Word |
English & Tamil Meaning |
---|---|
மிசைஞர் | micaiar n. <>மிசை-. Eaters; உண்பவர். இரும்பிண மிசைஞரின் (ஞானா. 17, 31). |
மிசைத்திரள் | micai-t-tiraḷ n. <>மிசை3+. Ankles; காற்கரடு. (பிங்.) |
மிசைபாடும்புள் | micai-pāṭum-puḷ n. <>id.+ பாடு-+. The Indian skylark; வானம்பாடி. துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின் (கலித். 46). |
மிசைவடம் | micai-vaṭam n. <>id.+. Warrior's ankle-ring; வீரக்கழல். (W.) |
மிசைவு | micaivu n. <>மிசை-. 1.Eating; உண்கை. 2. Food; |
மிஞ்சி 1 | miṉci n. [K. miṉcu.] Ring worn on the ring-finger or the second toe; கையில் மோதிரவிரலிலும் காலில் இரண்டாவது விரலிலும் அணியும் மோதிரவகை. கால் மிஞ்சிக்காரன் பின்போனாள் (தனிப்பா. ii,138, 351). |
மிஞ்சி 2 | mici n. <>maujī. Waist-cord made of muja grass; மௌஞ்சி. Colloq. |
மிஞ்சிகம் | miṅcikam n. Lock of women's hair; பெண்பான் மயிர்முடி. (பிங்.) |
மிஞ்சிகை | micikai n. 1.A kind of earring; குண்டலம். (அக. நி.) 2. cf. மஞ்சிகை. Box; |
மிஞ்சிப்போ - தல் | mici-p-pō- v. intr. <>மிஞ்சு-+. To exceed limits; to go too far; கைகடந்து போதல். அவர் காரியம் மிஞ்சிப்போய் விட்டது. Colloq. |
மிஞ்சினவன் | miciṉavaṉ n. <>மிஞ்சு-. 1. Perverse, unmanageable man; அடங்காதவன். (W.) 2. One who is pre-eminent; |
மிஞ்சு 1 - தல் | micu- 5 v. [T.K. micu.] tr. To exceed, surpass, transgress; வரம்பு மீறுதல். Colloq.-intr. 1. To increase; 2. To become proud; to be elevated; |
மிஞ்சு 2 | micu n. <>மிஞ்சு-. 1. Excess; மீகுவது. (அக. நி.) 2. cf மிஞிறு. Beetle; |
மிஞிறு | miiṟu n. <>ஞிமிறு. 1. Beetle; வண்டு. (திவா.) 2. Honey bee; |
மிட்டா | miṭṭā n. <>Hind. miṭṭhā. 1. Sub-division of a district; நாட்டின் உட்பகுதி வட்டம். 2. Estate, zamin; 3. Experience, enjoyment; 4. Possession; 5. Right; |
மிட்டாதார் | miṭṭā-tār n. <>id+dhār. Male proprietor of a miṭṭā; மிட்டாவுக்கு உரியவன். |
மிட்டாதார்னி | miṭṭā-tārṉi n. <>id.+dhariṇī. Female proprietor of a miṭṭā; மிட்டாவுக்கு உரியவள். (C. G.) |
மிட்டாதாரி | miṭṭā-tāri n. <>id.+dhārin. That which belongs to a miṭṭātār; மிட்டாதாருக்குரியது. (R. T.) |
மிட்டாய் | miṭṭāy n. <>Arab. mītāyi. Sweetmeat; பண்ணிகாரவகை. |
மிட்டாய்க்காரன் | miṭṭāy-k-karaṉ n. <>மிட்டாய்+. Confectioner, dealer in sweetmeats; மிட்டாய் விற்பவன். |
மிட்டாயி | miṭṭāyi n. See மிட்டாய். (W.) . |
மிடல் | miṭal n. 1. Strength; வலி. மிடல்புக்கடங்காத வெம்முலையோ பாரம் (சிலப். 7, 17). 2. See மிடன், 2, 3. (அரு. நி.) |
மிடற்றுக்கருவி | miṭaṟṟu-k-karuvi n. <>மிடறு+. Throat, considered, a musical instrument; சாரீரக் கருவியாகிய கண்டம். (தக்க யாகப். 638, விசேடக்குறிப்பு.) |
மிடற்றுநோவு | miṭaṟṟu-nōvu n. <>id.+. Laryngitis; தொண்டைவலி. (M. L.) |
மிடறு | miṭaṟu n. perh. மிழறு-. [M. midaru.] 1. Neck; கழுத்து. கறைமிட றணியலு மணிந்தன்று (புறநா. 1). 2. Trachea, windpipe; 3. Throat; 4. (Mus.) See மிடற்றுக்கருவி. நரம்பு நம்பியூழ் மணிமிடறு மொன்றாய் (சீவக. 728). 5. Lower jaw; 6. Draught, a quantity of liquid taken at one swallow; |
மிடன் | miṭaṉ n. cf. மிடல். (அக. நி.) 1. See மிடல், 1. . 2. cf. mrdāṅkaṇa. Son; 3. cf. mrdāṅka. Moon; |
மிடா | miṭā n. perh. மடு-. [M. midavu.] 1. Large earthen vessel; தடா. சோறு செப்பினாயிரம் மிடா (சீவக. 692). (பிங்.) 2. Pot; |
மிடாச்சு | miṭāccu n. Tripterocarp dammar. See குங்கிலியம், 1. (சங். அக.) . |