Word |
English & Tamil Meaning |
|---|---|
| முடிப்புரி | muṭippuri n. <>id.+ உரி-. (W.) 1. Receiver of rents and taxes; அரசிறைத் தண்டற்காரன். 2. Shroff; |
| முடிபு | muṭipu n. <>முடி-. See முடிவு. முனிவரர் வெகுளியின் முடிபென்றார் சிலர் (கம்பரா. மாரீச. 34). . |
| முடிபெழுத்து | muṭipeḻuttu n. <>முடிபு + எழுத்து. A class of letters; எழுத்துவகைகளூள் ஒன்று. (நன். 256. மயிலை.) |
| முடிபொருட்டொடர்நிலை | muṭi-poruṭ-ṭoṭar-nilai n. <>முடி + பொருள்+. Epic or narrative poem. See பொருட்டொடர்நிலைச்செய்யுள். முடிபொருட்டொடர்நிலையுள் தானப்பயன் கூறும் வழி (சிலப். 2, 9, உரை). |
| முடிபோடு - தல் | muṭi-pōṭu- v. <>id.+.tr. To tie into a knot; ஒன்றோடொன்று மாட்டிப் புணைத்தல். --intr. 1. To be pre-destined or ordained to be married to each other; 2. See முடி1-, 7. |
| முடிமயிர் 1 | muṭi-mayir n. <>முடி2-+. 1. Lock of hair; சேர்த்து முடித்த தலைமயிர். (W.) 2. Switch; |
| முடிமயிர் 2 | muṭi-mayir n. <>முடி+. Hair offered to a deity in pursuance of a vow; தெய்வத்துகுக் காணிக்கையாக மழித்து இடும் தலை மயிர். Loc. |
| முடிமன்னன் | muṭi-maṉṉaṉ n. <>id.+. Crowned monarch; மகுடந்தரித்த அரசன். முடிமன்னர் மூவருங் காத்தோம்பும் (சிலப். 29, பக். 575). |
| முடிமார் | muṭimār n. <>முடி1-. Those who accomplish things; முடிப்பவர். தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் (திருமுரு. 89). |
| முடிமாலை | muṭi-mālai n. <>முடி+. Garland for the head, chaplet; தலையில் அணியும் மாலை. (திவா.) |
| முடிமேல்முடி | muṭi-mēl-muṭi n. prob.id.+. Panicled golden-blossomed pear tree . See சிலந்தி2, 1.(மலை.) |
| முடிமேலழகி | muṭi-mēl-aḻaki n. prob. id.+. A very small plant. See கோடகசாலை. (மலை.) |
| முடிய | muṭiya adv. <>முடி1-. Unto the end, finally; முழுதும். (திவா.) என்று முடியக் கட்டுரைப்பது (தக்கயாகப். 728). |
| முடியரசன் | muṭi-y-aracaṉ; n. <>முடி+. See முடிமன்னன். (தக்கயாகப். 623, விசேடக்குறிப்பு.) . |
| முடியல் | muṭiyal n. <>முடி1+. All, whole; எல்லாம். (சது.) |
| முடியறுத்தல் | muṭi-y-aṟuttal n. <>முடி + அறு1-. The first shaving of a baby, ceremonially observed; குடுமிவைக்குஞ் சடங்கு. Loc. |
| முடியிறக்கு - தல் | muṭi-y-iṟakku- v. <>id.+. intr. To shave the hair of the head in fulfilment of a vow; பிரார்த்தனையாக மயிர் கழித்தல். Loc. --tr. 2. To put to disgrace; |
| முடியுப்பு | muṭi-y-uppu n. Rock salt; கல்லுப்பு. (மூ. அ.) |
| முடியுயர் - தல் | muṭi-y-uyar- v. intr. <>முடி+. To grow prosperous, as a king; இராசாங்கஞ் செழித்தல். குடியுயர முடியுயரும். |
| முடியுலகம் | muṭi-y-ulakam n. <>id.+. See முடியுலகு. முடியுலக மூர்த்தி (சீவக.1245). . |
| முடியுலகு | muṭi-y-ulaku n. <>id.+. Heaven, celestial world, as the highest world; மேலுலகம். வால்வளை முடியுலகுற (சீவக. 1847). |
| முடியுறுப்பு | muṭi-y-uṟuppu n. <>id.+. Ornamental parts of a crown, five in number, viz., tāmam, mukuṭam, patumam, kōṭakam, kimpuri; தாமம், முகுடம், பதுமம், கோடகம். கிம்புரி என ஜவகைப்பட்ட மகுட வுறுப்புக்கள். (திவா.) |
| முடியெடு - த்தல் | muṭi-y-eṭu- v. intr. <>id.+. 1. See முடியிறக்கு-. . 2. To become prominent; |
| முடிவறி - தல் | muṭivaṟi- v. tr. <>முடிவு+. To be advanced in knowledge; to master completely; நன்றாக உணர்தல். (யாழ். அக.) |
| முடிவாங்கு - தல் | muṭi-vāṅku- v. intr. <>முடி+. See முடியிறக்கு-. Colloq. . |
| முடிவாழை | muṭi-vāḻai n. perh. id.+. [K. muṭivāla.] Cuscus-grass. See இலாமிச்சை. (பிங்.) |
| முடிவிடங்கூறல் | muṭiviṭaṅ-kūṟal n. <>முடிவு+. (Gram.) Giving particular reference to the rule followed in the context, one of 32 utti, q.v.; உத்தி முப்பத்திரண்டனுள் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதி கூறும் இடத்தைக் குறிப்பது. (நன். 97, உரை.) |
| முடிவிலாற்றல் | muṭivil-āṟṟal n. <>id.+ இல் neg.+. See முடிவிலாற்றலுடைமை. (திவா.) . |
| முடிவிலாற்றலுடைமை | muṭivil-āṟṟaluṭaimai n. <>முடிவிலாற்றல்+. Omnipotence, one of civaṉ-eṇ-kuṇam, q.v.; சிவனெண்குணத்தொன்றாகிய அனந்த சக்தி. (குறள், 9, உரை.) |
| முடிவினை | muṭi-viṉai n. <>முடி1-+. Past karma whose effect has begun to operate. See பிரார்த்தம். ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல் வேண்டும் (சி. போ. பா, 8, 1, பக்.175, சுவாமிநா.). |
