Word |
English & Tamil Meaning |
---|---|
முடித்தகேள்வி | muṭitta-kēḷvi n. <>முடி2-+. Complete learning; கரைகண்ட கேள்வி. முடித்தகேள்வி முழுதுணர்ந்தோரே (சிலப். 1, 19). |
முடித்துக்காட்டல் | muṭittu-k-kāṭṭal n. <>id.+. (Gram.) A literary device which consists in showing that the author's statements are in line with the ancient authorities, one of 32 utti, q.v.; உத்தி முப்பத்திரண்டனுள் மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது. (நன். 145, உரை.) |
முடித்துக்கொடு - த்தல் | muṭittu-k-koṭu- v. tr. <>id.+. To accomplish, complete, as a piece of business; நிறைவேற்றித் தருதல். |
முடித்தேங்காய் | muṭi-t-tēṅkāy n. <>முடி+. Coconut with the husk removed, leaving a small part of the fibre on the upper part of the nut; குடுமியுள்ள தேங்காய். (W.) |
முடித்தைலம் | muṭi-t-tailam n. <>id.+. Hair-oil; தலைக்கிடுந் தைலம். (சு. வை. ர. 44.) |
முடிதீட்டு - தல் | muṭi-tīṭṭu- v. tr. <>id.+. To prostrate, as touching with one's head another's feet; வணங்குதல். பாதத் தெழின்முடி தீட்டினானே (சீவக. 2641). |
முடிதும்பை | muṭi-tumpai n. prob. id.+. A species of white dead-nettle; தும்பைவகை. (யாழ். அக.) |
முடிதுளக்கு - தல் | muṭi-tuḷakku- v. <>id.+. intr. 1. To assent, show appreciation, as by a nod; தலையசைத்தல். திருமுடிதுளக்கி நோக்கி (சீவக. 1881). --tr. 2. See முடிதிட்டு-. முனைவற் றொழுது மடிதுளக்கி (சீவக. 2357). |
முடிந்தகணம் | muṭinta-kaṇam n. <>முடி1-+. (Jaina.) Present time; நிகழ்காலம். முன்னைக் கணத்தி னிறந்தவனு முடிந்த கணத்து நின்றவனும் (மேருமந். 662). |
முடிந்தகொள்கை | muṭinta-koḷkai n. <>id.+. Final conclusion; முடிவான தீர்மானம். |
முடிந்ததுமுடித்தல் | muṭintatu-muṭittal n. <>id.+. (Gram.) Recapitulation, briefly restating the point discussed, one of 32 utti, q.v.; உத்தி முப்பதிரண்டனுள் முன்னர் விளக்கிக்கிடந்த வற்றைத் தொகுத்துக் கூறுவது. (நன். 382, உரை.) |
முடிந்ததுமுற்றும் | muṭintatu-muṟṟum n. <>id.+. Expression indicating conclusion, used at the end of a treatise, 'finis'; நூலிறுதியில் முடிவைக் குறிக்க எழுதப்படுந் தொடர். (W.) |
முடிந்தநூல் | muṭinta-nūl n. <>id.+. Exhaustive treatise; முழுதுங்கூறும் நூல். முடிந்த நூலிற் கண்டுகொள்க (இறை. 1, பக். 2). |
முடிந்தபொழுது | muṭinta-poḷutu n. <>id.+. Old age; முதிர்ந்த வயது. முடிந்தபொழுதிற் குறவாண ரேனம் படிந்துழுசால் பைந்தினைகள் வித்த (திவ். இயற். 3, 89). |
முடிநடை | muṭi-naṭai n. <>முடி+. Walking on one's head; தலையால் நடக்கை. அங்க வுடலிழந்து முடிநடையா லேறி (திருத். பு. சா. 28). |
முடிநர் | muṭinar n. <>முடி-. Those who tie knots; கட்டுபவர். வம்பு நிறை முடிநரும் (மதுரைக். 514). |
முடிநாதம் | muṭinātam n. Cochineal insect. See இந்திரகோபம். (யாழ். அக.) |
முடிநாறு | muṭi-nāṟu n. <>முடி+. Sheaf or bundle of seedlings; நாற்றுமுடி. முடிநாறழுத்திய நெடுநீர்ச்செறு (பெரும்பாண். 212). |
முடிப்பானை | muṭi-p-pāṉai n. <>id.+. Large earthen vessel for storing money or treasure; பொன் முதலிய அரும்பண்டங்களை வைக்கும் பெரிய மட்கலம். Loc. |
முடிப்பிசைக்குறி | muṭippicai-k-kuṟi n. <>முடிப்பு + இசை+. Full-stop; வாக்கியமுடிவைக்காட்டும் முற்றுக்குறி. (நான். பால. 169.) |
முடிப்பிரி | muṭippiri n. Corr. of முடிப்புரி. . |
முடிப்பு | muṭippu n. <>முடி-. [T. K. mudupu.] 1. Tying, fastening; முடிபோடுகை. 2. Tie, knot; 3. Bundle; 4. That which is worn on the head; 5. Money wrapt in a cloth and tied up; 6. Remittance of kist into the treasury; 7. Money, wealth; 8. Total sum; 9. Decision; 10. End, result; |
முடிப்புக்கட்டு - தல் | muṭippu-k-kaṭṭu- v. <>முடிப்பு+.-tr. To conclude; முடிவு செய்தல். (யாழ். அக.) --intr. To set apart, as a provision for a future expenditure; |
முடிப்புக்காரன் | muṭippu-k-kāraṉ n. <>id.+. Loc. 1. Collector of the revenue of a village, in ancient times; பண்டைக்காலத்து அரசிறைத் தண்டற்காரன். 2. One who keeps money; |
முடிப்புமாறி | muṭippu-māṟi n. <>id.+. See முடிச்சுமாறி. Loc. . |