Word |
English & Tamil Meaning |
|---|---|
| முணங்கு 2 | muṇaṅku n. <>முணங்கு-. 1. Withdrawing, contracting, bending; அடக்கம். (சூடா.) 2. Shaking off drousiness or laziness by stretching one's limbs; 3. Idleness; |
| முணங்குநிமிர் - தல் | muṇaṅku-nimir- v. intr. <>முணங்கு+. To shake off drowsiness or laziness; முரிநிமிர்தல். முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறநா. 78). |
| முணமுண - த்தல் | muṇa-muṇa- 11 v. tr. To mutter, murmur ; வாய்க்குட்பேசுதல். Colloq. |
| முணவல் | muṇaval n. <>முணவு-. Anger ; கோபம். (நாமதீப. 637.) |
| முணவு - தல் | muṇavu- 5 v. tr. 1. To dislike, feel aversion to; வெறுத்தல். களிறு நிலைமுணவுதற்குக் காரணம் இருஞ்சேறாடுதல். (பதிற்றுப் 64, 7, உரை). 2. To be angry; |
| முணுமுணு - த்தல் | muṇu-muṇu- 11 v. tr. See முணமுண-. . |
| முணை 1 | muṇai n. <>முணவு-. 1. Aversion; வெறுப்பு. முணையில்கொடை (சிவப். பிரபந். சிவஞா. பிள். முத்தப். 5). 2. Abundance; |
| முணை 2 - தல் | muṇai- 4 v. tr. <>முணை. To dislike,feel aversion to; வெறுத்தல். களிறு நிலை முணைஇய (பதிற்றுப். 64, 7). |
| முத்கலை | mutkalai n. <>Mudgalā. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| முத்தக்காசு | mutta-k-kācu n. <>musta+. 1. Straight sedge, Cyperus rotundus; கோரை வகை. (M. M. 228.) 2. Straight sedge tuber, Cuperus pertenuis; |
| முத்தகம் 1 | muttakam n. <>muktaka. 1. A stanza which, by itself, is complete in sense; தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள். (தண்டி. 2.) 2. A kind of literary composition adapted to singing; 3. Missile; |
| முத்தகம் 2 | muttakam n. <>atimuktaka. (மலை.) 1. Common delight of the woods. See குருக்கத்தி. 2. cf. முண்டகம்1. Jagged jujube. |
| முத்தங்கி | muttaṅki n. <>முத்து2+. Cloak made of pearls ; முத்துச்சட்டை. Loc. |
| முத்தங்கொஞ்சு - தல் | muttaṅ-kocu- v. <>முத்தம்1+. tr. See முத்தமிடு-. -intr. See முத்தந்தர்-. . |
| முத்தங்கொடு - த்தல் | muttaṅ-koṭu- v. <>id.+. tr. See முத்தமிடு-.--intr. See முத்தந்தா-. . |
| முத்தங்கொள்(ளு) - தல் | muttaṅ-koḷ- v. tr. <>id.+. 1. See முத்தமிடு-. தாய் வாய் முத்தங் கொள்ள (பெரியபு. கண்ணப்ப. 23). . 2. To touch, come in contact with; 3. To embrace; |
| முத்தண்டு | mu-t-taṇṭu n. <>மூன்று+. Triple staff of an ascetic; திரிதண்டம். முத்தண்டு தொட்டிழுத்தாய் (உபதேசகா. உருத்திராக். 86). |
| முத்தண்ணா | muttaṇṇā n. <>மூ-+அண்ணன். Brāh. 1. Elder brother ; தமையன். 2. Dullard, a term of abuse; |
| முத்தந்தா - தல் [முத்தந்தருதல்] | muttan-tā- v. intr. <>முத்தம1+. To offer one's cheek for a kiss; முத்தமிடுமாறு கன்ணம் முதலியவற்றைக் காட்டுதல். என் குட்டனே முத்தந்தா (திவ். பெரியாழ். 3, 3, 2). |
| முத்தப்பருவம் | mutta-p-paruvam n. <>id.+. A section of piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child is asked to offer its cheek for a kiss; பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையை முத்தந் தரும்படியாகப் பாடும் பகுதி. |
| முத்தம் 1 | muttam n. perh. முத்து-. 1. Lip; உதடு. (பிங்.) 2. Kiss; 3. See முத்தப்பருவம். (இலக். வி. 806.) 4. Agricultural tract; |
| முத்தம் 2 | muttam n. <>muktā. 1. Pearl; முத்து. சீர்மிகு முத்தந் தைஇய (பதிற்றுப். 39). 2. Castor bean; 3. A superior quality of emerald; 4. See முத்தாபலம், 2. |
| முத்தம் 3 | muttam n. prob. Pāli muttam <>mūtra. Penis ; ஆண்குறி. அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே (திவ். பெரியாழ், 1, 2, 6). |
| முத்தம் 4 | muttam n. <>mugdha. 1. Love, endearment ; பிரியம், (சூடா.) 2. Joy; |
