Word |
English & Tamil Meaning |
---|---|
மிச்சிரம் | micciram n. <>mišra. See மிசிரம், 1, 2. அசுத்தம் மிச்சிரம் சுத்தமெனப்படும் போகங்களை (சி. போ. பா. 2, 2, பக். 66, சுவாமிநா.) . |
மிச்சில் | miccil n. <>மிஞ்சு-. 1.Remainder; எஞ்சியபொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23). 2. Leavings, what is left after a meal; 3. Charcoal, as the remains of fire; |
மிச்சில்சீப்பவர் | miccil-cīppavar n. <>மிச்சில்+. Servants who remove the leaves, plates, etc., and clean the floor, after a meal; எச்சிலிலை முதலியனவெடுத்துத் தலசுத்தி செய்வோர். மிச்சில் சீப்பவர் (சீவக. 832). |
மிச்சு | miccu n. <>Pāli miccha <> mithyā. See மித்தியாத்துவம், 2. அனாதிமிச்சுவசமத்தால் (மேருமந். 711). . |
மிச்சை 1 | miccai n. <>id. 1. See மிச்சம்2, 1. (பிங்.) . 2. Ignorance; 3. Poverty; |
மிச்சை 2 | miccai n. <>இலாமிச்சை. Cus-cus-grass. See இலாமிச்சை. (தைலவ. தைல.) |
மிசரி | micari n. <>Arab. misr. Salep, tuber of Eutophia, as from Egypt; ஒருவகைக் கிழங்கு. (பதார்த்த.786.) |
மிசல் | mical n. <>U. misl. 1. Entry; தாக்கல். (W.) 2. Examination, trial; 3. Appointment; 4. Similitude; |
மிசல்கர்ணம் | mical-karṇam n. <>மிசல்+. Principal or regularly appointed accountant of a village; தலைமைக் கணக்கன் அல்லது சரியாய் நியமனம் பெற்ற கணக்கன். (C. G.) |
மிசல்தீர்வை | mical-tīrvai n. <>id.+. Assessment on a field made at the same rate as that of adjacent lands; பக்க நிலங்கட்கு அமைந்த தீர்வையை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட தீர்வை. (W. G.) |
மிசல்பந்தி | mical-panti n. <>id.+. Register of the names of persons holding the village offices in each village; ஒவ்வொரு கிராமத்திலும் கிராமவேலைக்காரரின் பெயர்களைப் பதிவு செய்திருக்கும் புஸ்தகம். (C. G.) |
மிசி | mici n. perh. miši. (தைலவ. தைல.) 1. Dill. See சதகுப்பை. . 2. East Indian plum. See தாளிசபத்திரி. |
மிசிகம் | micikam n. cf. வன்மீகம். Snakehole; பாம்புவளை. (சங். அக.) |
மிசிர்தேசம் | micir-tēcam n. <>Arab. mišr+. Egypt; எகிப்துதேசம். |
மிசிரசாதி | micira-cāti n. <>mišra-jāti. 1. (Mus.) A sub-division of time-measure consisting of seven akṣara-kālam, one of five cāti, q.v.; சாதியைந்தனு ளொன்றாய் ஏழு அட்சரகாலங் கொண்ட தாளகாலவகை. (பரத. தாள. 47, உரை.) 2. Mixed caste; |
மிசிரப்பிரபஞ்சம் | micira-p-pirapacam n. <>mišra-prapaca. (šaiva.) Region of Pure and Impure Māyā; சுத்தாசுத்த மாயாபிரபஞ்சம். (சி. போ. பா. 2, 4, பக். 223.) |
மிசிரம் | miciram n. <>mišra. 1. Mixing; கலப்பு. 2. Mixture; 3. See மிசிரசாதி, 1. (பரத. தாள. 47.) |
மிசிரவர்ணம் | micira-varṇam n. <>id.+. 1. Mixed class or tribe; சங்கரசாதி. (W.) 2. Mixed colour; |
மிசிரவழி | micira-vaḻi n. <>id.+. A mode of inheritance which shares the features of both makkaṭṭāyam and marumakkaṭṭāyam; மக்கட்டாயம், மருமக்கட்டாயம் என்ற இருவகையையும் ஒருசார் ஒத்திருக்கும் தாயக்கிரமம். Nā. |
மிசிரன் | miciraṉ n. <>mišra. A honorific title affixed to names of great men and scholars; கல்வி முதலியவற்றால் உயர்ந்தவருக்கு வழங்கும் பட்டப்பெயர். பட்டபாணமிசிரன். (W.) |
மிசுக்கன் | micukkaṉ n. perh. பிசுக்கு-. (யாழ். அக.) 1. Vile or worthless person ; ஈனன். 2. Poor man; |
மிசுக்கு | micukku n. Computation ; கணக்கு. புள்ளிமிசுக்கு, ஒப்படிமிசுக்கு |
மிசுக்கை | micukkai n. cf. பிசுக்கு. Trifle, vile or worthless thing; அற்பமானது. (W.) |
மிசுரன் | micuraṉ n. See மிசிரன். (W.) . |
மிசை 1 - தல் | micai- 4 v. tr. 1. To eat a meal; உண்ணுதல். விருந்தோம்பி மிச்சின் மிசைவான் (குறள், 85). 2. To taste, enjoy, experience; |
மிசை 2 | micai n. <>மிசை-. 1. Food; உணவு. அரிப்பறை வினைஞ ரல்குமிசைக் கூட்டும் (ஐங்குறு. 81). 2. Boiled rice; |
மிசை 3 | micai n. cf. மீது. 1. Eminence, elevation; உயர்ச்சி. (சூடா.) 2. Elevated place; 3. Hill; mound; 4. Sky; 5. Front; |