a deity; மாலையால் அலங்கரித்தல். (W.) |
மாலைசூட்டு | mālai-cūṭṭu n. <>id.+ குட்டு- Selection of husband by a princess at a public assembly of suitors. See சுயம்வரம். (யாழ். அக.) |
மாலைசூட்டு - தல் | mālai-cūṭṭu- v. tr. <>id.+. See மாலையிடு-. . |
மாலைத்தீவகம் | mālai-t-tīvakam n. (Rhet.) See மாலாதீபகம். (தண்டி. 40, 1.) . |
மாலைத்தீவு | mālai-t-tīvu n. See மாலதீவு. . |
மாலை நிலை | mālai-nilai n. <>மாலை1+. cf. பாலைநிலை. (Puṟap.) Theme describing the condition of a wife preparing to immolate herself, in an evening, on the funeral pyre of her deceased husband; இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்றநிலை கூறும் புறத்துறை. (தொல். பொ. 77, இளம்பூ.) (பு. வெ. 10, 8.) |
மாலை நுழைஞ்சான் | mālai-nuḻaicāṉ n. <>id.+. A dark white-breasted little bird which nestles in the sand at dusk; மாலையில் மணல் தரையில் தங்குவதும் கரியவுடலும் வெண்மார்புமுடையதுமான குருவிவகை. (W.) |
மாலைநேரம் | mālai-nēram n. <>id.+. Evening; அந்திவேளை. (W.) |
மாலைப்படிகம் | mālai-p-paṭikam n. Prob. மாலை3+. Crystal; பளிங்கு. (யாழ். அக.) |
மாலைப்பண் | mālai-p-paṇ n. <>மாலை1+. Melody-type suited to the evening; அந்திக்குரிய இராகம். |
மாலைப்பதநீர் | mālai-p-patanīr n. <>id.+. Sweet toddy fresh-drawn in the evening; மாலையிலிறக்கிய பதநீர். (W.) |
மாலைப்பதனி | mālai-p-patani, n. Corr. of மாலைப்பதநீர். (W.) . |
மாலைபூத்தல் | mālai-pūttal n. <>மாலை3+. Arrival of the time of marriage; விவாக காலம் நேருகை. Tinn. |
மாலைமசங்கல் | mālai-macaṅkal n. <>மாலை1+. See மாலைமசங்குநேரம். Loc. . |
மாலைமசங்குநேரம் | mālai-macaṅkunēram n. <>id.+ மசங்கு-+. Dusk of evening; அந்திக்காலத்து மங்கற்பொழுது. Loc. |
மாலைமாற்று | mālai-māṟṟu n. <>மாலை3+மாற்று-. 1. The ceremony of exchanging garlands by the bride and the bridegroom, when they are lifted on the shoulders of their respective maternal uncles standing face to face; வதூவரர்கள் தத்தம் தாய்மாமன்மார் தோளிலேறிக்கொண்டு கழுத்திலணிந்த மாலைகளை மாற்றிக் கொள்ளும் மணவினை; 2. (Pros.) A kind of verse that remains identical when its letters are read in the reverse direction; |
மாலைமாற்று - தல் | mālai-māṟṟu- v. intr. <>id.+. To exchange garlands, as bridegroom and bride in a marriage; விவாகத்தில் வதூவரர்கள் ஒருவர்க்கொருவர் மாறிமாறி மாலையிடுதல். |
மாலையணி - தல் | mālai-y-aṇi- v. intr. <>id.+. 1. Lit., to adorn with a garland. [மாலையால் அலங்கரித்தல்] 2. To enjoy sexual pleasure; |
மாலையணி | mālai-y-aṇi n. <>id.+. (Rhet.) A figure of speech; அணிவகை. (சங். அக.) |
மாலையந்தி | mālai-y-anti n. <>மாலை1+. Evening twilight, dusk, dist. fr. kālai-y-anti; அந்திவேளை. காலையந்தியு மாலையந்தியும் (புறநா. 34). |