Word |
English & Tamil Meaning |
|---|---|
| முத்திபஞ்சாட்சரம் | mutti-pacāṭcaram n. <>id.+. A form of pacākkaram with praṇava; பிரணவஞ் சேர்ந்த பஞ்சாக்கர மந்திர வகை (பஞ்சக்கர. 45, உரை.) |
| முத்திபதம் | mutti-patam n. <>id.+. 1. The state of final beatitude; மோட்சபதவி. 2. The state of spiritual knowledge; |
| முத்திமார்க்கம் | mutti-mārkkam n. <>id.+. 1. See முத்திநெறி. . 2. The course of karma; |
| முத்திமுத்திரை | mutti-muttirai n. The River Tāmiraparuṇi; தாமிரபருணி. (நாமதீப. 525.) |
| முத்திமுதல் | mutti-mutal n. <>முத்தி2+. Soul, as eligible for salvation ; முத்தியைப்பெறு தற்கு முதலாகிய ஆன்மா முத்திமுதற்கே மோகக்கொடி படர்ந்து (திருவுந்தி. 41). |
| முத்தியெறி - தல் | mutti-y-eṟi- v. tr. prob. முத்து-+எறி-. To remove entirely, put away; கழித்தல். முத்தியெறிந்து விடற்கு (கலித். 64). |
| முத்திரமம் | muttiramam n. Cinnamon . See இலவங்கப்பட்டை. (சங். அக.) |
| முத்திராசாலை | muttirā-cālai n. <>mudrā+. Printing office ; அச்சுக்கூடம். Colloq. |
| முத்திராதாரணம் | muttirā-tāraṇam n. <>id.+. Wearing the emblems of Viṣṇu impressed on one's body ; சங்க சக்கர முதலிய முத்திரைகள் சரீரத்தில் ஒற்றிகொள்ளுவகை . |
| முத்திராதானம் | muttirā-tāṉam n. <>id.+. Ceremony of initiation by branding the emblems of caṅku and cakkiram on a person's shoulders ; அக்கினியிற் சூடேறப் பெற்ற சங்கசக்கர முத்திரைகளைத் தோள்களில் ஒற்றும் சடக்கு சாத்திமேன் முத்திராதனம் (பரிபோத. 11, 11). |
| முத்திரி 1 | muttiri n. <>id.+. 1. A kind of ear-ornament , in the form of a hollow cylinder; உட்டுளையமைந்த காதணிவகை. 2. Sign, seal; |
| முத்திரி 2 - த்தல் | muttiri- 11 v. tr. <>முத்திரி. To seal; முத்திரையிடுதல். |
| முத்திரிகை | muttirikai n. <>mudrikā. Engraved signet or seal; எழுத்துப்பதிக்கப்பெற்ற மோதிரம். (W.) |
| முத்திருக்கஞ்செடி | muttirukka-ceṭi n. Safflower . See செந்துருக்கம். (யாழ். அக.) |
| முத்திருக்கன்செவி | muttirukkaṉ-cevi n. cf. முத்தெருக்கன்செவி. A plant . See நிலக்கடம்பு. (மூ. அ.) |
| முத்திருங்கஞ்செவி | muttiruṅka-cevi n. See முத்திருக்கன்செவி. (W.) . |
| முத்திரை | muttirai n. <>mudrā. 1. Impress, mark; அடையாளம். அசாதாரண முத்திரையோடே வரவேணு மென்கிறார். (திவ். பெரியாழ்.1, 8, 9, வ்யா). 2. Seal, signet; 3. Stamp, as for postage, for court fees; 4. Badge of a soldier or peon; 5. Composer's name introduced at the end of a song or poem, as his mark; 6. cf. முத்திரி. Ear ornament; 7. Hand-pose in worship; 8. (Nāṭya.) Handpose; 9. The hole in a flute or pipe which is not fingered whild playing; |
| முத்திரைக்கடுதாசி | muttirai-k-kaṭutāci n. <>முத்திரை+. Stamped paper; முத்திரையிட்ட பத்திரம். (C. G.) |
| முத்திரைக்கம்பு | muttirai-k-kampu n. <>id.+. See முத்திரைக்கோல், 1. (W.) . |
| முத்திரைக்கூடம் | muttirai-k-kūṭam n. <>id.+. 1. Prison; காவலறை. (யாழ். அக.) 2. Place where goods are stamped; |
| முத்திரைக்கோல் | muttirai-k-kōl n. <>id.+. 1. Seal; முத்திரையச்சு. (W.) 2. Wooden seal for marking a heap of grain; |
| முத்திரைகுத்திப்பார்ப்பார் | muttiraikutti-p-pārppār n. <>id.+.+குத்து-+. Mādhva Brahmins, who impress, with sandal paste, the marks of pacāyutam of Viṣṇu on different parts of their persons; சங்குசக்கர முதலிய பஞ்சாயுத அடையாளங்களைச் சரீரத்திற் சந்தனத்தாற் பதித்துக் கொள்வோரான மாத்துவப்பிராதமணர். Loc. |
| முத்திரைச்சங்கு | muttirai-c-caṅku n. <>id.+. A kind of conch; சங்குவகை. முத்திரைச் சங்கொன் றூத. (S. I, I, ii, 275, 11). |
