Word |
English & Tamil Meaning |
|---|---|
| முத்தூறு | muttūṟu n. See முத்தூற்றுக்கூற்றம். குப்பைநெல்லின் முத்தூறுதந்த கொற்றநீள் குடை (புறநா. 24). . |
| முத்தெட்டு | mutteṭṭu n. Field cultivated free of wages for the proprietor by his farm-labourers; பண்ணையாருக்குப் பண்ணையாட்கள் கூலியின்றிப் பயிரிடும் நிலம். (J.) |
| முத்தெயில் | mutteyil n. <>முது-மை+எயில். Ancient fortress; பழமையான மதில். முத்தெயின் மதுரைதன்னில் (திருவாலவா. 62, 7). |
| முத்தெருக்கன்செவி | mutterukkaṉcevi n. cf. முத்திருக்கன்செவி. A plant. See நிலக்கடம்பு. (பாலவா. 886.) |
| முத்தெழும்பு - தல் | mutteḻumpu- v. intr. <>முத்து2+. See முத்துப்போடு-. (W.) . |
| முத்தெறி - தல் | mutteṟi- v. intr. <>id.+. See முத்துப்போடு-. (யாழ். அக.) . |
| முத்தை 1 | muttai n. <>முந்தை1. Front; முன்னிடம். முத்தை வரூஉங் காலந்தோன்றின் (தொல். எழுத்.164). |
| முத்தை 2 | muttai n. cf. மொத்தை. [T. muddha.] 1. Lump, large mass; திரட்சி. (சூடா.) 2. Boiled rice gathered into a ball; |
| முத்தை 3 | muttai n. <>mugdhā. Innocent girl; girl between the ages of five and seven; பேதைப்பருவத்தாள். (யாழ். அக.) |
| முத்தை 4 | muttai n. <>mustā. See முத்தக்காசு. (சங். அக.) . |
| முத்தையன் | muttaiyaṉ n. <>முத்து2 + ஐயன். See முத்துக்குமாரன். (யாழ். அக.) . |
| முத்தொகைவினா | mu-t-tokai-viṉā n. <>மூன்று+. Rule of three; rule of proportion; முதல் எண்ணுக்கும் இரண்டாம் எண்ணுக்குமுள்ள ஏற்றத்தாழ்வுக்கொத்தபடி மூன்றாவது எண் ஒன்றுக்குரிய மற்றோர் எண்ணைக் காணுங் கணக்கு முறை. (W.) |
| முத்தொருகன் | muttorukaṉ n. See முத்தடக்கன். (சங். அக.) . |
| முத்தொழில் | mu-t-toḻil n. <>மூன்று+. The triple functions of Godhead, viz., paṭaippu, kāppu, aḷippu; படைப்பு காப்பு அழிப்பு என்ற கடவுளின் மூவகைச் செயல். (பிங்.) |
| முத்தொழிலர் | mu-t-toḷilar n. <>id.+. 1. šūdras; சூத்திரர். (பிங்.) 2. Vaišyas, as engaged in three pursuits, viz., agriculture, trade, herding cattle; |
| முத்தொழிற்பகவன் | muttoḻiṟ-pakavaṉ n. <>முத்தொழில்+. God, the Supreme Being; கடவுள். (யாழ். அக.) |
| முத்தொள்ளாயிரம் | mu-t-toḷḷāyiram n. <>மூன்று+. A poem of 2700 veṇpā, in honour of the Chēra, Pāṇdya and Chōḻa kings, having 900 each; சேர பாண்டிய சோழருள் ஒவ்வொருவருக்கும் 900 செய்யுட்களாக ஈராயிரத்தெழு நூறு வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல். |
| முத்தோஷம் | mu-t-tōṣam n. <>id.+. 1. The three humours of the body, viz., vātam, pittam, cilēṭṭumam; வாத பித்த சிலேட்டுமங்கள். 2. Disturbance of the equilibrium of the three humours. 3. (Log.) The three possible defects in definition, viz., ativiyāpti, avviyāpti, acampavam; |
| முதங்கி | mutaṅki n. A kind of brinjal; கத்தரிவகை. (சங். அக.) |
| முதம் | mutam n. <>mud. Pleasure, delight; உவகை. புந்தியின் முதமெய்தி (கந்தபு. மீட்சிப். 11). |
| முதல் | mutal n. [K. mudal.] 1. Beginning; ஆதி. முதலூழியிறுதிக்கண். (சிலப். 8, 1, உரை). 2. First, as in rank, place, etc.; 3. Cause; 4. God, as the First Cause; 5. One who is first or oldest; 6. Best, that which is superior; 7. That which is qualified; 8. Principal, fund, capital, money yielding interest; 9. Root; 10. Tuber; 11. Base, foot, bottom or lowest part of anything; 12. Stump; lowest part of stem; 13. Place; 14. (Akap.) See முதற்பொருள், 2. முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப தொல். பொ. 4). 15. Whole, integral thing; 16. Stock, store; 17. (Mus.) A variety of tune; 18. Cost price; 19. (Gram). See முதலக்கரம். (நன். 59). --adv. 20.See முதலான. (W.)- prep. 1. (Gram.) Termination of the locative case; 2. (Gram.) Termination of the ablative case, meaning 'from henceforth'; |
