Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதியகுழல் | mutiya-kuḻal n. A species of grass; See குதிரைவாலிப்புல். (தைலவ. தைல. 76.) |
| முதியம் | mutiyam n. A sticky plant that grows best in sandy places. See நாய்வேலை. (மலை.) |
| முதியவன் | mutiyavaṉ n. <>முது-மை. [K. muduka.] 1. Brahmā; பிரமன். தொடங்கற்கட்டோன்றிய முதியவன் முதலாக (கலித். 2). 2. Elder, senior; 3. Aged man; |
| முதியன் | mutiyaṉ n. See முதியவன். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (அகநா. 30). . |
| முதியார்குழல் | mutiyār-kuḻal n. <>முதியாள்+. See முதியார்கூந்தல். (சங். அக.) . |
| முதியார்கூந்தல் | mutiyār-kūntal n. <>id.+. Sita's thread. See அம்மையார்கூந்தல். Loc. |
| முதியாள் | mutiyāḷ n. <>முது-மை. [K.muduki.] 1. Elderly woman; மூத்தவள் 2. Woman possessed by a spirit. |
| முதியான் | mutiyāṉ n. <>id. 1. See முதியவன். (சங். அக.) . 2. A bird; 3. Full-grown calf; |
| முதியோர் | mutiyōr n. <>id. Persons of ripe wisdom; அறிஞர். |
| முதியோள் | mutiyōḷ n. <>id. 1. Old woman; கிழப்பருவமடைந்தவள். 2. Goddess; |
| முதிர் - தல் | mutir- 4 v. [T. muduru K.mudu.] intr. 1. To grow old; to have the qualities of age; இளமைத்தன்மை நீங்கி முற்றுதல். முதிராக் கிளவியள் (மணி. 22, 181). 2. To become mature; to grow ripe; 3. To excel, surpass; to become satiated; to be saturated; 4. To precede; 5. To end, cease; 6. To become dry; 7. To encompass, surround; |
| முதிர்கஷாயம் | mutir-kaṣāyam n. <>முதிர்-+. Strong decoction; வற்றக் காயந்தகஷாயம். |
| முதிர்காடு | mutir-kāṭu n. <>id.+. See முதையல், 1. (சூடா.) . |
| முதிர்காற்று | mutir-kāṟṟu n. <>id.+. Gale, strong wind; கடுங்காற்று. (W.) |
| முதிர்ச்சி | mutircci n. <>id. 1. Maturity, ripened condition; பக்குவம். 2. Great age, Old age; 3. Excellence in learning or experience; 4. Arrogance; |
| முதிர்ச்சிக்காரன் | mutircci-k-kāraṉ n. <>முதிர்ச்சி+. Arrogant man; செருக்குள்ளவன். (W.) |
| முதிர்ந்தகுறிஞ்சி | mutirnta-kuṟici n. perh. முதிர்-+. (Mus.) A melody-type; பண்வகை. (திவ். திருவாய். 1, 1, தலைப்பு.) |
| முதிர்ந்தவிந்தளம் | mutirnta-v-intalam n. perh.id.+. (Mus.) A secondary melody-type of the kuṟici class; குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) |
| முதிர்ப்பு | mutirppu n. <>id. 1. Perturbation; மனக்கலக்கம். (திவா.) 2. See முதிர்ச்சி, 1, 2. (யாழ். அக.) |
| முதிர்பிறை | mutir-piṟai n. <>id.+. The second quarter of the waxing moon; சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி முதல் அஷ்டமிவரையுள்ள சந்திரன். (W.) |
| முதிர்பு | mutirpu n. <>id. [M. mutirppu.] See முதிர்வு. (சங். அக.) . |
| முதிர்வு | mutirvu n. <>id. 1. See முதிர்ச்சி, 1, 2. கைக்கொண்டு முற்றிய முதிர்வும் (தொல். பொ. 68). . 2. Excess, plenty; |
| முதிர்வேனில் | mutir-vēṉil n. <>id.+. See முதுவேனில். (சங். அக.) . |
| முதிரம் 1 | mutiram n. <>mudira. Cloud; மேகம். (பிங்.) |
| முதிரம் 2 | mutiram n. A mountain belonging to the ancient chief Kumaṇaṉ; குமணனுக்குரிய ஒரு மலை. நல்லிசைக் குமணன் ... முதிரத்தோனே (புறநா. 160, 13). |
