Word |
English & Tamil Meaning |
|---|---|
| முப்பாலகர் | mu-p-pālakar n. <>id.+பாலகன்2. Children of three kinds, viz., those who drink milk alone, those who take milk and rice and those who take rice alone; பால்குடிப்பவர், பாலும் அன்னழம் உண்பவர், அன்னமாத்திரம் உண்பவர் என மூவகைப்பட்ட குழந்தைகள். (தைலவ. தைல.117, உரை.) |
| முப்பாலர் | mu-p-pālar n. <>id.+பாலன்1. See முப்பாலகர். (தைலவ. தைல. 117.) . |
| முப்பாழ் | mu-p-pāḻ n. <>id.+. 1. The three forms of ruin which a land is subject to, viz., eyiṟ-pāḻ, veḷḷa-p-pāḻ, kuṭi-p-pāḻ; நிலத்திற் குண்டாம் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் என்ற மூவகையான கேடு. 2. The three entities, viz., cīvaṉ, īcuvaraṉ, cakam; 3. The three vacant regions believed to exist in the body; |
| முப்பாற்புள்ளி | mu-p-pāṟ-puḷḷi n. <>முப்பால்+. 1. The letter ஃ, as having three dots; ஆய்தவெழுத்து. (தொல். எழுத். 2.) 2. The three letters kuṟṟiyalukaram, kuṟṟiyalikaram and āytam, as written with dots; |
| முப்பான் | mu-p-pāṉ n. See முப்பது. (W.) . |
| முப்பிடாரி | mu-p-piṭāri n. <>id.+. A village goddess; ஒரு கிராமதேவதை. |
| முப்பிணி | mu-p-piṇi n. <>id.+பிணி. See முத்தோஷம், 1, 2. (பிங்.) . |
| முப்பிறைச்சுமை | mu-p-piṟai-c-cumai n. <>id.+பிறை+. Whooping cough; கக்குவான். (இங். வை. 234.) |
| முப்பு | muppu n. 1. See முப்பூ. . 2. A medical treatise by Agastya; |
| முப்புடி | mu-p-puṭi n. cf. tri-puṭi. 1. The three factors of knowledge. See திரிபுடி. (W.) 2. See முக்குணம். (யாழ். அக.) |
| முப்புடைக்கனி | mu-p-puṭai-k-kaṉi n. <>மூன்று+புடை+. See முப்புடைக்காய். முப்புடைக்கனிசிந்த மோதி (மீனாட். பிள்ளைத். 55). . |
| முப்புடைக்காய் | mu-p-puṭai-k-kāy n. <>id.+ id.+. Coconut, as having three vertical sections; [மூன்று பிரிவுகளுடையது] தேங்காய். (பெரும்பாண். 364.) |
| முப்புரம் | mu-p-puram n. <>id.+. The three aerial cities burnt by šiva. See திரிபுரம். ஒக்க முப்புர மோங்கெரி தூவ (தேவா. 485, 5). |
| முப்புரமெரித்தான் | muppuram-erittāṉ n. <>முப்புரம்+. (சங். அக.) 1 .šiva; சிவபெருமான். 2. Wiry indigo. 3. Worm-killer. |
| முப்புரி 1 | mu-p-puri n. <>மூன்று+புரி3. [T.muppiri K.muppuri.]. Cord of three strands; மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு. முந்நூல்கொண்டு முப்புரி யாக்குதலின் (திருமுரு. 183, உரை). |
| முப்புரி 2 | mu-p-ouri n. <>id.+புரி5. See முப்புரம். (W.) . |
| முப்புரிச்சவுக்கம் | muppuri-c-cavukkam n. <>முப்புரி1+. Cloth woven from yarn of three strands; முப்புரிநூலாலமைந்த சிறிய ஆடை. Loc. |
| முப்புரிநூல் | muppuri-nūl n. <>id.+. The sacred thread, as of three strands; பூணூல். முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் (திவ். இயற். திருவெழு. வரி. 7). |
| முப்புரிநூலோர் | muppurinūlōr n. <>முப்புரிநூல். Brahmins, as wearing the sacred thread; பார்ப்பார். (திவா.) |
| முப்புரிமுண்டு | muppuri-muṇṭu n. <>முப்புரி1+. See முப்புரிச்சவுக்கம். Loc. . |
| முப்புவனம் | mu-p-puvaṉam n. <>மூன்று+. The three worlds, cuvarkkam, pūmi, pātāḷam; சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்கள். (திருவிளை. தலவிசேட. 2.) |
| முப்புள்ளி | mu-p-puḷḷi n. <>id.+புள்ளி. The letter ஃ, as having three dots; ஆய்தம். (இலக். அக.) |
| முப்பூ | mu-p-pū n. prob.id.+உப்பு. A salt believed to have the power of transmuting baser metals into gold, and to enable one to live 1, 00, 000 years; இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஓரிலக்கம் ஆண்டுகள் உயிர்வாழச் செய்யவும் வல்ல ஒரு சித்தௌஷதம். |
| முப்பூப்புடம் | mu-p-pūppuṭam n. <>id+. The three modes of calcining medicines, viz., maṇavai-p-pūppuṭam, kuḷi-p-pūppuṭam, pūpataṉa-p-pūppuṭam; மணவைப் பூப்புடம், குழிப்பூப்புடம், பூபதனப்பூப்புடம் என்ற மூவகைப் பூப்புடங்கள் (தைலவ. தைல.) |
