Word |
English & Tamil Meaning |
---|---|
முட்டு 1 - தல் | muṭṭu- 5 v. tr. [K. muṭṭu.] 1. To dash against, butt; to hit against; மோதுதல். துள்ளித்தூண் முட்டுமாங்கீழ் (நாலடி, 64). 2. To oppose, hinder; 3. To assault, attack; 4. To meet; 5. To grip, grasp; 6. To seek; 1. To be deficient; 2.To be full; 3. To end; 4. To be hindered, prevented; 5. To fight, attack; 6. To fail, stray away; |
முட்டு 2 | muṭṭu n. <>முட்டு-. [T. K. M. Tu. muṭṭu.] 1. Battering, butting; விலங்கு முதலியன கொம்புழதலியவற்றால் தாக்குகை. 2. Hindrance, obstacle, impediment; 3. See முட்டுப்பாடு, 1, 2. 4. Shortness, deficiency; 5. Difficulty, as in passing; 6. Pollution; 7. Menses; 8. Tool, instrument; 9. Sundry things; 10. Prop, support; 11. Knee; elbow; knuckle; 12. Rising ground, high ground; 13. Heap; |
முட்டுக்கட்டியாடு - தல் | muṭṭu-k-kaṭṭi-y-āṭu- v. intr. <>முட்டுக்கட்டு-+. To go on stilts; பொய்க்கால்களில் நீன்று நடத்தல். (W.) |
முட்டுக்கட்டு - தல் | muṭṭu-k-kaṭṭu- v. intr. <>முட்டு+. 1. To prop, buttress; ஆதாரமாகக்கட்டைமுதலியன கொடுத்தல். 2. To blockade, shut up a place or an entrance, shut or beset the avenues of a town; 3. To form ridges, as in a field; to limit or confine within bounds; 4. To sit cross- legged with arms folded round the knees; |
முட்டுக்கட்டை | muṭṭu-k-kaṭṭai n. <>முட்டு-+. 1. Block or stake, as a prop or support; தாங்குகம்பம். 2. Person or object which is a hindrance; |
முட்டுக்காய் | muṭṭu-k-kāy n. <>முட்டு+. 1. See முட்டுக்குரும்பை. . 2. Ice; |
முட்டுக்காய்த்தேங்காய் | muṭṭu-k-kāy-t-tēṅkāy n. <>முட்டுக்காய்+. See முட்டுக்குரும்பை. (J.) . |
முட்டுக்காரன் | muṭṭu-k-kāraṉ n. <>முட்டு+. One who plays on mattaḷam; மத்தளமடிப்பவன். Tj. |
முட்டுக்கால் | muṭṭu-k-kāl n. <>முட்டு-+. 1. Support, pedestal, beam to support an old wall or tree; தாங்குகால். தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிவைத்த (பெரும்பாண். 346, உரை). 2. See முட்டிக்கால். (W.) |
முட்டுக்கால்தட்டு - தல் | muṭṭukkāl-taṭṭu- v. intr. <>முட்டுக்கால்+. To have one's knees knocking together, as a donkey; முழங்கால் ஒன்றோடொன்று இடித்தல். |
முட்டுக்குட்டு | muṭṭu-k-kuṭṭu n. [T. muṭṭukuṭṭu.] See முட்டுவலி. (பைஷஜ. 257.) . |
முட்டுக்குத்து - தல் | muṭṭu-k-kuttu- v. intr. <>முட்டு+. To fall upon one's knees; முழங்கால் மேல் நிற்றல். (W.) |
முட்டுக்குரும்பை | muṭṭu-k-kurumpai n. <>id.+. Very immature coconut; முற்றாத இளநீர். Loc. |
முட்டுக்கொடு - த்தல் | muṭṭu-k-koṭu- v. intr. <>id.+. 1. To put up a prop; ஆதாரக்கால் நிறுத்துதல். 2. To put an obstacle in the way; |
முட்டுக்கோல் | muṭṭu-k-kōl n. <>id.+. Clamps; கிட்டி முட்டுக்கோல்கொண்டு அபகரித்து தனத்தை (ஈடு, 5, 3, 9, ஜீ.). |
முட்டுச்சட்டம் | muṭṭu-c-caṭṭam n. <>id.+. Brace, strut; உதைமானச் சட்டம். (C. E. M.) |
முட்டுச்சீலை | muṭṭu-c-cīlai n. <>id.+. Cloth worn by a woman in her periods; மாதவிடாயில் உடுக்கும் புடைவை. (W.) |
முட்டுச்சுவர் | muṭṭu-c-cuvar n. <>id.+. Buttress; உதைமானச் சுவர். (C. E. M.) |
முட்டுத்தொய்வு | muṭṭu-t-toyvu n. <>id.+. Difficulty in breathing, as from pulmonary disease; சுவாசநோயால் மூச்சுவிட உண்டாம் கஷ்டம். (W.) |