Word |
English & Tamil Meaning |
---|---|
மீட்சி 1 | mīṭci n. <>மீள்1-. Turning; returning; திரும்புகை. மீட்சியுங் மேவுமடமைத்தே (பரிபா.19, 65) |
மீட்சி 2 | miṭci n. <>மீள்-. 1. Bringing back, causing to return; திருப்புகை. 2. Releasing, redeeming; 3.(Log.) Law of elimination. See பாரி சேடப்பிரமாணம். மீட்சி யென்ப திராமன்வென் றானென மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல் (மணி. 27, 53). 4. Recompense; |
மீட்டிடம் | mīṭṭiṭam n. <>id.+இடம். Place of return; மீட்டற்கு உரிய இடம். மீட்டிடம் பெற்றுக் கூட்டிடங் கூடி (பெருங். உஞ்சைக். 57, 75). |
மீட்டு - தல் | mīṭṭu- 5 v. tr. Caus. of மீள1¢-. [T. K. mīṭu.] 1. To cause to return; மீளச்செய்தல். போனவனை மீட்டிக்கொண்டுவந்தான். 2. To redeem, as mortgaged property; 3. To save; 4. To fillip the strings of lute, etc.; 5. To play on the lute; 6. To fasten the string of a bow; 7. To take a handful of; |
மீட்டு | mīṭṭu adv. <>மீள்1-. Again further; திரும்ப. சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு (நாலடி, 70) |
மீட்டும் | mīṭṭum adv. See மீட்டு. ¢மீட்டு மினி யெண்ணும் வினை (கம்பரா. பொழிலிறு. 5) . |
மீட்டுமுறி | mīṭṭu-muṟi n. <>மீட்டு-+. Redemption deed; ஒத்தியுரிமை நீங்கியதைக் குறிக்கும் பத்திரம். Nā. |
மீட்டெடு - த்தல் | mīṭṭeṭu- v. <>id.+. எடு-. (யாழ். அக.) tr. 1. To redeem, rescure, save; இரட்சித்தல். 2. To take out superficially; 3. To chew the cud; |
மீட்டர் | mīṭpar n. <>மீள்2-. Saviour, redeemer; இரட்சகர். Chr. |
மீட்பு | mīṭpu n. <>id. Releasing, redemption, salvation; மீட்கை. (யாழ். அக.) |
மீடம் | mīṭam n. <>mīdha. Urine; மூத்திரம். (சங். அக.) |
மீண்டு | mīṇṭu adv. <>மீள்1-. See மீட்டு மீண்டு வாராவழி யருள்புரிபவன் (திருவாச. 2, 117). . |
மீண்டும் | mīṇṭum; adv. See மீண்டு. மீண்டும் பீடுயர் பீண்டி (பரிபா. 2, 11). . |
மீத்துவை - த்தல் | mīttu-vai- v. tr. <>மிகு2+. To lay by; மிச்சப்படுத்துதல். Co¢lloq. |
மீத்தோல் | mī-t-tōl n. <>மீ2+. See மீத்தோல். (நன். 178, உரை.) . |
மீதாட்சி | mītāṭci n. <>மீது+. See மீயாட்சி. காராண்மை மீதாட்சி உள்ளடங்க. (T. A. S. i, 6, 14) . |
மீதாடு - தல் | mītāṭu- v. intr. <>id.+ஆடு-. To transcend, go beyond; கடந்துசெல்லுதல். வெற்றிக்கருளக் கொடியான்றன் மீமீதாடா வுலகத்து (திவ்.நாய்ச்.13, 7) |
மீதாரி | mītāri n. prob. id+ஆர்-. 1. That which remains; remainder; மிச்சம். உன்னிடத்து ஏதேனும் மீதாரியிருக்கிறதா? 2. cf. சிதாரி. Incense composed of various substances; |
மீதி 1 | mīti n. 1. Hedge caper; See காட்டுக்கதிர். (மலை.) . 2. Strychnine tree. See எட்டி . (சங். அக.) |
மீதி 2 | mīti n. <>மிகுதி. Remainder, that which is left; மிச்சம். Colloq. |
மீதிடல் | mītiṭal n. <>மீது+. Growth; வளர்கை. (இலக்.அக) |
மீது | mītu <>மீ. n. 1. Top, outer or upper surface; மேற்புரம் 2. Elevated place; 3. On, upon; 4. Over, over-much; |
மீதுந்து | mītuntu n. Emblic myrobalan. See நெல்லி. (மலை.) . |
மீதுபொலி | mītu-poli n. See மீசுபொலி. . |
மீதுரை | mīturai n. <>மீது+உரை-. Repetition, tautology; பலகால்விளம்பல். (சூடா.) |
மீதூர் - தல் | mītūr- v. <>id.+ஊர்-. intr. 1. To increase; to come crowded; மேன்மேல் வருதல். துன்பமே மீதூரக் கண்டும் (நாலடி, 60). 2. To press hard; To subdue; |
மீதோல் | mī-tōl n. See மீந்தோல். மீதோ லெங்கு மினுக்கிகள் (திருப்பு. 623). . |
மீந்தது | mīntatu n. <>மிகு1-. See மீதி2. . |
மீந்தோல் | mī-n-tōl n. <>மீ2+. Epidermis, superficial skin; மேற்றோல். (தொல்.எழுத்.251, உரை) |