Word |
English & Tamil Meaning |
|---|---|
| முத்து 4 | muttu n. <>முத்து-. Kiss; முத்தம். Colloq. |
| முத்து 5 | muttu n. A water-bird; வெண்குருகு. (அரு. நி.) |
| முத்துக்கடுக்கன் | muttu-k-kaṭukkaṉ n. <>முத்து2+. Pearl ear-ring; முத்துக்கட்டிய கடுக்கனென்னுங் காதணி. (W.) |
| முத்துக்கண்டி | muttu-k-kaṇṭi n. <>id.+. Pearl necklace; முத்தாலாகிய கழுத்தணிவகை. |
| முத்துக்கற்கம் | muttu-k-kaṟkam n. <>id.+. (W.) 1. Oil cake of castor beans; முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு. 2. Medicine prepared by calcining pearls; |
| முத்துக்கறுப்பன் | muttu-k-kaṟuppaṉ n. <>id.+. A village deity; ஒரு கிராமதேவதை. |
| முத்துக்குடை | muttu-k-kuṭai n. <>id.+. One of the three umbrellas of Arhat; அருகனது மூன்று குடையுளொன்று. (W.) |
| முத்துக்குத்து - தல் | muttu-k-kuttu- v. intr. <>id.+. 1. To reject inferior pearls which may readily break; தாழ்ந்த முத்தை நீக்குதல். 2. To pound rice, for using it for sacred purposes, chanting mantras; |
| முத்துக்குமாரன் | muttu-k-kumāraṉ n. <>id.+. Skanda; முருகக்கடவுள். முத்துக்குமாரனைத் தனிப்புரக்க (குமர. பிர. முத்துக்குமார. பிள். 2). |
| முத்துக்குளி - த்தல் | muttu-k-kuḷi- v. intr. <>id.+. To dive for pearl-oysters; முத்துச்சிப்பி யெடுப்பதற்காகக் கடலுள் மூழ்குதல். |
| முத்துக்குளி | muttu-k-kuḷi n. <>id.+. Pearl-fishery; நீரில் முழகி முத்தெடுக்கை. (W.) |
| முத்துக்குறி | muttu-k-kuṟi n. <>id.+. Divination by means of a handful of pearls; கையிலுள்ள முத்துக்களைக் கணக்கிட்டுப் பலன் சொல்லுங் குறி. Loc. |
| முத்துக்கொட்டை | muttu-k-koṭṭai n. <>id.+. See முத்து2, 3. (தைலவ. தைல. 124, உரை.) . |
| முத்துக்கொட்டைச்செடி | muttu-k-koṭṭai-c-ceṭi n. <>முத்துக்கொட்டை+. Castorplant. See ஆமணக்கு. |
| முத்துக்கொண்டை | muttu-k-koṇṭai n. <>முத்து2+. Head-dress of pearls, as for idols; விக்கிரகத்தின் சிரசில் அணியும் முத்தாலான தலையணிவகை. Colloq. |
| முத்துக்கொதி | muttu-k-koti n. <>id.+. Stage in the boiling of rice, when bubbles begin to appear; முதற் கொப்புளங் கிளம்பும் அரிசிக்கொதி. |
| முத்துக்கொம்பன் | muttu-k-kompaṉ n. <>id.+. 1. Elephant with pearly-white tusks; முத்துநிறமான கொம்புள்ள யானை. (W.) 2. A sea-fish; |
| முத்துக்கொறித்தல் | muttu-k-koṟittal n. <>id.+. Chirp of a lizard; பல்லி சத்தமிடுகை. Nā. |
| முத்துக்கோவை | muttu-k-kōvai n. <>id.+. See முத்துமாலை. (W.) . |
| முத்துச்சம்பா | muttu-c-campā n. <>id.+. A kind of paddy that matures in five months; ஐந்துமாதங்களில் விளையும் ஒருவகை நெல். (A.) |
| முத்துச்சல்லி | muttu-c-calli n. <>id.+. Ornamental hangings of strung pearls; முத்துக்கோத்த தொங்கல். (சங். அக.) |
| முத்துச்சலாபம் | muttu-c-calāpam n. <>id.+. 1. Pearl-fishery; முத்துக்குளிக்கை. 2. The out-turn in pearl-fishery; |
| முத்துச்சனிப்பு | muttu-c-caṉippu n. <>id.+. Place where pearls are formed; முத்து உண்டாகும் இடம். (யாழ். அக.) |
| முத்துச்சிப்பி | muttu-c-cippi n. <>id.+. (W.) 1. Pearl-oyster; முத்துள்ள ஒட்டினையுடைய நீர்வாழ்பிராணி. 2. Mother of pearl; |
| முத்துச்சிவிகை | muttu-c-civikai n. <>id.+. Palanquin adorned with pearls; முத்துக்களால் அலங்கரித்த பல்லக்கு. (W.) |
| முத்துச்சுண்ணம் | muttu-c-cuṇṇam n. <>id.+. Lime obtained by calcining pearls; முத்தை நீற்றிய சுண்ணம். (பதார்த்த. 135.) |
| முத்துச்சுண்ணாம்பு | muttu-c-cuṇṇāmpu n. <>id.+. See முத்துச்சுண்ணம். . |
| முத்துச்சொரிதல் | muttu-c-corital n. <>id.+ சொரி-. Offering of boiled rice to a deity; அன்னம் நிவேதிக்கை. Loc. |
| முத்துச்சோளம் | muttu-c-cōḷam n. <>id.+. Indian corn, maize, Zea mays; வெள்ளைச்சோளம். (யாழ். அக.) |
| முத்துடக்கன் | muttuṭakkaṉ n. A plant. See நீலக்கடம்பு. (சங். அக.) |
