Word |
English & Tamil Meaning |
---|---|
முகவாட்டம் | muka-vāṭṭam n. <>முகம்+. Jaded countenance; fatigued appearance; முகத்தில் தோற்றுஞ் சோர்வு. (W.) |
முகவாடல் | muka-vāṭal n. <>id.+. See முகவாட்டம். (W.) . |
முகவாத்தியம் | muka-vāttiyam n. <>id.+. (W.) 1. Playing on the mouth by striking it with the hand; கையால் வாயை யடித்து இசையொலி யெழுப்புகை. 2. See முகவீணை. |
முகவாதசன்னி | muka-vāta-caṉṉi n. <>முகவாதம்+. Facial paralysis; முகத்தைக்கோணச்செய்யும் சன்னிவகை. (W.) |
முகவாதம் | muka-vātam n. <>முகம்+. See முகவாதசன்னி. (W.) . |
முகவாய் | muka-vāy. n. <>id.+. See முகவாய்க்கட்டை. . |
முகவாய்க்கட்டை | muka-vāy-k-kaṭṭai n. <>முகவாய்+. Chin; மோவாய். |
முகவாள் | muka-vāḷ n. <>முகம்+. Ploughshare; கலப்பைக்கூர். (செந். iv, பக். 212.) |
முகவிச்சகம் | muka-v-iccakam n. <>id.+. See முகஸ்துதி. (யாழ். அக.) . |
முகவிச்சை | muka-v-iccai, n. <>id.+. 1. See முகஸ்துதி. (யாழ். அக.) . 2. Desire excited by countenance; |
முகவிம்பம் | muka-vimpam n. <>id.+. 1. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.) 2. See முகமண்டலம். தார் மார்பமு முகவிம்பமும் (தக்க யாகப். 10). |
முகவியர் | mukaviyar n. <>id. Those who look pleased; இன்முகமாயுள்ளோர். முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார் (சீவக. 2045). |
முகவிலாசம் | muka-vilācam n. <>id.+. Beaming countenance; முகப்பொலிவு. (W.) |
முகவிழி | muka-viḻi n. <>id.+. Facing, meeting; முகத்தில் விழிக்கை. அவனுடன் முகவிழி கிடையாது. |
முகவிழுப்பு | muka-viḻuppu n. <>id.+ இழு-. See முகவாதசன்னி. (M.L.) . |
முகவீணை | muka-vīṇai n. <>id.+. Indian clarionet; ஒருவகை இசைக்கருவி. தித்திசிறு முகவீணை ... மிழற்ற (குற்றா. தல. தருமசா. 54). |
முகவு | mukavu n. <>id. (அரு. நி.) 1. Facade, porch; மாளிகைமுகப்பு. 2. Brilliance; |
முகவுரை | muka-v-urai n. <>id.+. Introduction, preface; முன்னுரை. (நன்.1.) |
முகவெட்டி | muka-veṭṭi n. An official; ஓர் உத்தியோகஸ்தன். (S. I. I. iii, 118.) |
முகவெட்டு | muka-veṭṭu n. <>முகம்+. See முகவசிகரம். Colloq. . |
முகவெண்டலை | muka-veṇṭalai n. <>id.+. A blemish in cattle, of having the face alone white; முகமட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம். (மாட்டுவா. 15.) |
முகவெழுத்து | muka-v-eḻuttu n. <>id.+. Painting on the face; முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம். (பெருங். வத்தவ. 13, தலைப்பு.) |
முகவெள்ளைப்பருந்து | muka-veḷḷai-p-paruntu n. <>id.+. A species of white-headed kite; பருந்துவகை. (W.) |
முகவேலை | muka-vēlai n. <>id.+. See முகச்சவரம். (W.) . |
முகவை | mukavai n. <>முக-. 1. Drawing, as water; taking up, as grain; முகந்துகொள்ளுகை. 2. Anything which is given in large quantities; 3. Bucket for drawing water; 4. Ladle; 5. Heap of paddy on the threshing-floor; 6. Ramnad; |
முகவைப்பாட்டு | mukavai-p-pāṭṭu n. <>முகவை+. Song sung during the treading of grain on the threshing-floor by cattle; களத்திற் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட்டு. பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டும் (சிலப். 10, 137). |
முகவோலை | muka-v-ōlai n. <>முகம்+. Ola letter of a king or of a great person; அரசர் முதலியோர் எழுதும் திருமுகம். கன்னிதன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை ... மன்னர்க் கெழுத (பாரத. சம்பவ. 43). |
முகனை | mukaṉai n. <>id. 1. Forepart, front; முன்புறம். 2. Beginning; introduction; 3. Headship, leadership; 4. Instant-aneousness; 5. Irritability, irascibility; |