Word |
English & Tamil Meaning |
---|---|
மிக்கு | mikku adv. <>மிகு1-. [T. mikkili K. mikku.] See மிக. அச்ச மிக்குற்றுழியும் (சி.போ.பா.6, 1, பக்.120). . |
மிக்கோர் | mikkōr n. <>id. Wise men; அறிவுடையோர். (திவா.) |
மிக்கோன் | mikkōṉ n. <>id. Great person; பெரியோன். மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாக (நள. கலிநீங்கு.71). |
மிக | mika adv. <>id. [K. mige.] Very much; abundantly; மிகவும். மிகத்தாம் வருந்தியிருப்பரே (நாலடி, 31). |
மிகபடச்சொல்லல் | mika-paṭa-c-collal n. <>மிகைபடு-+. See மிகைபடக்கூறல். (யாழ். அக.) . |
மிகல் | mikal n. <>மிகு1-. [K. migil.] 1. Being plentiful or abundant ; மிகுகை. 2. Greatness; 3. Victory; 4. See மிகற்கை. |
மிகவு | mikavu n. See மிகுதி,1. தன் வலி மிகவின்கண் (குறள், 471, உரை). . |
மிகவும் | mikavum adv. <>மிக. See மிக. . |
மிகற்கை | mikaṟkai n. <>மிகல். (Gram.) Doubling, as of hard consonant; எழுத்து இரட்டிக்கை. இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் (தொ.எழுத்.157). |
மிகிரம் | mikiram n. <>mihira. (யாழ்.அக.) 1. Wind, air; காற்று. 2. Cloud; |
மிகிரன் | mikiraṉ n. <>mihira. (சங்.அக.) 1. Moon; சந்திரன். 2. Sun; |
மிகிராணன் | mikirāṇaṉ n. <>mihirāṇa. šiva; சிவபிரான். (யாழ்.அக.) |
மிகு - தல் | miku- 6. v. intr. [ K. migu.] 1. To exceed, surpass; to be in excess; அதிகமாதல். முந்திரிமேற் காணி மிகுவதேல் (நலடி, 346). 2. To grow, increase; 3. To swell; 4.(Gram.) To be doubled, as a letter; 5. To crowd; 6. To be great; to be excellent; 7. To be superior; 8. [T. migulu.] To remain; to be left over; to be superfluous; 9. To be self-conceited, arrogant; 10. To be evil; |
மிகு - த்தல் | miku- 11. v. tr. Caus. of மிகு1-. [K. migisu.] 1. To augment, make large; அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின் (குறள், 475). 2. To excel, surpass; 3. To increase; 4. To regard with pride; 5. See மிகுத்து-. |
மிகு | miku- <>மிகு1-. adj. Great; பெரிய.-part. A word of comparison; ஓர் உவம வுருபு. (தண்டி. 33.) |
மிகுகொடையாளன் | miku-koṭai-y-āḷaṉ n. <>மிகு1-+. Karṇa, as great in bounty; [தானத்திற் சிறந்தவன்] கர்ணன். (பிங்.) |
மிகுண்டம் | mikuṇṭam n. Purslaneleaved trianthema. See சாரணை. (சங். அக.) . |
மிகுத்தியல் | mikuttiyal n. Sacred bael. See வில்வம். (மூ.அ.) . |
மிகுத்து - தல் | mikuttu- 5 v. tr. Caus. of மிகு1-. To save, spare; to leave over; மிச்சப்படுத்துதல். |
மிகுத்துச்சொல்லல் | mikuttu-c-collal n. <>மிகுத்து- + சொல்-. 1. Making emphatic mention; அழுத்திக்கூறுகை. 2. Praise; appreciation; |
மிகுதம் | mikutam n. <>மிகு1-. Abundance; profusion; redundance; மிகுதி. (W.) |
மிகுதி | mikuti n. <>id. 1. Much, abundance; அதிகம். 2. See மிகற்கை. (தொல். எழுத். 411.) 3. Fulness, satiety; 4. Crowd; 5. Increase; 6. Excess, remainder, surplus; 7. Excellence; 8. Arrogance; |
மிகுதிக்குறைமை | mikuti-k-kuṟaimai n. <>மிகுதி+. Excess or deficiency; மிகுவதும் குறைவதும். மிகுதிக் குறைமையும் (S. I. I. ii, 425). |
மிகுதிச்சொல் | mikuti-c-col n. <>id.+. Vaunt, boast; வரம்புகடந்த சொல். விழுமியோ ரெக்காலுஞ் சொல்லார் மிகுதிச் சொல் (நாலடி, 346). |
மிகுதியாய் | mikuti-y-āy adv. <>id.+. See மிகுதியும். . |
மிகுதியும் | mikutiyum adv. <>id. 1. Greatly, exceedingly; மிகவும். (W.) 2. Usually, generally; |
மிகுந்த | mikunta adj. <>மிகு1-. 1. Much, great, excessive; அதிகமான, மிகுந்த ஜனங்கள் வந்திருந்தனர். 2. Remaining; |