Word |
English & Tamil Meaning |
---|---|
மானவாரி | māṉa-vāri n. <>மானம்3+வா-. 1. See மானவாரிநிலம். . 2. Cultivation, whether wet cr dry, dependent upon rain; 3. A kind of paddy that matures in the month of Tai; |
மானவாரிக்குளம் | māṉavāri-k-kuḷam n. <>மானவாரி+. Rain-fed tank; மழைபெய்து நிரம்பும் ஏரி. |
மானவாரிநிலம் | māṉavāri-nilam n. <>id.+. See மானம்பார்த்தபூமி. . |
மானவாரிப்பத்து | mānavāri-p-pattu n. <>id.+ பற்று. A method of collecting revenue of land under rain-fed tanks, whereby the Government takes one-half of the gross produce; மானவாரிக்குளத்து நீரால் விளையும் நிலங்களின் மொத்த மாசூலிற் பேர்பாதியைச் சர்க்கார் தீர்வையாகக் கைக்கொண்டு தண்டும் முறை. (R. T.) |
மானவாரிப்புன்செய் | māṉavāri-p-puṉcey n. <>id.+. Rain-fed dry land; மழைபெய்து விளையும் புன்செய் நிலம். |
மானவிறல்வேள் | māṉa-viṟal-vēḷ n. <>māna+. An ancient title of certain chiefs; முற்காலத்துச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர். மானவிறல்வே ளழும்பி லன்ன (மதுரைக். 344). மானவிறல்வேள் வயிரிய மெனினே (மலைபடு.164). |
மானவீனம் | māṉa-v-īṉam n. See மானகீனம். (W.) . |
மானவு | māṉavu n. Clearness; தெளிவு. (சது.) |
மானவெளி | māṉa-veḷi n. <>மானம்3+. Open space; வானவெளி. Loc. |
மானவேதியன் | māṉa-vētiyaṉ n. <>மானம்1+. One learned in the Vēdas; வேதங் கற்றவன். (W.) |
மானன் 1 | māṉaṉ n. <>id. 1. See மானி2, 1. (சங். அக.) . 2. Chief; |
மானன் 2 | māṉaṉ n. (யாழ். அக.) 1. Hunter; வேடன். 2. Dullard; |
மானஸ்தம்பம் | māṉa-stampam n. <>māna-stambha. (Jaina.) Pillars in the four quarters of Camavacaraṇam; சமவசரணத்தின் நான்கு திக்கிலும் உள்ள தூண்கள். (மேருமந்.1050, உரை.) |
மானா | māṉā n. (W.) 1. Grandfather; பாட்டன். 2. Father |
மானாகம் | māṉākam n. Cyrus crane. See பெருநாரை. (W.) |
மானாங்கணம் | māṉāṅkaṇam n. <>māna + aṅkaṇa. 1. (Jaina.) See மானஸ்தம்பம். மானாங்கணமுத லேழ்நிலத்துப் பொன்னின் சினாலயம் (திருநூற்.18) . 2. (Jaina.) The inner court of the camavacaraṇam; |
மானாங்காணி | māṉāṅkāṇi n. 1. Inconsiderateness, thoughtlessness; யோசனையின்மை. மானாங்காணியாய்ப் பேசுகிறான். Tinn. 2. Carelessness, disorderliness; |
மானாபரணன் | māṉāparaṇaṉ n. <>māna + ābharaṇa. One who holds honour as his ornament; மானத்தை அணியாக உடையவன். புவிகைக் கொண்டருள் மானாபரணா (தமிழ்நா.119). |
மானாமாரி | māṉāmāri n. See மானவாரி. . |
மானார் 1 | māṉār n. <>மான்1. Women; பெண்டிர். மட்டுப் படாக்கொங்கை மானார் கலவி மயக்கத்திலே (தனிப்பா. i, 149, 54). |
மானார் 2 | māṉār n. cf. மாணார். Enemies; பகைவர். (சங். அக.) |
மானாவாரி 1 | māṉavāri n. See மானவாரி. . |
மானாவாரி 2 | māṉavāri n. Prob. மனம் + வா-. 1. Whim, fancy; மனப்போக்கு. Loc. 2. Absolute or exclusive enjoyment; 3. Want of attention or care; |
மானாவி | māṉāvi n. <>mahā-navamī. [K. mānāmi.] 1. The Navarātri festival; நவராத்திரிவிழா மானாவி சமைப்பாரைப் போலே (ஈடு, 10, 9, 4). 2. See மானாவிச்சோலை. மானாவிபோலே ஆவதழிவதாம் விபூதி (திருவிருத். 66, வ்யா.) |
மானாவிச்சோலை | māṉāvi-c-cōlai n. <>மானாவி+. Pleasure grove, temporarily formed for the Navarātri festival; நவராத்திரி விழாவில் அமைக்கும் அலங்காரச் சோலை. மானாவிச் சோலைபோலே ஆவதழிவதான (ஈடு, 6, 9, 1). |
மானாள் | māṉāḷ n. <>மான்1. Woman; girl; பெண். ஒருத்தர்கிட்ட மானாளை விட்டேனோ (விறலி விடு.) |
மானி 1 - த்தல் | māṉi- 11 v. <>māna [ K. mānisu] 1. To be bashful; to become ashamed; நாணுதல். கூற்றமும் . . . மானித்தது (பு. வெ. 7, 25, உரை). 2. To be proud; To respect, honour, treat reverently; |