Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதுகுகாண்(ணு) - தல் | mutuku-kāṇ- v. tr. <>id.+. To defeat ; தோல்வியுறச்செய்தல். இந்திரன் முதுகுகண்ட விராவணற் கேயச் சொன்னான் (கம்பரா. இலங்கைக்காண். 5). |
| முதுகுகொடு - த்தல் | mutuku-koṭu- v.intr. <>id.+. 1. See முதுகிடு-. போர்க்களத்தே சென்று முதுகுகொடாமல் (பட்டினப். பக். 538, உரை). . 2. To help, assist; 3. To allow one to mount, as a riding horse, etc.; 4. To carry a person on one's back, as a punishment or in a game; |
| முதுகுச்சுண்ணாம்பு | mutuku-c-cuṇ-ṇāmpu n. <>முதுகு2+. Coarse chunam; மணல் மிகுதியாய்ச் சேர்த்த சுண்ணாம்பு (C. E. M.) |
| முதுகுடி | mutu-kuṭi n. <>முது-மை+. Ancient and respectable family, as of warriors; தொன்றுதொட்டு வரும் குடி. முதுகுடி மகட்பாடஞ்சிய மகட் பாலானும் (தொல். பொ. 79). |
| முதுகுத்துணி | mutuku-t-tuṇi n. <>முதுகு2+. Coarse cloth; முருட்டுச்சீலை (C. E. M.) |
| முதுகுதாங்கி | mutuku-tāṅki n. <>முதுகு1+. Support to lean back on, as in a palanquin, in a chair or on a pial; சார்மணை. (W.) |
| முதுகுநீர்குத்தல் | mutuku-nīr-kuttal n. <>id.+நீர்1+. See முதுகுநீர்ச்சடங்கு Cempaṭava. . |
| முதுகுநீர்ச்சடங்கு | mutuku-nīr-c-caṭaṅku n. <>id.+id.+. A purificatory ceremony of pouring water upon the back of a woman in her first pregnancy; முதுகில் நீரூற்றிச்செய்யுஞ் சீமந்தச் சடங்கு. (W.) |
| முதுகுநூல் | mutuku-nūl n. <> முதுகு2+. Coarse yarn, opp. to caṉṉa-nūl; முருட்டு நூல். (W.) |
| முதுகுநெளி - த்தல் | mutuku-neḷi- v. intr. <> முதுகு1+. To shirk work; to be indolent; வேலைக்குச் சோம்புதல். Colloq. |
| முதுகுப்பிடிப்பு | mutuku-p-piṭippu n. <>id.+. Sprain of the back; முதுகில் வலியுண்டாக்கும் வாயுநோய்வகை. (M. L.) |
| முதுகுப்பிளவு | mutuku-p-piḷavu n. <>id.+. See முதுகுப்பிளவை. (M. L.) . |
| முதுகுப்பிளவை | mutuku-p-piḷavai n. <>id.+. Carbuncle appearing on one's back; முதுகிலுண்டாம் இராசபிளவை. (W.) |
| முதுகுமண்காட்டு - தல் | mutuku-maṇ-kāṭṭu- v. tr. <>id.+. To defeat in wrestling; மற்போரில் தோல்வியுறச்செய்தல். Loc. |
| முதுகுமண்கொடு - த்தல் | mutuku-maṇ-koṭu- v. intr. <>id.+. To be defeated in wrestling; மற்போரில் தோல்வியுறுதல். Loc. |
| முதுகுமுள் | mutuku-muḷ n. <>id.+. See முதுகெலும்பு. (W.) . |
| முதுகுமுள்ளணைதசை | mutuku-muḷ-ḷ-aṇai-tacai n. <>id.+. A muscle, Semispinalis dorsi; முதுகெலும்பினை யடுத்துள்ள தசை. (W.) |
| முதுகுரவர் | mutu-kuravar n. <>முது-மை+. Parents; தாய்தந்தையர். எம்முதுகுரவ ரென்னுற்றனர் கொல் (சிலப். 16, 60). |
| முதுகுருகு | mutu-kuruku n. <>id.+. An ancient poem of the first šaṅgam, not now extant; தலைச்சங்கத்து இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. (இறை. 1, உரை, 4.) |
| முதுகுன்றம் | mutu-kuṉṟam n. <>id.+. Viruttācalam, a šiva shrine in the South Arcot district; தென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள விருத்தாசலம் என்ற சிவதலம். முத்தாறு . . . நித்திலம் வாரிக்கொழிக்கு முதுகுன்றமே (தேவா. 981, 1). |
| முதுகுன்று | mutu-kuṉṟu n. <>id.+. See முதுகுன்றம். முத்தாறு வந்தடி வீழ்தரு முதுகுன்றடைவோமே (தேவா. 978, 1). . |
| முதுகெலும்பு | mutukelumpu n. <>முதுகு1+. Back-bone, vertebral column, spine; முதுகின் நடுவில் நீளமாக அமைக்கப்பட்டிருக்கும் எலும்புத்தண்டு. (W.) |
| முதுசாயம் | mutu-cāyam n. <>முது-மை+. Deep dye; அழுத்தமான சாயம். (W.) |
| முதுசார்வு | mutu-cārvu n. <>id.+. Palmyra or talipot leaves next to iḷa-cārvu; இளஞ்சார்வை யடுத்திருக்கும் பனையோலை. (J.) |
| முதுசூரியர் | mutu-cūriyar n. <>id.+சூரி2. One of the two poets known as Iraṭṭai-p-pulavar; இரட்டைப்புலவருள் ஒருவர். (தமிழ்நா. 113, தலைக்குறிப்பு.) |
| முதுசொம் | mutu-com n. <>id.+. See முதுபொருள். (J.) . |
| முதுசொல் | mutu-col n. <>id.+. See முதுமொழி, 1. தம்பானை சாய்ப்பற்றாரென்னு முதுசொல்லும் (திருவிசை. வேணாட்). (திவா.) . |
| முதுதரிசு | mutu-taricu n. <>id.+. See முதுகாட்டுத்தரிசு, 2. Nā. . |
