Word |
English & Tamil Meaning |
---|---|
மாற்றுக்கட்டை | māṟṟu-k-kaṭṭai. n. <>மாற்று+. 1. Inferiority in quality, as of gold; பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம் . 2. Dissolute man or woman; |
மாற்றுக்கதை | māṟṟu-k-katai n. <>id.+. Conundrum proposed in return; எதிர் மாறாகச் சொல்லும் விடுகதை. (W.) |
மாற்றுக்குறைச்சல் | māṟṟu-k-kuṟaiccal n. <>id.+. See மாற்றுக்கட்டை 1. திருவாங்கோட்டு மின்னல் மாற்றுக்குறைச்ச லென்றும் (பணவிடு.137). . |
மாற்றுக்கொடி | māṟṟu-k-koṭi n. <>id.+. See மாற்றுக்கதை. (W.) . |
மாற்றுக்கொடு - த்தல் | māṟṟu-k-koṭu- v. intr. <>id.+. To supply a change of clothes, commonly to women in their confinement, etc.; பிரசவம் முதலிய காலங்களில் மாற்றுடையாகக் கொடுக்கும் புடைவை. |
மாற்றுத்தாய் | māṟṟu-t-tāy n. See மாற்றாந்தாய். மாற்றுத்தாய் சென்று வனம்போகே யென்றிட (திவ். பெரியாழ். 3, 9, 4). . |
மாற்றுப்புடவை | māṟṟu-p-puṭavai n. <>மாற்று+. Change of saree, spare saree; மாற்றியுடுத்தும் சீலை. |
மாற்றுபகாரம் | māṟṟupakāram n. <>மாறு+. Help rendered in return; கைம்மாறு. நின்னருள் நிகர்க்கு மாற்றுபகாரம் (பெருங். நரவாண. 3, 143). |
மாற்றுமருந்து | māṟṟu-maruntu n. <>மாற்று+. Antidote; medicine given to nullify the injurious effect of another medicine; கொடிய மருந்து விஷம் முதலியவற்றின் தோஷத்தை நீக்கக் கொடுக்கும் மருந்து. (W.) |
மாற்றுமாலை | māṟṟu-mālai n. <>மாற்று-+. Garland exchanged between the bridal pair; மலைமாற்றில் உபயோகிக்கும் பூமாலை. Loc. |
மாற்றுமை | māṟṟumai n. <>மாற்று. Contrariety, diversity; மாறுபாடு. மாற்றுமை கொண்ட வழி. (கலித்.12). |
மாற்றுவஸ்திரம் | māṟṟu-vastiram n. <>id.+. 1. Change of clothes, spare garment மாற்றியுடுத்தும் ஆடை. (W.) 2. Costly saree or garment; |
மாற்றுவேந்தன் | māṟṟu-vēntaṉ n. <>மாறு+. See மாற்றரசன். மாற்றுவேந்தர் எயிற் புறத்து (சிலப். 3, 114, அரும். உரை). . |
மாற்றேர்விடுதல் | māṟṟēr-viṭutal n. <>id.+ஏர்+. Ploughing in exchange; தனக்கு ஒருவன் ஏர் உதவி உழுது கொடுத்ததற்குப் பிரதியாக அவனிலத்தைத் தன்னேர்விட்டு உழுதுகொடுத்தல். Nā. |
மாற்றோர் | māṟṟōr n. <>id. Enemies, foes; பகைவர். மாற்றோர் கூற்றே (திருமுரு. 257). |
மாற்றோலைப்படு - தல் | māṟṟōlai-p-patu- v. intr. <>id.+ ஒலை+. To be transferred from one list to another; ஓர் அட்டவணையினின்றும் நீக்கி வேறோரட்டவணையிற் சேர்க்கப்பெறுதல். எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்துவைத்துக் கொள்கிற்றிரே (திவ். நாய்ச். 10, 2). |
மாறச்சன் | māṟaccaṉ n. <>மாறு-+அச்சன். A village-god believed to be born of mōkiṉi from the semen that fell off her hand; மோகினியின் கையிலிருந்து விழுந்த விந்துவிற் பிறந்த ஒரு கிராமதேவதை. Nā |
மாறல் | māṟal n. cf. மாரிபம். Reason, cause; முகாந்திரம். (W.) |
மாறன் | māṟaṉ n. 1. Pāṇdyaṉ king; பாண்டியன். பூந்தார் மாற (புறநா. 55). 2. A Vaiṣṇava saint. See சடகோபன். சடகோபன் மாறன் (திவ். திருவாய். 2, 6, 11). |
மாறன | māṟaṉ n. <>மாறு-. See மாற்றான், 1. வல்வினைக்கோர் மாறன் (திருவரங்கத்தந். காப். 5). . |
மாறன்பொறையன் | māṟaṉ-poṟaiyaṉ n. An ancient poet, author of Aintiṇai-y-aimpatu; ஐந்திணையைம்பது இயற்றிய பழைய புலவர். |
மாறனகப்பொருள் | māṟaṉ-akapporuḷ n. <>மாறன்1+. A treatise on Akapporuḷ by Tiru-k-kurukai-p-perumāṭ-kavirāyar; திருக்குரு கைப்பெருமாட்கவிராயர் இயற்றிய அகப்பொருணூல். |
மாறனலங்காரம் | māṟaṉ-alaṅkāram n. <>id.+. A treatise on poetics by Tiru-k-kurukai-p-perumāṭ-kavirāyar, written in 1525 A.D.; கி. பி. 1525-ல் திருக்குருகைப்பெருமாட்கவிராயர் இயற்றிய அலங்கார நூல். |