Word |
English & Tamil Meaning |
---|---|
மிடாத்தவளை | miṭā-t-tavaḷai n. <>மிடா+. Bull frog, Ranatigrina; பெருந்தவளை. (M. M. 90.) |
மிடி | miṭi n. 1. Poverty, want; வறுமை. (சூடா.) 2. Affliction; |
மிடி - த்தல் | miṭi- 11 v. intr. <>மிடி. 1. To be poverty-stricken, destitute; வறுமையுறுதல். மிடித்தார்க்குச் சுற்றமின்றா யிருந்தது (சீவக. 2335, உரை). 2. To be scanty; |
மிடிமை | miṭimai n. <>id. Poverty, want; வறுமை. (யாழ். அக.) |
மிடியன் | miṭiyaṉ n. <>id. Poor, indigent person; தரித்திரன். (சூடா.) அமுதினை மிடியன் மேவியே யுண்டனனென (பிரபுலிங். மருள. 5). |
மிடிவு | miṭivu n. <>மிடி-. See மிடிமை. (யாழ். அக.) . |
மிடுக்கன் | miṭukkaṉ n. <>மிடுக்கு. 1.Strong, powerful man; வலியுடையோன். 2. Rough, coarse person; 3. Proud conceited man; 4. Coarseness; |
மிடுக்கு | miṭukku n. [T. K. miduru M. midukku.] 1. Strength; வலிமை. மிடுக்கிலாதானை ல¦மனே . . . என்று (தேவா. 647, 2). 2. Pride; stiffness of manners; |
மிடுமிடு - த்தல் | miṭu-miṭu- 11 v. intr. <>மிடுமிடெனல். To hasten; விரைதல். (யாழ். அக.) |
மிடுமிடுப்பு | miṭu-miṭuppu n. <>மிடுமிடு-. Haste; விரைவு. (யாழ். அக.) |
மிடுமிடெனல் | miṭu-miṭeṉal n. Onom. expr. of haste; விரைவுக்குறிப்பு. (யாழ். அக.) |
மிடை 1 - தல் | miṭai- 4 v. intr. [O. K. midugu.] 1. To be close set or crowded; செறிதல். வேன்மிடைந்த வேலியும் பிளந்து (சீவக. 279). 2. To be full; 3. To be mixed, mingled; 4. To b distressed; 1. To set closely; to crowd; 2. To weave, as mat, etc.; 3. To increase; |
மிடை 2 | miṭai- n. <>மிடை-. 1. Platform for watching, loft in a corn-field; பரண். நல்லவர் கொண்டார் மிடை (கலித. 103). 2. Sexual union; 3. Bush, small shrub; |
மிண்டன் | miṇṭaṉ n. <>மிண்டு-. 1. Strong man; திண்ணியோன். (சூடா.) 2. Ignoramus; |
மிண்டி | miṇṭi n. <>id. [K. miṇdu.] Staff or post used as a lever; நெம்புதடி. (யாழ். அக.) |
மிண்டிபோடு - தல் | miṇṭi-pōṭu- v. tr. <>மிண்டி+. To raise by a lever; to break up; நெம்புதடியா லெடுத்தல். (யாழ். அக.) |
மிண்டு - தல் | miṇṭu- 5 v. intr. 1. To throng; நெருங்குதல். பொதும்பிடை வரிவண்டு மிண்டி (திவ். பெரியதி. 4, 10, 2). 2. To be full; 3. To be hard; 4. To be exultant, vain; 5. To join battle; 1. To try, lift, as with a lever; 2. To thrust; to uproot; 3. To talk harshly or arrogantly; 4. To push; to force forward; |
மிண்டு | miṇṭu n. <>மிண்டு-. 1. Strength; வலிமை. விரலூன்றி மிண்டது தீர்த்த (தேவா. 510, 8). 2. Prop, support; 3. Bravery, courage; 4. Wilful fault, crime; 5. Mischief; 6. Vulgar talk; vulgarity; 7. Presumptuous speech; |
மிண்டை | miṇṭai n. perh. மிண்டு-. Apple of the eye; கண்ணின் கருவிழி. விழித்திருக்க மிண்டையைக் கொள்வான் (கலித்.108, உரை.) |
மிணறு | miṇaṟu n. <>மிடறு. See மிடறு, 6, (W.) . |
மிணுமிணு - த்தல் | miṇu-miṇu- 11 v intr. 1. To mumble, speak with a low reiterated sound; வாய்க்குள் தானே சொல்லுதல் தீமுகந்தனில் வாய்மிணுமிணுத்து நெய்சிந்தி (பிரபோத. 10, 8). 2. To murmur, as a secret; 3. To utter incantations; |