Word |
English & Tamil Meaning |
|---|---|
| முத்தம் 5 | muttam n. <>mukta. 1. See முத்தாசனம். முத்தமென லிடப்பாட்டாற் சீவனியையழுத்தி வலக்காலொத்த பாடப் பாட்டின் கீழழுந்த வைகுதல் (பிரபோத. 44, 9). . 2. Salvation; 3. Release; |
| முத்தம் 6 | muttam n. <>musta. 1. Sedge; கோரை. (நாமதீப. 348.) 2. See முத்தக்காசு. (பாலவா. 761.) |
| முத்தம் 7 | muttam n. Corr. of முற்றம். Colloq. . |
| முத்தமாலை | mutta-mālai n. <>முத்தம்2+. See முத்துமாலை. முத்தமாலை முடிமுதல் வருட (பெருங். இலாவாண.4, 136). . |
| முத்தமிடு - தல் | muttam-iṭu- v. tr. <>முத்தம்1+. To kiss; அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகாளாற் பரிசித்தல். |
| முத்தமிழ் | mu-t-tamiḻ n. <>மூன்று+. The three kinds of literature in Tamil, viz., iyal, icai, nāṭakam; இயல் , இசை, நாடகம் என்னும் மூவகையான தமிழ். மும்முரசு முத்தமிழும் (வள்ளுவ மா.10). |
| முத்தமிழ்முனிவன் | muttamiḻ-muṉivaṉ n. <>முத்தமிழ்+. Agastya, as the exponent of muttamiḻ; [முத்தமிழையும் பரவச்செய்த இருடி] அகத்தியன். முத்தமிழ் முனிவன் கேட்ப (காஞ்சிப்பு. வீரராக. 6). |
| முத்தமிழுரியோன் | muttamiḻ-uriyōṉ n. <>id.+. 1. See முத்தமிழ்முனிவன். (யாழ். அக.) . 2. Bhairava; |
| முத்தமுண்(ணு) - தல் | muttam-uṇ- v. tr. <>முத்தம்1+. See முத்தமிடு-. தணிவற முத்தமுண்டாள் (திருவாலவா. 45, 15). . |
| முத்தர் | muttar n. Mound, hillock ; திடர். (W.) |
| முத்தரை | muttarai n. <>முத்து2+. Waistband made of pearls; அரையிலணியும் முத்துவடம். பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் (சிலப், 6, 87). |
| முத்தரையர் | mu-t-taraiyar n. perh. மூன்று+தரை. A dynasty of feudal chiefs; ஒரு சார் சிற்றரசர். பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் (நாலடி, 200). |
| முத்தலை | mu-t-talai n. <>id.+. See முத்தலைக்கழு. (திவா.) . |
| முத்தலைக்கழு | muttalai-k-kaḻu n. <>முத்தலை+. The trident, as having three heads or spikes ; சூலம். (பிங்.) முத்தலைக் கழுக்கள் வீசுவன (திருவிளை. திருநுகர. 24). |
| முத்தலைவேல் | muttalai-vēl n. <>id.+. See முத்தலைக்கழு. (பிங்.) . |
| முத்தலைவேலோன் | muttalai-vēlōṉ n. <>முத்தலைவேல். Bhairava; பைரவன். (சது.) |
| முத்தவள்ளி | mutta-vaḷḷi n.<>முத்தம்1+ valli. A garland of pearls, as shaped like a creeper; முத்துக்கோத்த கொடிபோல்வதோர் கழுத்தணி. முத்த வள்ளியொடு மும்மணி சுடா (பெருங். உஞ்சைக் 34, 203). |
| முத்தவி | muttavi n. <>முத்து2+ அவி-. Castor oil ; ஆமணக்கெண்ணேய் (சங். அக.) |
| முத்தழல் | mu-t-taḻal n. <>மூன்று+. See முத்தீ. முத்தழல் வேள்வி (காசிக. சிவசன் தெய். 23). . |
| முத்தளகி | muttaḷaki n. See முருங்கை. (சங்.அக.) . |
| முத்தன் 1 | muttaṉ n. <>mukta. 1. One who has attained salvation; Jivan-mukta; முத்திபெற்றவன். முத்தனாய்ப் பிரகாசனாமே (சி. சி. 4, 19). 2. šiva, as being by nature free from bonds; 3. Viṣṇu; 4. Bhairava; 5. Arhat; 6. The Buddha; |
| முத்தன் 2 | muttaṉ n. <>mugdha. 1. One who gives pleasure, as a child ; பிரியன். (பாரத. சூது. 14.) 2. Fool; |
| முத்தாகலாபம் | muttā-kalāpam n. <>muktā-kalāpa. See முத்தாரம். (W.) . |
| முத்தாகாரம் | muttākāram n. <>muktā-gāra. Mother of pearl ; முத்துச்சிப்பி. (W.) |
| முத்தாசனம் | muttācaṉam n. <>mukta+āsana. A yogic posture which consists in placing the left ankle beneath the region of the anus and the right ankle under the left so placed, while the head and neck are held straight with the body, one of nine ācaṉam, q.v.; ஆசனம் ஒன்பதனுள் இடது கணுக்காலைக் குதத்தின் கீழம் வலது கணுக்காலை இடது கணுக்காலின் கீழம் வைத்துத் தலை முதலியவை நேர்நிமிர இருக்கும் யோகாசனவகை. |
| முத்தாடு - தல் | muttāṭu- v. tr. <>முத்து4+ஆடு-. [T. muddādu.] To kiss; முத்தமிடுதல் முகத்தின் முத்தாடியும் (காஞ்சிப்பு. திருக்கண். பு. 137). |
| முத்தாத்துக்கோல் | muttāttukkōl n. <>முள் +தாற்றுக்கோல். Balance; தூக்குக்கோல். (G. sm. D. I, i, 284.) |
