Word |
English & Tamil Meaning |
---|---|
முகம்புகு - தல் | mukam-puku- v. intr. <>id.+. 1. See முகமலர்-. முகம்புகன் முறைமையின் (தோல். பொ. 152). . 2. To approach for favours;. |
முகம்புடை - த்தல் | mukam-puṭai- v. intr. <>id.+. 1. To beat oneself on the face, as an expression of grief; துக்கக்குறியாக முகத்திலடித்துக்கொள்ளுதல். பலசன முகம்புடைத் தகங்குழைந்தழவே (சீவக. 2758). 2. To gather, as the head of a boil. See முகங்காண். |
முகம்புதை - த்தல் | mukam-putai- v. intr. <>id.+. To cover one's face; முகத்தை மூடுதல். கையா னகைமுகம் புதைத்த தோற்றம் (சீவக. 2461). |
முகம்பெறு - தல் | mukam-peṟu- v. intr. <>id.+. To rise, as the sun; to appear; தோன்றுதல். சுடர்முகம்பெற்றபோதே (சீவக. 1404). |
முகம்மதியர் | mukammatiyar n. <>முகம்மது. Followers of the religion of muhammad; இஸ்லாம் மார்க்கத்தவர். |
முகம்மது | mukammatu n. <>Arab. Muhammad. See முகம்மது நபி. |
முகம்மதுநபி | mukammatu-napi n. <>முகம்மது+. Muhammad the Prophet of Islam; முகம்மதியமத தீர்க்கதரிசியான முகம்மது. |
முகம்வை - த்தல் | mukam-vai- v. intr. <>முகம்+. To gather, as the head of a boil. See முகங்காண்-. |
முகமண்டகம் | muka-maṇṭakam n. See முகமண்டபம். விஷ்ணுக் கிருகத்து முகமண்டகத்தே கூடியிருந்து (S. I. I. iii, 12). . |
முகமண்டபம் | muka-maṇṭapam n. <>முகம்+. Front hall in a temple; கோயிலின் முன்மண்டபம் முகமண்டபஞ் செய்து நிரத்தளித் தான் (செந். iv, பக். 335). |
முகமண்டலம் | muka-maṇṭalam n. <>id.+. See முகம், 1. (W.) . |
முகமயக்கு | muka-mayakku n. <>id.+. 1. Bewitching by looks, a magic art; பார்வையால் மயக்கும் மாயவித்தை (சங். அக.) 2. See முகமாயம். Loc. |
முகமல் | mukamal n. <>Arab. makhmal. Velvet. See மகமல். . |
முகமலர் - தல் | muka-malar- v. intr. <>முகம்+. To wear a cheerful countenance; முகப்பொலிவுகொள்ளுதல். பூம்புனலூரன்புக முகமலர்ந்த. . . கோதை (திருக்கோ. 363, கொளு). |
முகமலர்ச்சி | muka-malarcci n. <>id.+. Cheerfulness of countenance; முகத்தில் மகிழ்ச்சி தோற்றுகை. முகமலர்ச்சி கூறல் (திருக்கோ. 363, தலைப்பு). |
முகமறி - தல் | mukam-aṟi- v. tr. <>id.+. To be acquainted with; அறிமுகமாதல். முகமறியா விருந்தொன்று (இலக். வி. 555, உதா.). |
முகமறு - த்தல் | mukam-aṟu- v. intr. <>id.+. (W.) 1. To speak impartially; தாட்சிணிய மின்றிப் பேசுதல். முகமறுத் துறவாடு. 2. To speak accurately; |
முகமன் | mukamaṉ v. Prob. id. 1. Civility, politeness; உபசாரம். முன்னையிற்புனைந்து முகம னளித்தும் (கல்லா. 13). 2. Praise; 3. Flattery; |
முகமா - தல் | mukam-ā- v. intr. <>id.+. To agree; உடன்படுதல். தான் முற்கூறியதற்கு முகமாகாமை கண்டு (சீவக. 1120, உரை). |
முகமாட்டம் | mukam-āṭṭam n. <>id.+. 1. Showing one's face; முகக்தைக் காட்டுகை. (W.) 2. Partiality; 3. Respect for persons; 4. See முகமன், 1. (யாழ். அக.) |
முகமாயக்காரி | muka-māya-k-kāri n. <>முகமாயம்+. Woman of fascinating looks or charming face; முகவசீகரமுள்ளவள். (W.) |
முகமாயம் | muka-māyam n. <>முகம்+. Charm of a fascinating face, as of a woman; முகவழகில் உண்டாம் வசீகரம். (W.) |
முகமாற்று | muka-māṟṟu n. <>id.+. See முகமயக்கு, 1. (சங். அக.) . |
முகமாறு - தல் | muka-māṟu- v. intr. <>id.+. See முகங்கோணு-. தம்பால் இரந்தவர்களக்கு . . . முகமாறாது ஈதலை (கலித். 61, 11, உரை). . |
முகமில்வரி | mukam-il-vari n. <>id.+prob. இல்+. A kind of song; இசைப்பாட்டு வகை. (சிலப், 7, 4, அரும்.) |
முகமுகங்கணோக்கு - தல் | muka-mukaṅ-ka-ṇōkku- v. intr.<>id.+முகம்+. See முகமுகம்பார்-. கண்மல்குநீரார் முகமுகங்க ணோக்கினார் (சீவக. 1808). . |
முகமுகம்பார் - த்தல் | muka-mukam-pār- v. intr. <>id.+id.+. To look one another in face; முகத்தை முகம் பார்த்தல். மதுரைநகர் நின்ற மாயவினப்புரவி முகமுகம்பார்த்து (திருவாலவா. 29, 1). |