Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதன்முதல் | mutaṉ-mutal n. <>id.+. The very first time; ஆரம்பகாலம். |
| முதன்முன்னம் | mutaṉ-muṉṉam n. <>id.+. The very beginning; தொடக்கம். அடியே னடைந்தேன் முதன்முன்னமே (திவ். திருவாய். 2, 3, 6). |
| முதன்மை | mutaṉmai n. <>id. Priority; superiority, supremacy; தலைமை. கூறி முதன்மை (கம்பரா. மந்தரை. 1). |
| முதனடை | mutaṉaṭai n. <>id.+நடை. (Mus.) Slow-measured song, one of the four varieties of iyakkam, q.v.; இயக்கம் நான்கனுள் மிகத்தாழ்ந்த செலவினையுடைய பாடல். (சிலப். 3, 67, உரை.) |
| முதனா | mutaṉā n. <>id.+நா2. Base or innermost part of the tongue; நாக்கின் அடிப்பாகம். ஙகார முதனா அண்ணம் (தொல். எழுத். 89). |
| முதனாள் | mutaṉāḷ n. <>id.+நாள். 1. The first nakṣatra. See அசுவினி. (சூடா.) 2. The first day; 3. Previous day |
| முதனிலை | mutaṉilai n. <>id.+நிலை. 1. That which stands first; முதலில் நிற்பது. முதனிலை மூன்றும் (தொல். சொல். 230). 2. (Gram.) Root form; 3. Cause; 4. Outer door; |
| முதனிலைத்தீவகம் | mutaṉilai-t-tīvakam n. <>முதனிலை+. (Rhet.) A figure of speech in which a word used in the beginning of a sentence is understood in other parts also; ஒரு சொல் கவியின் முதலில் நின்று குணமுதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள் விளக்குந் தீவகவணிவகை. (தண்டி. 38.) |
| முதனிலைத்தொழிற்பெயர் | mutaṉilai-t-toḻiṟpeyar n. <>id.+. (Gram.) Verbal noun formed from a verbal root without any suffix and without any variation of the root form, as kuṟi; தன்னியல்பின் மாறாத வினைப்பகுதியே தொழிற்பெயராக நிற்பது. (குறள், 117, உரை.) |
| முதனிலைதிரிந்ததொழிற்பெயர் | mutaṉilai-tirinta-toḷiṟpeyar n. <>id.+. (Gram.) Verbal noun formed by modifying the initial letter of a verbal root as kēṭu from keṭu; வினைப்பகுதி முதலெழுத்து திரிந்துவருவதனால் தொழிற் பெயராய் நிற்பது. |
| முதனிலைவிளக்கு | mutaṉilai-viḷakku n. <>id.+. (Rhet.) See முதனிலைத்தீவகம். (W.) . |
| முதனிறம் | mutaṉiram n. A kind of black stone; மாங்கிசச்சிலை. (யாழ். அக.) |
| முதனினைப்பு | mutaṉiṉaippu n. <>முதல்+நினைப்பு. Mnemonic formed of initial syllables of stanzas of a poem or work; நூல் அல்லது உதாரணப் பாடல்களை நினைப்பூட்டும் அப்பாடல்களின் முதற்குறிப்புச் செய்யுள். பாட்டின் முதனினைப் பாகுமன்றே (காரிகை, ஒழிபி. ஈற்றுச் செய்யுள்). |
| முதனூல் | mutaṉūl n. <>id.+நூல். 1. Original or primary work regarded as divine, one of three kinds of nūl, q,v.; நூல்வகை மூன்றனுள் பிறநூலைப் பின்பற்றாது இறைவனால் இயற்றப்பபெற்றது. (தொல். பொ. 649.) 2. Source of a vaḻi-nūl; |
| முதாம் | mutām adj. <>U. mudām. Permanent, constant; நிரந்தரமான. (C. G.) |
| முதாம்சிப்பந்தி | mutām-cippanti n. <>முதாம்+. Permanent employee; நிரந்தரமான உத்தியோகஸ்தன். (C. G.) |
| முதார்சிங்கி | mutārciṅki n. Litharge. See மதார்சிங்கு. Loc. |
| முதார்மாடு | mutār-māṭu n. <>முதாரி1+. Milch cow almost dry; பால்மறுக்கு நிலையிலுள்ள பசு. Loc. |
| முதாரி 1 | mutāri n. <>முது-மை+ஆர்-. 1. Being old or ancient; முதுமையுறுகை. முதாரிப்பாண (புறநா. 138). 2. Calf almost weaned; 3. See முதார்மாடு. (சங். அக.) 4. That which is ripe; |
| முதாரி 2 | mutāri n. <>id.+prob. அரி. Bracelet; முன்கை வளையல். முன்கை முதாரியு மொளிகால (குமர. பிர. முத்துக். பிள். 17). |
| முதாரு | mutāru n. See முதாரி,1, 2, 3. (W.) . |
| முதாருப்பால் | mutāru-p-pāl n. <>முதாரு+. Milk of a cow that is almost dry; கறப்பதற்கு மறுக்குநிலையிலுள்ள பசுவின்பால். (W.) |
| முதிசம் | muticam n. <>முதுசொம். Ancestral property; பூர்வீகச்சொத்து. (J.) |
| முதிசல் | mutical n. Galangal. See அரத்தை. (சங். அக.) |
| முதிதபாவனை | mutita-pāvaṉai n. <>muditā+. See முதிதை, 3. (மணி. 30, 253, உரை.) . |
| முதிதம் | mutitam n. <>mudita. See முதம். (சங். அக.) . |
| முதிதை | mutitai n. <>muditā. 1. Joy delight, happiness; மகிழ்ச்சி. அறிவருண் முதிதை (ஞானவா. வீதக. 62). 2. A virtue which cleanses the mind, one of four citta-parikarmam q.v.; 3. A set mode of meditation practised by Buddhist ascetics to free themselves from anger; |
