Word |
English & Tamil Meaning |
---|---|
மாலையாகாலம் | mālai-y-ā-kālam n. <>id.+ஆ-+. See மாலையந்தி. (யாழ். அக.) . |
மாலையிட்டவன் | mālai-y-iṭṭavaṉ n. <>மாலை3+. Husband, as one who garlanded his bride; கணவன். Colloq. |
மாலையிடு - தல் | mālai-y-iṭu- v. tr. <>id.+. To marry, as the bride garlanding the bridegroom; மாலைசூட்டி மணத்தல். கரித்தோலையிட் டாடுந்தொழிலுடையோனை முன்னாண் மாலை யிட்டாயிதென்னே (அருட்பா, i, வடிவுடை.13). |
மாலையீடு | mālaiyīṭu n. <>மாலையிடு-. 1. See மாலைசூட்டு. மாலையீட்டுப்படலம். (இரகு.) . 2. Monument for a sati who immolates herself in the funeral pyre of her deceased husband; 3. Cremation ground where monuments for deceased chiefs are erected; |
மாலையுவமை | mālai-y-uvamai n. <>மாலை3+. (Rhet.) A figure of speech in which a number of similes are strung together, as resembling a garland; பூமாலைபோல் உவமை பல ஒன்றற் கொன்று தொடர்புடையதாய் வரும் அணிவகை. (தண்டி. 30, 24.) |
மாலைவன்னி | mālaivaṉṉi n. Liquorice plant. See அதிமதுரம்2, 1. (சங். அக.) |
மாலைவாங்கு - தல் | mālai-vāṅku- v. intr. <>மாலை3+. 1. Lit., to purchase a garland. [மாலையை விலைக்குப் பெறுதல்] 2. To pay for sexual pleasure; |
மாலைவெயில் | mālai-veyil n. <>மாலை1+. Yellow glow of the evening sun; அந்திப்போதின் மஞ்சள் வெயில். (பதார்த்த.1297.) |
மாலைவெள்ளி | mālai-veḷḷi n. <>id.+ Venus, when it appears as the evening star; அந்தியிற்றோன்றும் சுக்கிரன். (W.) |
மாலோகம் | mā-lōkam n. <>மா4+. 1. One of the seven upper worlds; மேலேழுலகத்தொன்று. (பிங்.) 2. Superabundance; excess; |
மாலோகமாய்ப்படுத்துக்கொள்(ளு) - தல் | mālōkam-āy-p-paṭuttu-k-koḷ- v. intr. <>மாலோகம்+. To be bed-ridden with illness for a long time by disease; நோய்வாய்ப்பட்டு நெடுங்காலமாய்ப் படுகிடைக்கிடத்தல். குழந்தை மாலோக மாய்ப்படுத்துக்கொண்டிருக்கிறது. Loc. |
மாலோன் | mālōṉ n. <>மால்3. 1. Viṣṇu; திருமால். அப்புரவலனு மாலோனெனி லவளுந் திருவாமெனில் (தஞ்சைவா. 366). 2. Indra; 3. Mercury; |
மாவகம் | māvakam n. 1. cf. mādhava. South Indian mahua; See இருப்பை. (மலை.) 2. Strychnine-tree. 3. Nitta tree of Africa. |
மாவட்டணம் | mā-vaṭṭaṇam n. <>மா4+. Long shield; நெடும்பரிசை. (பிங்.) |
மாவட்டை | mā-v-vaṭṭai n. perh. மா5+. A species of leech. See செவ்வட்டை1. (சங். அக.) |
மாவடம் | mā-vaṭam n. <>மா2+. Mango plank; மாம்பலகை. Loc. |
மாவடி | mā-vaṭi n. <>id.+. 1. See மாவடி . 2. See மாம்போழ். மாவடி மடக்கண் மாதர் (பெருங்.மகத. 25, 149). |
மாவடு | mā-vaṭu n. <>id.+. Tender, unripe mango; மாவின் பிஞ்சு. மாவடு வகிரன்ன கண்ணி (திருவாச. 24, 8). |
மாவடை | mā-v-aṭai n. <>id.+அடை-. 1. Game found on the land conveyed, a term used in conveyancing; நிலத்திலடங்கிய விலங்குகள். மாவடை மரவடை. 2. Pen for village cattle (R. F.); |
மாவடைமரவடை | mā-v-aṭai-mara-v-aṭai n. <>மாவடை+. An expression used, in conveyancing, to denote game and trees on the land conveyed; சாஸனங்களில் நிலத்திலடங்கிய விலங்குமரங்களைக் குறிக்க வழங்குந் தொடர். (கோயிலொ. 64.) |
மாவதம் | māvatam n. <>Pkt. mā-vatam <>mahā-vrata. (Jaina.) Vow to abstain from all sins; பாதகங்கள் யாவும் விலகக் கைக்கொள்ளும் பிரதிஞ்ஞை. (அருங்கலச். 87.) |
மாவதை | māvatai n. prob. மா2+. Empty honey-comb; தேனில்லாத் தேன்கூடு. (யாழ். அக.) |
மாவயிரக்கல் | mā-vayira-l-kal n. <>மா4+. Felspar; பூமியில் அகப்படுங் கனிப்பொருள்வகை. (M. M. 159.) |
மாவரி | mā-v-ari n. <>மா6+அரி3-. Sieve; சல்லடை. (J.) |
மாவலன் | mā-valaṉ n. <>மா2+. See மாவலான், 2. (சூடா.) . |
மாவலான் | mā-valāṉ n. <>id.+. 1. One skilled in horsemanship; குதிரையேற்றம் வல்லவன். கைக்கொண்டான் மாவலான் (ப. வெ. 6, 24). 2. Groom; 3. Mahout; |