Word |
English & Tamil Meaning |
---|---|
மாறுகண் | māṟu-kaṇ n. <>மாறு-+. [K. mālugaṇ.] Squint eye, Hemisophia; வக்கிரக் கண். மாறுகண்ணாகியு மிருந்திடில் (காசிக. மகளிர். 50). |
மாறுகம் | māṟukam n. Cloth; சீலை. (சது.) |
மாறுகால் | māṟu-kāl n. <>மாறு-+கால்1. (Nāṭya.) A leg-pose in tēci-k-kūttu; தேசிக்கூத்திற்குரிய கால்வகை. (சிலப். 3, 16, உரைக்கீழ்க் குறிப்பு, பக். 90.) |
மாறுகால்மாறுகைவாங்கு - தல் | māṟu-kāl-māṟu-kai-vāṅku- v. tr. <>மாறு+கால்1+. To cut off a leg and a hand on the opposite sides of a person's body, by way of punishment; ஒரு பக்கத்துக் கையையும் மறுபக்கத்துக் காலையும் தண்டனையாக வெட்டுதல். |
மாறுகூலி | māṟu-kūli n. Wages paid to climbers of palm trees; மரமேறுவோர் பெறுங் கூலி. (யாழ்.அக.) |
மாறுகொள்(ளு) - தல் | māṟu-koḷ- v. intr. <>மாறு+. See மாறுபடு-. (திவ். பெரியதி. 3, 1, 4.) . |
மாறுகொளக்கூறல் | māṟu-koḷa-k-kūṟal n. <>மாறுகொள்-+. Inconsistency in statements, one of ten nūṟ-kuṟṟam, q. v.; நூற்குற்றம் பத்தனுள் முன்னொடுபின் முரணக் கூறும் குற்றவகை. (நன்.12.) |
மாறுகோள் | māṟu-kōḷ n. <>id. 1. See மாறுபாடு, 2. இது மாறுகோளுரை (சி. போ. பா. பக். 11, சுவாமிநா.). . 2. See மாறுபாடு, 3 மூவகை மாறுகோளும் இல்லாத உணவை (குறள், 945, உரை). |
மாறுத்தரம் | māṟuttaram n. <>மாறு+உத்தரம். Answer, reply; உத்தரம் . (W.) |
மாறுபடு - தல் | māṟu-paṭu- v. intr. <>id.+. 1. To be changed; மாறிப்போதல். (சங். அக.) 2. To be opposed; to disagree, differ; to be discordant; to be in contrast; 3. To be inimical; |
மாறுபடுபுகழ்நிலை | māṟupaṭu-pukaḻ-nilai n. <>மாறுபடு-+புகழ்-+. (Rhet.) A figure of speech which consists in formally praising a person or thing implying thereby disparagement of another person or thing; சொல்லக் கருதியபொருளை விடுத்து அதனைப் பழிக்கும்பொருட்டு வேறொன்றை வெளிப்படையாகப் புகழும் அணிவகை. (தண்டி. 81.) |
மாறுபடுபொருண்மொழி | māṟupaṭu-poruṇ-moḻi n. <>id.+ பொருள்+. (Rhet.) A defect in composition which consists in making contradictory statements; முன்மொழிந்ததற்கு மாறாகப் பொருள்தோன்றிவருஞ் சொல்லுடையதாகிய அலங்கார வழு. (தண்டி.100.) |
மாறுபாட்டுக்காரன் | māṟupāṭṭu-k-kā-raṉ n. <>மாறுபாடு+. (W.) 1. Double-dealer; புரட்டன். 2. One who contradicts; |
மாறுபாடு | māṟupāṭu n. <>மாறுபடு-. [K. mārpādu.] 1. Opposition; விரோதம். 2. Perverseness; 3. Unsuitability, disagree ableness, discrepancy; 4. Double-dealing; |
மாறுமுகம் | māṟu-mukam n. <>மாறு-+. Face changeable at will, as of Asuras; நினைத்தவாறு மாற்றிக்கொள்ளும் முகவடிவு. மாறுமுகங் கொண்டு பொருவல் லவுணர் (கந்தபு. தேவர்கள் போற். 4). |
மாறுரை | māṟurai n. <>மாறு+உரை. Reply; உத்தரம். தர்க்கமவைக்கெலாம் . . . கன்னி மாறுரை கூறினான் (திருவாத. பு. புத்தரை. 86). |
மாறேவி | māṟēvi n. <>மால்3+தேவி. Yellow orpiment; அரிதாரம். (சங். அக.) |
மாறை | māṟai n. <>மாறனாடு. A division of the Pāṇdya country; பாண்டிமண்டலத்துள்ள ஒரு நாடு. (தஞ்சைவா.14.) |
மாறொடை | māṟoṭai n. <>மால்3+தொடை. Holy basil; துளசி. (சங். அக.) |
மாறோக்கம் | māṟōkam n. See மாறோகம். (புறநா. 37.) . |
மாறோகம் | māṟōkam n. The portion of the Pāṇdya country round Koṟkai, in Tinnevelly District; பாண்டிநாட்டிற் கொற்கையைச் சூழ்ந்த பகுதி. (தொல். சொல்.164, சேனா. புதுப். கீழ்க்குறிப்பு.) |
மான் 1 | māṉ n. <>மா2. [T. K. M. Tu. mān.] 1. Deer, hart, antelope, fawn; ஒருவகை விலங்கு. மானி னுரிவை தைஇய வூன்கெடு மார்பின் (திருமுரு.128). 2. Animal, beast; 3. Horse; 4. Lion; 5. Makara fish; 6. Capricorn of the zodiac; |