Word |
English & Tamil Meaning |
---|---|
முடிக்கண்ணி | muṭi-k-kaṇṇi n. <>முடி + See முடிமாலை கங்கைகாணக் கொடார்முடிக் கண்ணியை (தேவா. 456, 6). . |
முடிக்கலம் | muṭi-k-kalam n. <>id.+. Crown ; கிரீடம். ஆண்டு அரசருடைய முடிக்கல முதலியவற்றை வாங்கிக் கொண்டு (பெரும்பாண். 451, உரை.) |
முடிக்காணிக்கை | muṭi-k-kāṇikkai n. <>id.+. Offering of the hair of a person's head which has been allowed to grow for a certain time, in fulfilment of a vow; தெய்வப்பிரார்த்தனையின் பொருட்டு வளர்த்த மயிர் முடியை மழித்துக் காணிக்கையாக இடுகை. Colloq. |
முடிக்கீரை | muṭi-k-kīrai n. <>id.+. Young greens, tender potherbs ; முளைக்கீரை. (W.) |
முடிக்கோரை | muṭi-k-kōrai n. <>id.+. A kind of sedge; கோரைவகை. (யாழ். அக.) |
முடிகத்தரிக்கிறவன் | muṭi-kattarik-kiṟavaṉ n. <>id+. Cut-purse ; திருடன். (W.) |
முடிகவி - த்தல் | muṭi-kavi- v. tr. <>id.+. See முடிசூட்டு-. இன்னா னெனவறியா வென்னை முடிகவித்து (பாரதவெண். 315) . . |
முடிகொண்டசோழபுரம் | muṭi-koṇṭa-cōḻa-puram n. <>முடிகொண்டசோழன்+. A chōḻa capital in Trichinopoly District; திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள சோழர் தலைநகரம். (I. M. P. Rd. 285.) |
முடிகொண்டசோழன் | muṭi-koṇṭa-cōḻaṉ n. A title of Rajendra chola deva I; முதல் இராஜேந்திர சோழதேவனது பட்டப்பெயர். (S. I. I. ii, 107.) |
முடிச்சடைமுனிவன் | muṭi-c-caṭai-muṉivaṉ n. <>முடி+ Vīrabhadra, as wearing matted locks; வீரபத்திர தேவன். முடிச்சடை முனிவனன்று வேள்வியிற் கொண்ட (சீவக. 2285) . |
முடிச்சவிழ் - த்தல் | muṭiccaviḻ- v. intr. <>முடிச்சு+. 1. To untie money knotted in a cloth, with a view to theft; ஒன்றைத் திருடுதற்கு அதை முடிந்துவைத்துள்ள துணிமுடிச்சை நெகிழ்த்தல். (W.) 2. To steal; |
முடிச்சவிழ்க்கி | muṭiccaviḻkki n. <>முடிச்சவிழ்-. 1. One who secretly removes money tied in a cloth; முடிச்சவிழ்ப்பவன். (W.) 2. Thief; |
முடிச்சன் | muṭiccaṉ n. <>முடிச்சு. Scheming fellow; தந்திரி. Loc. |
முடிச்சாத்து | muṭi-c-cāttu n. <>முடி+. Turban; தலைப்பாகை. தனி முடிச்சாத்துஞ் சாத்தி (திருவாலவா, 54, 14, பி-ம்.). |
முடிச்சு | muṭiccu n. <>முடி2-. 1. Tie; கட்டு. 2. Tuft of hair; 3. Small bundle; 4. Knot in wood; 5. An ear-ring worn by women; 6. Deep scheme, cunning plan, stratagem; |
முடிச்சுக்காரன் | muṭiccu-k-kāraṉ n. <>முடிச்சு+. 1. One who possesses a bundle; சிறுமுட்டைகளை யுடையவன். 2. One who has money; 3. Scheming person ; |
முடிச்சுக்கோரை | muṭiccu-k-kōrai n. <>id.+. See முடிக்கோரை .(W) . |
முடிச்சுப்போடு - தல் | muṭiccu-p-pōṭu- v. intr.<>id.+ See முடி1-, 7, 8, Colloq. . |
முடிச்சுமாறி | muṭiccu-māṟi n. <>id.+. See முடிச்சவிழ்க்கி. (W.) . |
முடிச்சுற்று | muṭi-c-cuṟṟu n. <>முடி+. Turban, as tied about the head; தலைப்பாகை. தொகு முதிச்சுற்றுஞ் சுற்றி (திருவாலவா. 54, 14). |
முடிச்சுற்றுமாலை | muṭi-c-cuṟṟu-mālai n. <>id.+. See முடிச்சூட்டு. (தக்கயாகப். 119, உரை.) . |
முடிச்சூட்டு | muṭi-c-cūṭṭu n. <>id.+. Garland worn on the head; முடியில் அணியும் மாலை. முடிச்சூட்டு முல்லையோ (தக்கயாகப். 119). |
முடிசாய் 1 - தல் | muṭi-cāy- v. intr. <>id.+. To die, as having the head droop; இறத்தல். (W.) |
முடிசாய் 2 - த்தல் | muṭi-cāy- v. intr. <>id+. 1. To lie down; to rest, as lowering the head; படுத்துக்கொள்ளுதல். முகுந்தனுடன் பாண்டவரு முடிசாய்த்து (பாரத. முதற். 77). 2. To pay homage, bow one's head in reverence; 3. To incline the head sideways; |
முடிசூட்டு 1 - தல் | muṭi-cūṭṭu- v. tr. Caus. of முடிசூடு-. To crown, as king; அரசுக்குரிய மகுடந் தரிப்பித்தல். முன்றின் முரசமுழங்க முடிசூட்டி (கம்பரா. இரணிய. 174). |
முடிசூட்டு 2 | muṭi-cūṭṭu n. <>முடிசூட்டு-. Coronation; அரசன் மகுடஞ் சூடுகை. முடிசூட்டு மங்கல நாள் (தமிழ்நா. 171, தலைப்பு.) |
முடிசூடு - தல் | muṭi-cūṭu- v. intr. <>முடி+. 1. To be crowned as king; மகுடாபிஷேகஞ் செய்தல். 2. To wear a crown; |