Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதல்செலவு | mutal-celavu n. <>முதல் + Income and expenditure; வரவுசெலவு. Nā. |
| முதல்தரம் | mutal-taram n. <>id.+. See முதற்றரம். . |
| முதல்தீர்த்தம் | muttal-tīrttam n. <>id.+. Honour of receiving holy water first in a congregation in a Viṣṇu temple; திருமால் கோயிலில் கோஷ்டியில் முதன்முதலாகத் தீர்த்தம் பெரும் மரியாதை. Vaiṣṇ. |
| முதல்பிடி | mutal-piṭi n. <>id.+. 1. Conductor of a chit fund; சீட்டுநிதி நடத்துவோன். Tinn. 2. Treasurer ; |
| முதல்மரியாதை | mutual-mariyātai n. <>id.+. First preference in doing the honours, as at a temple; கோயில் முதலியவற்றில் முதலாவதாகப் பெரும் உபசாரம். |
| முதல்ரகம் | mutual-rakam n. <>id.+. First sort, best grade; உயர்தரம். (C. G.) |
| முதல்ரதம் | mutalratam. n. Corr. of முதல்ரகம். . |
| முதல்வஞ்சி | mutal-vaci n. <>முதல்+. See முதுமொழிவஞ்சி. (புறநா. 37, முதற்குறிப்பு.) . |
| முதல்வடி | mutal-vaṭi n. <>id.+. 1. Oil obtained in the first distillation; முதலில் வடிக்கும் தைலம். Loc. 2. Alcohol obtained in the first distillation; |
| முதல்வர் | mutalvar n. <>id. 1. Persons beginning with; முதலாயினார். முந்தை முதல்வர் (பு. வெ. 1, 19). 2. Celestials; |
| முதல்வள்ளல்கள் | mutual-vaḷḷalkaḷ n. <>id.+. The liberal chiefs of the first order whose bounty knows no limit seven in number, viz., Cempiyaṉ, Kāri or Cakāri according to Aciriya nikaṇṭu, Virāṭaṉ , Niruti, Tuntumāri, Cakaraṉ , Naḷaṉ; வரையாது கொடுப்போராகிய செம்பியன், காரி அல்லது சகாரி (ஆ. நி.), விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன் ஆகிய ஏழு வள்ளல்கள். (சூடா.) |
| முதல்வன் | mutalvaṉ n. <>id. 1. One who is first, chief, head; தலைவன். மூவர்க்கு முதல்வரானார் (தேவா. 453, 2). 2. God, as the First Cause; 3. King; 4. Father; |
| முதல்வன்சேய் | mutalvaṉ-cēy n. <>முதல்வன்+. Skanda; முருகன். (உரி.நி.) |
| முதல்வன்வாக்கு | mutalvaṉ-vākku n. <>id.+. The āgamas; ஆகமம். (பிங்.) |
| முதல்வாடை | mutal-vāṭai n. <>முதல்+. Block of fields nearest the source of irrigation; முதன்முதலிற் பாசனமாகும் வயல்கள். (W. G.) |
| முதல்வி | mutalvi n. Fem. of முதல்வன். Lady of first rank; mistress; தலைவி. (சூடா.) மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்ற வாறு (தக்கயாகப் .321, உரை). |
| முதல்வெண்குருத்து | mutal-veṇ-kuruttu n. <>முதல்+வெண்-மை+. First sprout; முதலாவது தோன்றும் குருத்து. (பிங்.) |
| முதல்வேதம் | mutual-vētam n. <>id.+. Rg Vēda, as the first Vēda; இருக்குவேதம். (பிங்.) |
| முதல்வேர் | mutal-vēr n. <>id.+. Taproot; அடிவேர். |
| முதலக்கரம் | mutal-akkaram n. <>id.+. The primary letters comprising the twelve vowels and the eighteen consonants; பன்னீருயி ரெழுத்தும் பதினெண் மெய்யெழுத்தும் (சங். அக.) |
| முதலடி | mutal-aṭi n. <>id.+. 1. Beginning; தொடக்கம். Loc. 2. First crop of the year; |
| முதலடிப்பருவம் | mutalaṭi-p-paruvam n. <>முதலடி+. First ploughing season; உழுவதற்குள்ள முதற்பருவம். Tj. |
| முதலவன் | mutalavaṉ n. <>முதல். See முதல்வன். முதலவன் முதலிய முந்தையோர் (கம்பரா. பள்ளிபடை. 50). |
| முதலற்றுப்போ - தல் | mutal-aṟṟu-p-pō- v. intr. <>id.+. To be totally extinguished, as a family; to be eradicated; அடியோடழிதல். (W.) |
| முதலனுமானம் | mutal-aṉumāṉam n. <>id.+. Direct inference of an effect from a root-cause, as that the rain-clouds will rain; முதற்காரணத்தைக்கொண்டு அனுமானிக்கை. (W.) |
| முதலாய் | mutal-āy adv. <>id.+. Even; கூட. தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது. (W.) |
| முதலாயிரம் | mutal-āyiram n. <>id.+. The first of the four sections of Nālāyira-p-pirapantam; நாலாயிரப்பிரபந்தத்தில் முதலாவது பகுதி. |
