Word |
English & Tamil Meaning |
|---|---|
| முந்நூறு | mu-n-nūṟu n. <>மூன்று+. The number 300; மூன்று நூறு. முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு (புறநா. 110). |
| முப்தி | mupti n. Muhammadan lawofficer. See மூப்தி. (W.) |
| முப்பகை | mu-p-pakai n. <>மூன்று+. 1. The three evil qualities of the soul, viz., kāmam, vekuḷi, mayakkam; ஆன்மாவைக் கெடுக்கின்ற மூன்று குற்றங்களாகிய காமம் வெகுளி மயக்கம். முப்பகைவென்றார் (கம்பரா. கார்மு. 26). 2. The three enemies of mankind, viz., picācu, ulaku, uṭal; |
| முப்பத்தாறாயிரப்படி | muppattāṟāyira-p-paṭi n. <>முப்பது+ஆறு+. A commentary on Tiruvāymoḻi. See ஈடுமுப்பத்தாறாயிரம். |
| முப்பத்திமண்டபம் | mu-p-patti-maṇṭa-pam n. <>மூன்று+பத்தி+. Pillared hall containing four rows of pillars, as having three vestibules; மூன்றுபத்திகளுள்ள மண்டபம். |
| முப்பத்திரண்டறம் | mu-p-pattiraṇ-taṟam. n. <>முப்பது+இரண்டு+. Thirty-two kinds of charity, viz., ātular-cālai, ōtuvārk-kuṇavu, aṟucamayattōrkkuṇavu, pacuvukku-vāy-uṟai, ciṟai-c-cōṟu, aiyam, naṭai-t-tiṉpaṇ-ṭam, maka-c-coṟu, maka-p-peṟuvittal, ஆதுலர்சாலை. ஓதுவார்க்குணவு, அறுசமயத்தோர்க்குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு, ஐயம், நடைத்தின்பண்டம், மகச்சோறு, மகப்பெறுவித்தல். மகவளர்த்தல், மகப்பால், அறவைப்பிணஞ்சுடுதல், அழிந்தோரைநிறுத்தல், வண்ணார், நாவிதர், வதுவை |
| முப்பத்துமுக்கோடிதேவர் | mu-p-pattu-mukkōṭi-tēvar n. <>id.+மூன்று+கோடி3+. 1. See முப்பத்துமூவர். செருக்கொண்ட முப்பத்துமுக்கோடி தவருஞ் சேனையுமே (அஷ்டப். திருவரங்கத்துமா. 64). . 2. Hindu gods numbering thirty-three crore; |
| முப்பத்துமுத்தேவர் | mu-p-pattu-mu-t-tēvar n. <>id.+id.+. See முப்பத்துமூவர். (திவா.) அதிதி புதல்வராய முப்பத்துமுத்தேவர் (தக்கயாகப். 16). . |
| முப்பத்துமூவர் | mu-p-pattu-mūvar n. <>id.+. The 33 celestials in four groups, viz., aṣta-vacukkaḻ, kātaca-ruttirar, tuvāta-cātittar, accuvini-tēvar; அஷ்டவசுக்கள் ஏகாதசருத்திரர்,துவாதசாதித்தர், அசுவினிதேவர் இருவர் ஆக முப்பத்துமூன்று தேவர். (பிங்.) முப்பத்து மூவரமரர்க்கு (திவ். திருப்பா. 20). |
| முப்பதம் | mu-p-patam n. <>மூன்று+. The formula tat-tuvam-aci, as comprising three words; 'தத்துவமசி' என்னும் வாக்கியம். முப்பதப்போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225). |
| முப்பது | mu-p-patu n. <>id.+பத்து. Thirty; மூன்றுபத்து. (திவ். திருப்பா. 30.) |
| முப்பதுநோன்பு | muppatu-nōṉpu n. <>முப்பது+. 1. Fast observed by muhammadans daily in the month of Ramzān; ரம்ஸான் மாதத்திற் முகம்மதியர் பிரதிதினமும் கொண்டாடும் விரதம். Colloq. 2. Ceremonial observance practised by newly married Telugu girls in Tamil districts, as lasting for 30 days from the date of marriage; |
| முப்பலம் | mu-p-palam n. See முப்பலை. (W.) . |
| முப்பலை | mu-p-palai n. cf. triphalā. The three myrobalans. See திரிபலை. (யாழ். அக.) |
| முப்பழம் | mu-p-paḻam n. <>மூன்று+. 1. The three fruits. See முக்கனி. (சிலப். 6, 76, உரை.) (சூடா.) 2. The three myrobalans. |
| முப்பாட்டன் 1 | mu-p-pāṭṭaṉ n. <>முன்1+பாட்டன். Great-grandfather; பாட்டனுக்குத் தந்தை. |
| முப்பாட்டன் 2 | mu-p-pāṭṭaṉ n. prob. மூன்று+பாட்டன். Grandfather's grandfather; பாட்டனுக்குப் பாட்டன். (W.) |
| முப்பாட்டி 1 | muppāṭṭi n. Fem. of முப்பாட்டன்1. Great-grandmother; பாட்டியின் தாய். |
| முப்பாட்டி 2 | mu-p-pāṭṭi n. Fem. of முப்பாட்டன்2. Grandfather's grandmother; பாட்டனுக்குப் பாட்டி. (யாழ். அக.) |
| முப்பால் | mu-p-pāl n. <>மூன்று+. [T. muppālu.] 1. The three divisions, aṟam, poruḻ, iṉpam ; அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புக்கள். 2. Tiru-k-kuṟal, as dealing with mu-p-pāl; 3. (Gram.) The three genders, viz., āṇ-pāl, peṇ-pāl, ali-p-pāl; 4. The three preparations of milk, viz., kāyc-cu-p-pāl, tiraṭṭu-p-pāl, kuḷampu-p-pāl; 5. The three kinds of milk, viz., mother's milk, cow's milk, goat's milk; |
