Word |
English & Tamil Meaning |
|---|---|
| முத்துத்தரியம் | muttuttariyam n. முத்து2+. Upper garment decorated with pearls; முத்தினால் அலங்கரித்த மேலாடை. முத்துத் தரியமும் பவழப்பிணையலும் (பெருங். இலாவாண. 1, 5). |
| முத்துத்தாமம் | muttu-t-tāmam n. <>id.+. 1. See முத்துமாலை. கோலமாமணி யாரமு முத்துத்தாமமும் (திவ். அமலனாதி. 9). . 2. See முத்துச்சல்லி. முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1, 49). |
| முத்துத்தாழ்வடம் | muttu-t-tāḻvaṭam n. <>id.+. See முத்துமாலை. (W.) . |
| முத்துநீர் | muttu-nīr n. <>id.+. Dewdrop; பனிநீர்த் திவலை. முத்து நீர்ச் சாந்தடைந்த மூஉய்த்தத்தி (பரிபா. 10, 13). |
| முத்துநெய் | muttu-ney n. <>id.+. Castor oil; சிற்றுமணக்கு நெய். (பதார்த்த. 162.) |
| முத்துப்பந்தர் | muttu-p-pantar n. <>id.+. Canopy decorated with strings of pearls; முத்துமாலைகளால் அலங்கரித்த விதானமமைந்த பந்தல். முத்துப் பந்தரி னிற்குங் குருளைக்கும் (தமிழ்நா. 119). |
| முத்துப்பல்லக்கு | muttu-p-pallakku n. <>id.+. See முத்துச்சிவிகை . |
| முத்துப்புரி | muttu-p-puri n. <>id.+. See முத்துச்சல்லி. முத்துப்புரிநாற்றி (பெருங். வத்தவ. 5, 48). . |
| முத்துப்போடு - தல் | muttu-p-pōṭu- v. intr. <>id.+. To break out in pustules, as in smallpox or measles; அம்மைநோயில் முத்துத் தோன்றுதல். (W.) |
| முத்துமணல் | muttu-maṇal n. <>id.+. Small pearl resembling a grain of sand; மணல் போன்ற சிறிய முத்து. நற்பெரும் பந்தருண் முத்து மணல் பரப்பி (பெருங். உஞ்சைக்.48, 88). |
| முத்துமழை | muttu-maḻai n. <>id.+. The seasonal rain; பருவமழை. Loc. |
| முத்துமழைபெய் - தல் | muttu-maḻai-pey- v. intr. <>id.+ மழை+. To prosper; to amass wealth; செல்வம் பொங்குதல். Colloq. |
| முத்துமாதுளை | muttu-mātuḷai n. <>id.+. A species of pomegranate; மாதுளைவகை. (யாழ். அக.) |
| முத்துமாலை | muttu-mālai n. <>id.+. Garland of pearls; முத்துக்கோத்த கழத்தணி. (திவ். அமலனாதி. 9, வ்யா.) |
| முத்துமாலைக்குறுவை | muttu-mālai-k-kuṟuvai n. <>id.+ மாலை3+. A kind of paddy; ஒருவகை நெல். முத்துமாலைக் குறுவை (பறாளை. பள்ளு. 24). |
| முத்துமுறி | muttu-muṟi n. <>id.+. Best bell-metal, as pearl-white; முத்துப்போல் வெண்மையான உயர்ந்த வெண்கலம். Loc. |
| முத்துமுறிவெண்கலம் | muttumuṟi-veṇ-kalam n. <>முத்துமுறி+. See முத்துமுறி. Loc. . |
| முத்துருட்சிமணி | mutturuṭci-maṇi n. <>முத்து2 + உருட்சி+. Pearl-like gold bead; முத்துப்போலுருண்ட பொன்மணி. (W.) |
| முத்துருவி | mutturuvi n. prob. mudrā. An ear-ornament for women; மகளிர் காதணி வகை. (யாழ். அக.) |
| முத்துருளைமணி | mutturuḷai-maṇi n. <>முத்து2 + உருளை+. See முத்துருட்சிமணி. (W.) . |
| முத்துலையிடு - தல் | mu-t-tulai-y-iṭu- v. intr. <>மூன்று + துலை4+. To exaggerate threefold; ஒன்றுக்கு மூன்று கற்பித்தல். முத்துலையிட்டுக் கொண்டு (திருவிருத். 71, வ்யா. பக். 370). |
| முத்துவட்டம் | muttu-vaṭṭam n. <>முத்து2+. 1. A kind of round pearl; ஒருவகை யுருண்டை முத்து. (S. I. I. ii, 143, 30.) 2. Unit consisting of a certain number of pearls; |
| முத்துவடம் | muttu-vaṭam n. <>id.+. 1. See முத்துமாலை. முத்துவடமு முழுமணிக் காசும் (பெருங். மகத. 17, 164). . 2. A kind of saree; |
| முத்துவண்ணச்சேலை | muttu-vaṇṇa-c-cēlai n. <>முத்துவர்ணம்+. A kind of saree, of olden days; முற்காலத்து வழங்கிய புடைவைவகை. (பணவிடு. 303.) |
| முத்துவர்ணச்சேலை | muttu-varṇa-c-cēlai n. See முத்தவண்ணச்சேலை. (விறலிவிடு. 717.) . |
| முத்துவர்ணம் | muttu-varṇam n. <>முத்து2+. Pearl-like colour, as of teeth; வெள்ளை நிறம். முத்துவர்ண மூரனல்லாள் (விறலிவிடு. 717). |
| முத்துவெள்ளை | muttu-veḷḷai n. <>id.+. 1. White lead, Ceruse; ஈயவெள்ளை. 2. A kind of paddy; |
| முத்துளம் | muttuḷam n. <>id.+ உள். Bamboo; மூங்கில். (சங். அக.) |
| முத்தூர்க்கூற்றம் | muttūr-k-kūṟṟam n. See முத்தூற்றுக்கூற்றம். (சிலப். 11, 22, உரை.) . |
| முத்தூற்றுக்கூற்றம் | muttūṟṟu-k-kūṟṟam n. <>முத்தூறு+. A tract of land belonging to the Vēḷir and annexed to the Pāndya kingdom later on; வேளிர்க் குரியதாயிருந்து பாண்டிநாட்டின் பகுதியான நிலப்பிரிவு. (புறநா. 24, உரை.) |
