Word |
English & Tamil Meaning |
---|---|
மிதிகீரை | miti-kīrai n. A plant, Asystasia coromandelina; பூடுவகை. Loc. |
மிதிகோரை | miti-kōrai n. A kind of sedge; கோரைவகை. (W.) |
மிதிதோல் | miti-tōl n. <>மிதி-+. Bellows; துருத்தி. உலைவாங்கு மிதிதோல் (குறுந்.172). |
மிதிபட்டடை | miti-paṭṭaṭai n. <>id.+. See மிதிபலகை. (யாழ். அக.) . |
மிதிபயறு | miti-payaṟu n. <>id.+. Seeds of pulse sometimes sown in paddy-fields just before harvest and maturing after harvest, as being trampled upon by reapers; வயலிற் கதிரறுக்குமுன் விதைக்கப்பட்டு அறுவடையானபின் விளைந்துமுதிரும் பயறுவகை. Nā. |
மிதிபலகை | miti-palakai n. <>id.+. Foot-stool; பாதம்வைக்கும் படிப்பலகை. (W.) |
மிதிபாகல் | miti-pākal n. Small balsampear, Momordica charantia, dist. fr. kompu-p-pākal; பாகல்வகை. (பதார்த்த. 711, தலைப்பு.) |
மிதிமரம் | miti-maram n. <>மிதி-+. 1. Step-board; படியாயுள்ள பலகை. 2. Treadle of a loom; 3. Tread in a well for one to stand on, when baling; 4. See மிதிபலகை. (யாழ். அக.) |
மிதியடி | miti-y-aṭi n. <>id.+. 1. Wooden sandals; பாதுகை. (திவா.) திருவடியின் மிதியடியும் (கோயிற்பு. பதஞ். 11). 2. Common slippers; |
மிதியடிக்கொட்டை | mitiyaṭi-k-koṭṭai n. <>மிதியடி+. Knob in sandals; பாதுகைக் குமிழ். (பிங்.) |
மிதியல் | mitiyal n. <>மிதி-. Treading; மிதிக்கை. (யாழ். அக.) |
மிதியிடு - தல் | miti-y-iṭu- v. <>மிதி2+. intr. To make a track or impression by one's foot; அடியாற் குறிசெய்தல். To tread under foot;ṟ |
மிதிலை | mitilai n. <>Mithilā. 1. The capital of vidēha; விதேகதேசத்தின் தலைநகர். பொன்மதின் மிதிலை புக்கார் (கம்பரா. மிதிலைக். 5). 2. The ancient realm of Mithilā, now identified with Champaran and Darbhanga distric'.s; |
மிதிலைநாடி | mitilai-nāṭi n. <>மிதிலை+. Sitā, as born in the country of Mithilā; சீதை. மிதிலை நாடியை (கம்பரா. பிணிவீட். 21). |
மிதிவண்டி | miti-vaṇṭi n. <>மிதி-+. Bicycle, as being propelled by pedalling; [மிதித்துத் தள்ளி யோட்டப்படும் வண்டி] சைக்கிள் வண்டி. Mod. |
மிதுக்கை | mitukkai n. Country cucumber. See தும்மட்டி, 1. (மலை.) . |
மிதுரி | mituri n. Crested purple nail dye; வெள்ளைநீலாம்பரம். (சங். அக.) |
மிதுனம் | mituṉam n. <>mithuna. 1. Couple, pair; இரட்டை. 2. Gemini of the zodiac; 3. The third solar month. See ஆனி. 4. Male and female; 5. A sweet-voiced bird credited with musical powers, as inseparable fom its mate; 6. cf. maithuna. Union, copulation; |
மிதுனவிதி | mituṉa-vīti n. <>மிதுனம்+. (Astron.) The third section of the zodiac, embracing the four signs of Scorpio, Sagittarius, Capricornus and Aquarius; விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி. (பிங்) இடபவீதி மிதுனவீதி மேடவீதியென வகுக்கப்பட்டு (பரிபா. 11, 2, உரை). |
மிதுனன் | mituṉan n. <>id. The planet mercury, as lord of the sign gemini; [மிதுனராசிக்குடையவன்] புதன். (நாமதீப. 99.) |
மிதுனி | mituṉi n. King-crow. See கரிக்குருவி. (சங். அக.) . |
மிந்தாச்சொல் | mintāccol n. Rocksalt; இந்துப்பு. (சு. வை. ர. 125.) |
மியா | miyā part. A suffix added to verbs in second person, imperative mood; ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.) |
மியூல் | miyūl n. A plant; பூடுவகை. (யாழ். அக.) |
மியூலசீவி | miyūla-cīvi n. <>மீயூல்+. See மியூல். (சங். அக.) . |
மிரட்சி | miraṭci n. perh. மிரள்-. A class of bull; மாட்டுவகை. (அபி. சிந்.) |
மிரட்டிவாங்கு - தல் | miraṭṭi-vāṅku- v. tr. <>மிரட்டு-+. To extort; அச்சுறுத்திக் கைப்பற்றுதல். (C. G.) |
மிரட்டினி | miraṭṭini n. perh. id. Magic powder; சொக்குப்பொடி. (சங். அக.) |