Word |
English & Tamil Meaning |
---|---|
மிருதூற்பலம் | mirutūṟpalam n. <>mrdūtpala. Blue Indian water-lily. See கருநெய்தல். (மலை.) |
மிருதை | mirutai n. <>mrdā. Earth; பூமி. (யாழ். அக.) |
மிருதோற்பவம் | mirutōṟpavam n. <>mrtōdbhava. Sea; கடல். (யாழ். அக.) |
மிருநாளம் | mirunāḷam n. <>mrṇāḷa. 1. Stalk of the lotus; தாமரைத்தண்டு. 2. Cuscus grass. |
மிருமணி | mirumaṇi n. A parasitic plant growing on walls. See சுவர்முள்ளங்கி. (சங். அக.) |
மிருஷ்டான்னம் | miruṣṭāṉṉam n. <>mrṣṭānna. Rich food; நல்லுணவு. Brāh. |
மில்க் | milk n. <>U. milk. Property; சொத்து. (C. G.) |
மில்கியத் | milkiyat n. <>U. milkiyat. Proprietary right; சொத்துரிமை. (C. G.) |
மில்கியத்இஸ்திமிரார் | milkiyat-istimirār n. <>U. milkiat-i-istimirār. Proprietary right in perpetuity; சாசுவதச் சொத்துரிமை. (C. G.) |
மில்டேரி | milṭēri n. <>E. military. 1. That which is military; யுத்தப்படைக்கு உரியது. 2. Ostentation; 3. Gruffness; |
மில்டேரிசாப்பாடு | milṭēri-cāppāṭu n. <>மில்டேரி+. Non-vegetarian food; மாமிசத்தோடு பரிமாறும் உணவு. Colloq. |
மிலாங்கிலி | milāṅkili n. 1. cf. pacāṅguḷi. 1. Red species of Malabar glory-lily. See செங்காந்தள். (மலை.) 2. Sweet basil. |
மிலாடு | milāṭu n. <>மலாடு. Country of Malaiyamāṉ; மலையமானது நாடு. (1. M. P. S. A. 525.) |
மிலாந்தி | milānti n. <>மிலாந்து-. One who stares or gazes; வெறித்துப் பார்ப்போன். (J.) |
மிலாந்து - தல் | milāntu- 5. v. intr. cf. bhrānta. To gaze, stare; to look ghastly, as dying persons; வெறித்துப் பார்த்தல். (J.) |
மிலாம் | milām n. n. Corr. of மலாம். Loc. . |
மிலாரடி | milāraṭi n. <>மலாரடி (W.) 1. Perturbation; dilemma; கலக்கம். 2. Unfeelingness, stupor, stupefaction; |
மிலாறு | milāṟu n. cf. வளாறு. Twig, switch; விளாறு. (C. G.) |
மிலிந்தம் | milintam n. <>milinda. Bee; வண்டு. (சங். அக.) |
மிலேச்சகந்தம் | milēcca-kantam n. <>mlēccha-kanda. White onion; வெள்ளை வெங்காயம். (மலை.) |
மிலேச்சத்தனம் | milēcca-t-taṉam n. <>மிலேச்சம்+. Barbarism; அநாகரிகம். |
மிலேச்சம் | milēccam n. <>mlēccha. 1. Non-Aryan country situate on the northern bank of Sarasvatī; சரசுவதிநதியின் வடகரையில் உள்ள அனாரியர் வசிக்கும் தேசம். (சது.) 2. See மிலேச்சமுகம். (தைலவ. தைல.) |
மிலேச்சமண்டலம் | milēcca-maṇṭalam n. <>id.+ See மிலேச்சம், 1. (யாழ். அக.) . |
மிலேச்சமுகம் | milēcca-mukam n. mlēccha-mukha. Copper; செம்பு. (யாழ். அக.) |
மிலேச்சன் | milēccaṉ n. <>mlēccha. 1. Barbarian, uncivilised foreigner; நாகரிகமற்ற புறநாட்டான். மிலேச்ச ரேறலின் (சீவக. 2216). 2. Person speaking barbarous language; 3. Non-Aryan; 4. Ignoramus; 5. Hunter; 6. Low person; 7. Son born of the illegitimate union of a Vaišya mand and Brahmin woman; 8. Aryan; |
மிலேச்சாசம் | milēccācam n. <>mlēcchāša. Wheat; கோதுமை. (மலை.) |
மிலேச்சாசியம் | milēccāciyam n. <>mlēcchāsya. See மிலேச்சமுகம். (யாழ். அக.) . |
மிலேச்சிதம் | milēccitam n. <>mlēcchita. (யாழ். அக.) 1. Ungrammatical speech; இலக்கண வழுவான பேச்சு. 2. Non-Sanskritic language; |
மிலை - தல் | milai- 4 v. tr. <>மலை1-. cf. mil. To put on, wear; சூடுதல். உழிஞைப் பவரொடு மிலைந்து (புறநா. 77). |
மிலை - த்தல் | milai- 11 v. intr. <>மலை2-. To be bewildered; மயங்குதல். மிலைத்தலைந்தேனை (திருவாச. 6, 40). 2. To low, as a cow; |