Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதுதலை | mutu-talai n. <>id.+. Lower end of the trunk or stem of a tree, as hardened by growth, dist. fr. iḷan-talai; மரத்தின் முற்றிய அடிப்பாகம். மரமிசைக்கும்போது முதுதலை கீழாகவும் இளந்தலை மேலாகவும் (சர்வா. சிற். 68). |
| முதுதவம் | mutu-tavam n. <>id.+. Penance performed in previous birth or long ago in this birth; முற்பிறப்பிலோ இப்பிறப்பில் முன்போ செய்த தவம். (W.) |
| முதுநாரை | mutu-nārai n. <>id.+. An ancient poem of the first šaṅgam, not now extant; தலைச்சங்கத்து இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. (இறை. 1, உரை, 4.) |
| முதுநிலம் | mutu-nilam n. <>id.+. 1. Brackish ground; களர் நிலம். (பிங்.) 2. Large extent of barren ground; 3. Desert tract; |
| முதுநீர் | mutu-nīr n. <>id.+. See முன்னீர். சுடர்படு முதுநீரில் (திவ். பெரியதி. 8, 5, 5). . |
| முதுபயிர் | mutu-payir n. <>id.+. 1. Fullgrown Crop; முற்றிய பயிர். (W.) 2. Tree fullgrown and ready to bear fruit; 3. See முதுகால். Loc. |
| முதுபாலை | mutu-pālai n.<>id.+. (Puṟap.) Theme of a lonely woman bewailing the loss of her husband in a desert; கணவனை இழந்த தலைவி காட்டில் தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) |
| முதுபாழ் | mutu-pāḻ n. <>id.+. See முதுநிலம். முதுபாழ் பெயல்பெய்தன்ன (புறநா. 381). . |
| முதுபுண் | mutu-puṇ n. <>id.+. Festering sore; நெடுநாட் புண். மெய்ப்படு முதுபுண்டீர்ப்பான் (சீவக. 2881). |
| முதுபெண்டு | mutu-peṇṭu n. <>id.+. 1. Woman between the ages of 32 and 40. See பேரிளம்பெண், 1. 2. Woman past menstruation; 3. Old woman; |
| முதுபொருள் | mutu-poruḷ n. <>id.+. Ancestral property; பிதிரார்ச்சிதச் சொத்து. ஒரு முதலாகி முதுபொருளாயிருந்த தனங்களும் (பட்டினத். உடற்கூற்றுவ. 11). |
| முதுமக்கட்சாடி | mutumakkaṭ-cāṭi n. <>முதுமக்கள்+. See முதுமக்கட்டாழி. முதுமக்கட்சாடி வகுத்த தராபதியும் (விக்கிரம. உலா). (தக்கயா கப். 376, உரை.) . |
| முதுமக்கட்டாழி | mutumakkaṭṭāḻi n. <>id.+. 1. A Large earthen jar wherein corpses of warriors were interred in ancient times; முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை. (புறநா. 256, உரை.) 2. A large pot into which ājīvaka ascetics enter for performing penance; 3. A large earthen jar in which persons were kept and looked after in which persons were kept and looked after in their extreme old age; |
| முதுமக்கள் | mutu-makkaḷ n. <> முது-மை+. Elders, aged persons; வயதுசென்றோர். நரைமுதுமக்க ளுவப்ப (பழமொழி). |
| முதுமகள் | mutu-makaḷ n. <>id.+. See முதுபெண்டு. பார்ப்பன முதுமகள் (பெருங். இலாவாண. 3, 30). . |
| முதுமகன் | mutu-makaṉ n. <>id.+. 1. Man of advanced years; வயது சென்றவன். முந்து புள்ளுரைத்த முதுமகன் (பெருங். உஞ்சைக். 56, 234). 2. Man past the age of thirty; 3. The planet Saturn; |
| முதுமரம் | mutu-maram n. <>id.+. Banyan. See ஆல், 2. பறவை . . . பகலுறை முதுமரம் (குறுந். 352). |
| முதுமுறை | mutu-muṟai n. <>id.+. Seniority in age; மூத்த முறைமை. முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியான் (கலித். 124). |
| முதுமூப்பு | mutu-mūppu n. <>id.+. Ripe old age; மிகமுதிர்ந்த வயது. முதுமூப்பாய மக்களை (திருவிளை. எல்லாம்வல்ல. 9). |
| முதுமை | mutumai n. <>மூ-. [T. mudimi, M. muduma.] 1. Antiquity, oldness; பழமை. (பிங்.) 2. Old age; 3. See முதுமொழி, 1. (சூடா.) 4. Maturity; 5. See முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் (தொல். பொ. 79). |
| முதுமொழி | mutu-moḻi n. <>முது-மை+. 1. Proverb, old saying; பழமொழி. (தொல். பொ. 489) 2. Words of wisdom; 3. Poems of ancient poets; 4. The Vēdas; 5. The mystic syllable ōm; 6. Tiru-k-kuṟaḷ; |
| முதுமொழிக்காஞ்சி | mutumoḻi-k-kāci n. <>முதுமொழி+. 1. (Puṟap.) Theme of wise men giving instruction on aṟam, poruḷ and iṉpam to the people at large; அறிவுடையோர் அறம்பொருளின்பங்களைப் பலரும் அறியச்சொல்லும் புறத்துறை. (பு. வெ. 10, காஞ்சிப். 1.) 2. An ancient didactic poem of 100 verses by Kūṭalūr-kiḻār, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q.v.; |
