Word |
English & Tamil Meaning |
---|---|
முகத்தாலடி - த்தல் | mukattāl-aṭi- v. intr. & tr. <>id.+. See முகத்திலடி-. (W.) . |
முகத்தாவு | mukattāvu n. See முகதா. (W.) . |
முகத்திரியக்குநாடி | muka-t-tiriyakkunāṭi n. <>முகம்+. Transverse facial artery; முகத்தில் குறுக்காயோடும் இரத்தக்குழாய்வகை. (W.) |
முகத்திலடி - த்தல் | mukattil-aṭi- v. <>id.+. tr. 1. To abuse or reproach another to his face; நேரே நிந்தித்தல். Loc. 2. To condemn or forbid by one's countenance; 3. To be repulsive or disgusing; |
முகத்திலருப்பமிறங்குகை | mukattilaruppam-iṟaṅkukai n. <>id.+. See முகத்திலரும்புகை. (W.) . |
முகத்திலரும்புகை | mukattil-arumpukai n. <>id.+. Sprouting of hairs in the upper lip; மேலுதட்டில் மயிர்தோன்றுகை. (W.) |
முகத்தில¦யாடாமை | mukattil-ī-y-āṭāmai, n. <>id.+. Having a very anxious look; கவலை கொண்ட முகங்கொள்ளுகை. Colloq. |
முகத்திற்கரிக்கோடிடுகை | mukattiṟ-kari-kkōṭiṭukai n. <>id.+. See முகத்திலரும்புகை. (W.) . |
முகத்தீடு | mukattīṭu n. <>id.+இடு-. Facecloth; பிரேதத்தின் முகமுடிச்சீலை. (W.) |
முகத்துதி | muka-t-tuti n. <>id.+. See முகஸ்துதி. (W.) . |
முகத்துநாடி | mukattu-nāṭi n. <>id.+. Facial artery; முகத்திலோடும் இரத்தக்குழாய். (இங். வை.) |
முகத்துரை | mukatturai n. <>id.+உரை-. Direct speech of a person; தானே நேரில்நின்று பேசுகை. கொண்டெடுத்து மொழியப்படுவதல்லது முகத்துரையாக நிகழ்த்தும் நிகழ்ச்சி . . . இல்லாமை (இலக். வி. 563, உரை). |
முகத்துவாரம் | muka-t-tuvāram n. <>id.+. Mouth of a firth or river; கழிழகம். Colloq. |
முகத்தெளிவு | muka-t-teḷivu n. <>id.+. See முகக்களை. Colloq. . |
முகத்தேங்காய் | muka-t-tēṅkāy n. <>id.+. See முகக்கயில். (J.) . |
முகதரிசனம் | muka-taricaṉam n. <>id.+. Sight of a person's face; பெரியோர் முதலியவரின் முகத்தைக் காண்கை. |
முகதலை 1 | muka-talai n. <>id.+. 1. The front or outer end of a saree, dist. fr. cama-talai; மகளிரின் சிலைமுந்தானை. 2. Confrontation; |
முகதலை 2 - த்தல் | mukatalai- 11 v. tr. <>முகதலை. To confront, face; எதிர்முகமாக்குதல் எங்களை முகதலைத்துவிடும். (W.) |
முகதலை 3 | mukatalai n. <>U. mubaddal. Temporary loan; கைம்மாற்றுக்கடன். Loc. |
முகதலைப்பு | muka-talaippu n. <>முகம்+. See முகதலை. (W.) . |
முகதா | mukatā n. <>mukhatas. Presence of a person; முன்னிலை அவன் முகதாவிற் பேசினேன். |
முகதாட்சிணியம் | muka-tāṭciṇiyam n. <>mukha+. Delicacy, consideration for the feelings of a person in his presence; ஒருவன் முன்னிலையிற் காட்டும் கண்ணோட்டம். Colloq. |
முகதாட்சிணை | muka-tāṭciṇai n. <>id.+. See முகதாட்சிணியம். (W.) . |
முகதாவு | mukatāvu n. See முகதா. (W.) . |
முகந்தகம் | mukantakam n. <>mukandaka. Onion. See ஈரவெங்காயம். (மூ. அ.) . |
முகந்தம் | mukantam n. See முககந்தம். (அரு. அக.) . |
முகந்தரு - தல் | mukan-taru- v. intr. <>முகம்+. To show favour; பட்சங்காட்டுதல். |
முகந்திரி - தல் | mukan-tiri- v. intr. <>id.+. See முகமாறு-. முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து (குறள், 90). . |
முகந்திருத்து - தல் | mukan-tiruttu- v tr. <>id.+. To compose one's countenance; முகவாட்டந் தவிர்த்தல். இருந்து முகந்திருத்தி (தனிப்பா. i, 94, 11). |
முகந்துடை - த்தல் | mukan-tuṭai- v. tr. <>id.+. To shave one's face; முகச்சவரஞ் செய்தல். (Pudu. Insc. No. 909.) |
முகநட்பு | muka-naṭpu n. <>id.+. Pretended, outward friendship; வெளிநட்பு. Colloq. |
முகநாடி | muka-nāṭi n. <>id.+. See முகக்குறி. (W.) . |
முகநிலை | muka-nilai n. <>id.+. A kind of song; இசைப்பாட்டுவகை. (சிலப். 6, 35, உரை.) |
முகநிலைப்பசாசம் | muka-nilai-p-pacācam n. <>id.+. (Nāṭya.) A gesture in which the thumb and forefinger are joined just below the nails; பெருவிரலும் சுட்டுவிரலும் முகங்கூடி உகிர்விட்டிருக்கும் பசாசக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) |
முகநோக்கு - தல் | muka-nōkku- v. intr. <>id.+. To meet face to face; to exchange glances; நோக்கெதிர் நோக்குதல். (இலக். வி. 580, உரை, பக். 530.) |