Word |
English & Tamil Meaning |
---|---|
மிறுதாரசிங்கி | miṟutāraciṅki n. See மிருதாரசிங்கி. . |
மிறுது | miṟutu n. See மிருது. (சங். அக.) . |
மிறை 1 - த்தல் | miṟai- 11 v. tr. To oppress, harass; துன்புறுத்துதல். மிறைத்தார் புரமெய்த வில்லிமை (பதினொ. திருவே. தி. 59). --intr. 1. cf. விறை-. To become stiff, as a limb; 2. To be stuck up with pride; to be stiff in manners; 3. To suffer; to be afflicted; 4. To labour hard; |
மிறை 2 | miṟai n. <>மிறை-. [T. mera.] 1. Fear; அச்சம். (திவா.) 2. Fault , defect; 3. Trouble; 4. Torment; 5. cf. இறை. Tax; 6. Bend, curve; |
மிறைக்கவி | miṟai-k-kavi n. <>மிறை+. A variety of metrical composition. See சித்திரகவி. (திவா.) . |
மிறைக்கொளிதிருத்து - தல் | miṟai-k-koḷi-tiruttu- v. tr. <>id.+ கொள்-+ திருத்து-. To straighten out, as a bent weapon; ஆயுதத்தை வளைவு நீக்குதல். மிறைக்கொளி திருத்துவார் (சீவக.2293) . |
மிறைக்கொளுவு - தல் | miṟai-k-koḷuvu- v. tr. <>id.+. See மிறைக்கொளிதிருத்து-. ஏஃக மிறைக்கொளீஇ (பு. வெ. 8, 21). . |
மின் 1 | miṉ n. <> மின்னு-. [T. minuku K. minu M. min.] 1. Flash, glitter; ஒளி. (சூடா.) மின்மின்கொள் கவசம் (கம்பரா. நிகும்பலை. 84). 2. Lightning; |
மின் 2 | miṉ part. A verbal suffix of the imperative plural; முன்னிலையேவற்பன்மை விகுதியுளொன்று. (தொல்.சொல்.224.) |
மின்சாரக்கம்பி | miṉcāra-k-kampi n. <> மின்சாரம்+. Electric wire; மின்சாரசக்தி செல்லுங் கம்பி. (W.) |
மின்சாரம் | miṉ-cāram n. <>மின்1+. Electricity; பொருளணுக்களின் சலனத்தால் ஏற்படும் ஒருவகைச் சக்தி. (W.) |
மின்சாரயந்திரம் | miṉcāra-yantiram n. <>மின்சாரம்+. Electric machine or generator; மின்சாரத்தை யுண்டாக்கும் இயந்திரம். Mod. |
மின்சாரவண்டி | miṉcāra-vaṇti n. <>id.+. Electric tram or train; மின்சாரத்தால் இயங்கும் வண்டி. Mod. |
மின்சாரவிளக்கு | miṉcāra-viḷakku n. <>id.+. Electric light; மின்சாரத்தால் ஒளிதரும் விளக்கு. Mod. |
மின்மினி | miṉmiṉi n. <>மினுமினு-. Firefly; ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி. மதியாதவன்கதிர் மின்மினிபோலொளிர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 20). |
மின்மினிநெல் | miṉmiṉi-nel n. A kind of paddy; நெல்வகை. (பெரும்பாண். 305, உரை.) |
மின்மினிப்பூச்சி | miṉmiṉi-p-pūcci n. <>மின்மினி+. [K. micubuḷa.] See மின்மினி. Colloq. . |
மின்மினிபற - த்தல் | miṉmiṉi-paṟa- v. intr. <>id.+. To grow dim; to be dazed, as the eye; ஒளிமிகுதியாற் கண்ணொளி மழுங்குதல். மின்மினி பறவாநின்றது காணும் (ஈடு, 3, 7, 4). |
மின்வெட்டு | miṉ-veṭṭu n. <>மின்+. See மின்னொழுக்கு. Loc. . |
மின்னல் | miṉṉal n. <>மின்னு- 1. Lightning; மழைமேகத்தில் தோன்றும் மின்னொளி. (சூடா.) 2. Bright coin; |
மின்னலி - த்தல் | miṉṉali- 11 v. intr. <>மின்னல். To flash, as lightning; மின்னுதல். மின்னலிக்கும் வணக்கத் திடையாளையும் (பதினொ.திருவேகம்.திருவந்.74) . |
மின்னற்கொடி | miṉṉar-koṭi n. <>id.+. Streak of lightning; மின்னலின் ஒளிக்கொடி. (சூளா.தூது.11) |
மின்னற்றழுக்கு | miṉṉaṟṟaḻukku n. Lead ore; நாகமணல். (யாழ்.அக) |
மின்னாம்பூச்சி | miṉ-ṉ-ām-pūci n. <>மின்1+ஆ-+. See மின்மினி. Loc. . |
மின்னார் | miṉṉār n. <>id. Women with dazzling beauty; அழகிய பெண்டிர். மின்னார்களின்பமே மெய்யென்றும் (தாயு.மௌன.4) |
மின்னி | miṉṉi n. prob. மின்னு-. (மலை.) 1. Mussell-shell creeper. See கருங்காக்கணம். . 2. A leguminous plant; |
மின்னிடை | miṉ-ṉ-iṭai n. <>மின்1-. Woman, as having as waist like a streak of lightning; (மின்போன்ற இடையை யுடையவள்); பெண். (நிகண்டு) |