Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதிரன் | mutiraṉ. n. <>mudira. 1. Libertine; தூர்த்தன். (யாழ். அக.) 2. Vile or wicked person; |
| முதிராப்பிண்டம் | mutirā--p-piṇṭam n. <>முதிர்-+ஆ neg.+. Embryo; முற்றாத கருப்பம். (W.) |
| முதிரிமை | mutirimai n. <>id. See முதுமை. (யாழ். அக.) . |
| முதிரை | mutirai n. prob. முதிர்-. 1. Pulse or other leguminous plant; அவரை துவரை முதலாயின. முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப் 55, 7). 2. Pigeon-pea, dholl; 3. East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia; |
| முது | mutu n. <>முது-மை. Vast knowledge; பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40). |
| முதுக்குடி | mutu-k-kuṭi n. <>id.+. See முதுகுடி. முரசு கடிப்பிகூஉ முதுக்குடிப் பிறந்தோன் (மணி. 1, 31). . |
| முதுக்குறை - தல் | mutukkuṟai- v. intr. <>id.+உறை-. To become ripe in wisdom; அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ (குறள், 707). |
| முதுக்குறை | mutukkuṟai n. <>முதுக்குறை-. See முதுக்குறைவு. முதுக்குறை நங்கை (சிலப். 15, 202). . |
| முதுக்குறைமை | mutukkuṟaimai n. <>முதுக்குறை. See முதுக்குறைவு. போற்றாய்களை நின்முதுக்குறைமை (கலித். 62). . |
| முதுக்குறைவி | mutukkuṟaivi n. <>id. Wise woman; பேரறிவுள்ளவள். சிறுமுதுக்குறைவி ... சேயிழைக் காற்று (பெருங். மகத. 22, 68). |
| முதுக்குறைவு 1 | mutukkuṟaivu n. <>id. 1. Great wisdom; பேரறிவு. (பிங்.) எதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (குமர. பிர. நீதிநெறி. 33). 2. Pubescence of girls; |
| முதுக்குறைவு 2 | mutu-k-kuṟaivu n. <>முது-மை+குறை-. Innocence; பேதைமை. (சூடா.) |
| முதுகண் | mutu-kaṇ n. <>id.+. Chief support; முக்கிய ஆதாரம். முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென (பெருங். உஞ்சைக். 36, 198). |
| முதுகயம் | mutu-kayam n. <>id.+. Sea; கடல். முதுகயந் தீப்பட (திவ். பெரியதி. 8, 5, 6). |
| முதுகன்றிருமல் | mutu-kaṉṟirumal n. <>id.+கன்று+. Hoose, a disease incident to cattle, especially calves; கன்றுகட்கு வரும் நோய் வகை. (M. L.) |
| முதுகன்று | mutu-kaṉṟu n. <>id.+. Weaned calf; பால்குடி மறந்த கன்று. (W.) |
| முதுகாஞ்சி | mutu-kāci n. <>id.+. 1. (Puṟap.) Theme of admonition and instruction by men of ripe wisdom to inexperienced youths; அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) 2. A poem on the mutukāci theme; |
| முதுகாட்டுத்தரிசு | mutu-kāṭṭu-t-taricu n. <>முதுகாடு+. 1. Land left waste for over 15 years; பதினைந்து வருடத்துக்கு மேலாக சாகுபடி செய்யப்படாத நிலம். (W.) 2. Waste land used as a burial or cremation ground; |
| முதுகாடு | mutu-kāṭu n. <>முது-மை+. 1. See முதையல். (திவா.) . 2. Cremation or burial ground; |
| முதுகால் | mutu-kāl n.<>id.+கால். Garden of betel vines more than a year old; ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம். (யாழ். அக.) |
| முதுகால்வெற்றிலை | mutu-kāl-veṟṟilai n. <>முதுகால்+. Betel leaf plucked from a full-grown creeper; முதிர்ந்த கொடியினின்று பறித்த வெற்றிலை. (C. G.) |
| முதுகிடு - தல் | mutukiṭu- v. intr. <>முதுகு+. To be defeated and flee; புறங்காட்டுதல். முகில்வண்ணன் றனக்கஞ்சி முதுகிட்டோடி (கம்பரா. உத்தர. இராவணன் பிறப். 39). |
| முதுகு 1 | mutuku n. [M. mudugu.] 1. Back; the region of the spine; உடம்பின் பின்புறம். முதுகிற் றைத்த வாளிகள் (கம்பரா. யுத்த. மந்திர. 116). 2. Back portion; back, as of a chair; 3. Middle place; 4. Ridge, mound; |
| முதுகு 2 | mutuku n. [T. mudugu.] Coarseness, grossness; முருடு. (W.) |
| முதுகுகாட்டு - தல் | mutuku-kāṭṭu- v. intr. <>முதுகு1+. See முதுகிடு-. . |
