Word |
English & Tamil Meaning |
---|---|
முசாபர்கானா | mucāpar-kāṉā n. <>Arab. musāfir-khāna. See முசாவரிபங்களா. (W.) . |
முசாபரி | mucāpari n. See முசாபர். (W.) . |
முசாவரி | mucāvari n. See முசாபர். Loc. . |
முசாவரிபங்களா | mucāvari-paṅkaḷā n. <>முசாவரி+. Traveller's bungalow; பிரயாணிகள் தங்கும் கட்டடம். Loc. |
முசி - தல் | muci- 4 v. intr. 1. To be torn; அறுதல். மகுடந் தேய்ப்ப முசிந்து ... தழும்பேறி (பதினொ. காரை. அற்பு. 76). 2. To be crumpled, as a garment; 3. To be tired; 4. To feel discouraged; 5. See முசி2-, 1, 3, (W.) 6. See முசி-, 4. மூங்கில்போல் அன்னை சுற்றம் முசியாமல் வாழ்ந்திடுவீர். |
முசி - த்தல் | muci- 11 v. intr. 1. To be faint, become tired; களைத்தல். (W.) 2. To be distressed; 3. To grow thin; 4. To perish; 5. See முசி1-, 2. திருவரையிலே முசிக்கையாலும் (திவ். திருப்பல். 9, வ்யா.). --tr. 6. To wrench, twist; |
முசிடு | muciṭu n. <>முசிறு. [K. musuṭu.] See முசிறு, 1, 2. (W.) . |
முசிப்பாற்றி | mucippāṟṟi n. <>முசிப்பு+. Rest; refreshment; இளைப்பாற்றுகை. (W.) |
முசிப்பாறு - தல் | mucippāṟu- v. intr. <>id.+. To rest, revive, take comfort; இளைப்பாறுதல். (W.) |
முசிப்பு | mucippu n. <>முசி-. 1. Thinness, emaciation; மெலிவு. விலாப்புடை முசிப்பறவீங்க (உத்தரரா. சந்திரகே. 71). 2. Languor, debility; fatigue; weariness; 3. Destruction; 4. cf. நுசுப்பு. Waist; |
முசிரம் | muciram n. <>mucira Liberality, generosity; வள்ளன்மை. (W.) |
முசிரி | muciri n. See முசிறி. முகையவிழ்தார்க்கோதை முசிரியார் கோமான் (முத்தொள். 6). . |
முசிலாப்பு | mucilāppu n. Compression to a small bulk; ஒடுக்கிக் கட்டுகை. (J.) |
முசிவு | mucivu n. <>முசி1-. See முசிப்பு, 2. அரிமுசிவொடுமெழ (தேவா. 832, 3). . |
முசிறி | muciṟi n. Muziris, an ancient sea-port, near Cranganore; மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம். முழங்குகடன் முழவின் முசிறியன்ன (புறநா. 343, பி-ம்). |
முசிறு | muciṟu n. cf. முயிறு. 1. Red ant, Formica smaragdina; செந்நிறமுள்ள எறும்பு வகை. 2. One easily enraged; surly, irritable person; 3. See முசு1. (W.) |
முசு 1 | mucu n. [K. musu M. mocca Tu. mujju.] Langur, Semnopithecus priamus கருங்குரங்குவகை. கருமை மெழுகியவை போன்றினியவல்லா முகத்த முசுவுங் குரங்கு மிரிய (சீவக. 1414). |
முசு 2 | mucu n. Hump; திமில். Loc. |
முசுக்கட்டை | mucukkaṭṭai n. 1. Indian mulberry, m.tr., Morus indica; மரவகை. (மலை.) 2. See முசுக்கட்டைப்பூச்சி. |
முசுக்கட்டைப்பூச்சி | mucukkaṭṭai-p-pūcci n. <>முசுக்கட்டை+. Hairy caterpillar; கம்பளிப்பூச்சி. |
முசுக்கை | mucukkai n. See முசுமுசுக்கை. (மூ. அ.) . |
முசுகுந்தன் | mucukuntaṉ n. <>Mucukunda. An emperor, who assisted the Dēvas in their wars against the Asuras; தேவர்கள் அசுரரோடு பொருதபொழுது தேவர்களுக்கு உதவிய ஒரு சக்கரவர்த்தி. வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தனென்னும் மன்னனுக்கு வரும் இடையூற்றை (சிலப். 5, 65, உரை). |
முசுட்டுமுட்டைத்தைலம் | mucuṭṭumuṭṭai-t-tailam n. <>முசுடு+. A medicinal oil prepared from the eggs of red ants; முசுற்றெறும் பின் முட்டைகளின்று வடித்தெடுக்கும் தைலம். |
முசுட்டை | mucuṭṭai n. [K. inusuṭe.] 1. See முசுண்டை. (நெடுநல்.13, உரை.) . 2. Clove-scented creeper, l. cl., Rivea hypocrateriformis; 3. A kind of creeper,Iponoea candicans; |
முசுடர் | mucuṭar n. See முசுண்டர். (சூடா.) . |
முசுடு | mucuṭu n. See முசிறு. (W.) . |
முசுண்டர் | mucuṇṭar n. perh. முசுடு. [K. musuṇdi.] Low, mean people; கீழ்மக்கள். (பிங்.) தவிர்தி யினி முசுண்டரவர் சங்கந்தன்னை (சேதுபு. துரா. 65). |