Word |
English & Tamil Meaning |
---|---|
முச்சக்கரம் | mu-c-cakkaram n. <>மூன்று+. See முப்புவனம். முச்சக்கரமு மளப்பதற்கு நீட்டிய கால் (பொருந. இறுதிவெண்பா. 3). . |
முச்சகம் | mu-c-cakam n. <>id.+. See முப்புவனம். முச்சக நிழற்று முழுமதி முக்குடை. (நன். 258). . |
முச்சங்கம் | mu-c-caṅkam n. <>id.+. The three ancient Tamil academies which flourished under the patronage of the Pāṇdya kings, viz., talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam; பாண்டியமன்னர் ஆதரவின்கீழ்த்தமிழாராய்ந்த புலவர்களாலாகிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூவகைத் தமிழ்ச்சங்கங்கள். ஆதிமுச்சங்கத் தருந்தமிழ்க் கவிஞர். (சிலப். பக். 8, கீழ்க்குறிப்பு). |
முச்சட்டை | muccaṭṭai n. [T. mutsaṭa.] (W.) 1. Elegance, beauty; அழகு. 2. Neatness; order; |
முச்சடை | mu-c-caṭai n. <>மூன்று+. A Rākṣasī. See திரிசடை. முச்சடை யென்பாளவள் சொல்ல (கம்பரா. நிந்தனை. 82). |
முச்சத்தி | mu-c-catti n. <>id.+. The three powers of a king, viz.., pirapu-catti, mantiracatti, uṟcāka-catti; பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாக சத்தி என்ற அரசர்க்குரிய மூவகை யாற்றல் (இரகு. திக்கு. 25.) |
முச்சதுரம் | mu-c-caturam n. <>id.+. 1. Triangle; முக்கோணம். நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவுமாகிய மூன்றுவகை (திருமுரு. 181, உரை). 2. Square spurge. |
முச்சந்தி | mu-c-canti n. <>id.+. 1. The three periods of the day. See திரிசந்தி. 2. Junction of three streets or ways; 3. A petty taluk officer of old days; |
முச்சந்திமூப்பன் | muccanti-mūppaṉ n. <>முச்சந்தி+. A village deity, having its abode at the junction of three streets or ways; முச்சந்தியிலுள்ள ஒரு கிராமதேவதை. Loc. |
முச்சலிக்கா | muccalikkā n. <>Hind. mucalka. 1. Note of hand; written obligation, agreement, bond; deed; counterpart of a lease, as by a tenant to his landlord; உடன் படிக்கை. 2. Recognisance, bail, penalty bond; |
முச்சலிக்கை | muccalikkai n. See முச்சலிக்கா. . |
முச்சல¦லிகை | mu-c-calīlikai n. <>மூன்று+சலிலம். The three liquids, viz., vāy-nīr, ciṟu-nīr, nāta-nīr; வாய்நீர் சிறுநீர் நாதநீர் என்னும் மூவகை நீர். முச்சல¦லிகை சொக்கிடுவார் (திருப்பு. 603). |
முச்சாரிகை | mu-c-cārikai n. <>id.+சாரிகை. Parade of horses, chariots and elephants; குதிரை தேர் யானை என்ற இவை சேர்ந்து சாரிபோகை. முச்சாரிகை யொதுங்கு மோரிடத்தும் (ஏலாதி, 12). |
முச்சி 1 | mucci n. <>உச்சி. [M. mucci.] 1. Crown of head; தலையுச்சி. மகளை ... முச்சிமோந்து (சூளா. இரதநூ. 102). 2. Tuft of hair on the head; 3. Crest; |
முச்சி 2 | mucci n. See முச்சில். (W.) . |
முச்சி 3 | mucci n. <>Hind. mōcī. 1. Stationer, one who serves out stationery in a public office; கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக்கும் வேலையாள். (C. G.) 2. One who works in leather; 3. Sheathmaker; 4. See முச்சியன், 1. (M. M.) 5. Painter; |
முச்சியன் | mucciyaṉ n. <>id. [M. mucciyan.] 1. Carpenter, cabinet-maker; தச்சன். (J.) 2. See முச்சி, 5. (W.) |
முச்சிரம் 1 | mu-c-ciram n. <>மூன்று+சிரம். Trident; சூலம். (W.) |
முச்சிரம் 2 | mucciram n. Anise seed; பெருஞ்சீரகம். (பரி. அக.) |
முச்சில் | muccil n. <>முற்றில். [T. muṭsṭsili K. muccal.] Toy winnow; சிறுமுறம். (பிங்.) |
முச்சிலிகா | muccilikā n. See முச்சலிக்கா. (G. Tn. D. I, 284.) . |
முச்சினி | mucciṉi n. Third month; மூன்றாமாதம். (க. அக.) |
முச்சு - தல் | muccu- 5 v. tr. cf. மூய்-. [T. mūyu K. Tu. muccu.] 1. To cover; மூடுதல். தாட்செருப்புலகெலாந் தோன் முச்சுந் தரம்போல் (ஞானவா. மாவலி. 8). 2. cf. முற்று-. To make; |
முச்சுடர் | mu-c-cuṭar n. <>மூன்று+. The three luminaries, viz., cūriyaṉ , cantiraṉ , akkiṉi; சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முன்று சோதிகள். அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் (தக்கயாகப். 281). |