Word |
English & Tamil Meaning |
---|---|
மான் 2 | māṉ part. 1. cf. மகன். Affix to nouns; பெயர்விகுதி. வேண்மான் 2. cf மாண். Particle meaning ways, times, etc.; |
மான் 3 | māṉ n. <>mahān nom sing. of mahat. 1. (Phil.) The principle of Intellect; See மகதத்துவம். மானென்றுரைத்த புத்திவெளிப் பட்டு (மணி. 27, 207). மானாங்காரமனங்கெட (திவ். திருவாய்.10, 7, 11). 2. (šaiva.) The manifest primordial cause of the material world; 3. Human being; 4. Great person or being; 5. Mountain; |
மான் 4 | māṉ part. <>mat. Affix to a 'noun, implying possession; ஒரு பெயர்விகுதி. புத்திமான், கல்விமான். |
மான்(னு) 5 - தல் | māṉ- prob. 3 v. tr. cf. māna. To resemble; to equal; ஒத்தல். மன்னர் சேனையை மானு மன்றே (கம்பரா. ஆற்று. 14). |
மான் 6 | māṉ n. <>மான்5-. cf. māna. Likeness; ஒப்பு. (பிங்.) |
மான் 7 - தல்[மான்றல்] | māṉ 3 v. intr. prob. மால்1-. 1. To be doubtful; ஐயுறுதல். (திவா.) 2. To be confused; |
மான்களங்கம் | māṉ-kaḷaṅkam n. <>மான்1+. Spot on the moon, fancied to resemble a deer; சந்திரனிடத்துள்ள மானுருப்போன்ற மறு. (யாழ். அக.) |
மான்களிக்கண் | māṉkaḷikkaṇ n. A kind of wire; இருவட்டக்கம்பி. (யாழ். அக.) |
மான்கீரை | māṉ-kīrai n. Perh. மான்1+. A kind of pot-herb, Amarantus augustifolius; கீரைவகை. (மூ. அ.) |
மான்குளம்பு | māṉ-kuḷampu n. <>id.+. 1. Foot of a deer; மானின்பாதம். மான்குளம்பு அழுத்திய இடத்தையொத்த (பொருந. 4, உரை). 2. Hare-leaf. |
மான்கொடி | māṉ-koṭi n. Perh. id.+. A creeper; கொடிவகை. (யாழ். அக.) |
மான்கொம்பு | māṉ-kompu n. Perh. id.+. White-flowered trumpet tree. See பாதிரி1, 3. (L.) |
மான்சாரை | māṉ-cārai n. Perh. id.+. (L.) 1. Auricled leaved glabrous marking-nut, 1. tr., Semecarpus auriculata; நீண்டமரவகை. 2. A species of croton indigo, m. tr., Agrostistachys longifolia; |
மான்செவி | māṉ-cevi n. <>id.+. See மான்செவிக்கள்ளி. (W.) . |
மான்செவிக்கள்ளி | māṉcevi-k-kaḷḷi n. <>மான்செவி+. Five tubercled spurge. See இலைக்கள்ளி. (மலை.) |
மான்மகள் | māṉ-makaṉ n. <>மால்3+. 1. Brahmā; பிரமன். (சூடா.) 2. See மான்மைந்தன். மான்மகன்போல் வருதி ரைய (சிலப். 7, 28). |
மான்மதச்சாந்து | māṉmata-c-cāntu n. <>மான்மதம்+. See மான்மதச்சேறு. மான்மதச் சாந்தொடு வந்ததை (சிலப். 2, 68). . |
மான்மதச்சேறு | māṉmata-c-cēṟu n. <>id.+. Unguent of musk; கஸ்தூரியாற் செய்த வாசனைக் குழம்பு. (சிலப். 6, 81, உரை.) |
மான்மதம் | māṉ-matam n. <>மான்1+. 1. Musk; கஸ்தூரி. (திவா.) 2. Civet; |
மான்மறி | māṉ-maṟi n. <>id.+. 1. Fawn; மான்குட்டி. மான்மறி விழுந்தது கண்டு (மணி. 23, 115). 2. Doe; 3. Vaḷḷi-nāyaki, the wife of Skanda, as born of a doe; |
மான்மியம் | māṉmiyam n. <>māhātmya. 1. Glory greatness; மகிமை. 2. Treatise on the greatness of a sacred place; |
மான்முருகு | māṉ-muruku n. <>மால்3+. (சங். அக.) 1. Sacred basil; துளசி. 2. Blue vitriol; |
மான்மைத்துனன் | māṉ-maittuṉan n. <>id.+. (சங். அக.) 1. šiva; சிவபிரான். 2. See மான்குருகு, 2. |
மான்மைந்தன் | māṉ-maintaṉ n. <>id.+. Kāma, as the son of Viṣṇu; [திருமாலின் மைந்தன்] மன்மதன். (சூடா.) |
மான்றல் | māṉṟal n. <>மான்7-. Bewilder, ment; மயக்கம். (திவா.) மான்றறீர் மதியினான் (அரிசமய குலசே.129). |