Word |
English & Tamil Meaning |
|---|---|
| முப்பூரம் | mu-p-pūram n. <>id.+. The three nakṣatras, viz., pūram, pūrāṭam, pūraṭṭāti; பூரம், பூராடம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்கள். ஆயில் முப்பூரஞ் சோதி (சூடா. உள். 165). |
| முப்பேதம் | mu-p-pētam n. <>id.+. (Phil.) The three differences, viz., cukata-pētam, cucāti-pētam, icāli-pētam; சுகதபேதம். சுசாதிபேதம், விசாதிபேதம் என்ற மூன்றுவகை வேறு பாடு. (வேதா. சூ. 27, உரை.) |
| முப்பொருள் | mu-p-poruḷ n. <>id.+. 1. (šaiva.) The three fundamental entities, pati, pacu, pācam; பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள். (சி. போ. பா. 6, 2, பக். 328.) 2. The Hindu triad. |
| முப்பொழுது | mu-p-poḻutu n. <>id.+. See முப்போது. முப்பொழு தேத்திய நால்வர்க்கு (தேவா, திருவெழுகூற. 142, வரி, 7). . |
| முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார் | muppoḻutun-tiru-mēṉi-tiṇṭuvār n. <>முப்பொழுது+திருமேனி+. ādi-šaiva Brahmins, as entitled to touch the sacred idol of šiva morning, noon and evening for anointing and decorating, one of tokai-y-aṭiyār, q.v.; தொகையடியாருள் காலை, உச்சி, மாலை என்ற மூன்று பொழுதுகளிலும் சிவனது திருமேனியைத் தொட்டுப் பூசனை செய்தற்குரிய ஆதிசைவப்பிராமணர். (தேவா. 738, 10.) |
| முப்பொறி | mu-p-poṟi n. <>மூன்று+. The three organs of sense. See திரிகரணம். (திவா.) |
| முப்போது | mu-p-pōtu n. <>id.+. The three portions of a day, viz., kālai, ucci, mālai; காலை, உச்சி, மாலை என்ற மூன்று வேளைகள். முப்போதுங் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு (திவ். பெரியாழ், 3, 1, 5). |
| முபலகு | mupalaku n. <>U. mublag. Total, especially written in words instead of figures; எண்ணினாலன்றி எழுத்தினாற் காட்டும் மொத்தத்தொகை. (C. G.) |
| முபாதலா | mupātalā n. <>Arab. mubadl. Sum lent on a running account; temporary loan; கைம்மாற்றுக்கடன். (C. G.) |
| மும்மடங்கு | mum-m-maṭaṅku n. <>மூன்று+. [T. mummaduga.] Three times over, three-fold; மூன்று பங்கு. மும்மடங்கு பொலிந்த முகத்தினன் (கம்பரா. காட்சிப்.19). |
| மும்மடி | mu-m-maṭi n. <>id.+. [K. mum-maṭti.] 1. See மும்மடங்கு. பதாதி மும்மடி சேனா முகமே (பிங். 6, 540). . 2. Three creases in a woman's abdomen, considered as a sign of beauty; |
| மும்மடியாகுபெயர் | mummaṭi-y-ākupeyar n. <>மும்மடி+. (Gram.) An āku-peyar of treble transference, as kār which literally means black and figuratively means first cloud, secondly rainy season and thirdly the crop of the rainy season; கருமையென்று பொருள்படுங் கார் என்பது மேகத்தையுணர்த்திப் பின் மழைகாலத்தையுணர்த்திப் பின் மழைக்காலத்துப் பயிரை யுணர்த்துவதுபோல ஒன்றன்மேலொன்றாக மும்முறை சென்று பொருளுணர்த்தும் ஆகுபெயர் வகை. (நன். 290, உரை.) |
| மும்மண்டலம் | mu-m-maṇṭalam n. <>மூன்று+. (சங். அக.) 1. The three regions, viz., cūriya-maṇṭalam, cantira-maṇṭalam, ak-kiṉi-maṇtalam; சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்கினிமண்டலம் என்ற மூன்று பகுதிகள். 2. The triple regions, viz., pūmi, antaram, cuvarkkam; |
| மும்மணி | mu-m-maṇi n. <>id.+. 1. The three gems, viz., puruṭa-rākam, vaiyi-ṭūriyam, kōmētakam; புருடராகம், வயிடூரியம், கோமேதகம் என்ற மூவகை இரத்தினங்கள். மும்மணியாவன சொன்னபுருடராக முறுவயிடூரியங்கோமேதகமே (திருவாலவா. 25, 22). 2. See மும்மணிக்காசு. முத்தவள்ளியொடு மும்மணிசுடா (பெருங். உஞ்சைக். 34, 203). 3. (Buddh.) The three objects of veneration. |
| மும்மணிக்காசு | mu-m-maṇi-k-kācu n. <>மும்மணி+. An ornament; ஆபரணவகை. மும்மணிக்காசும் பன்மணித் தாலியும் (பெருங். நரவாண. 9, 49). |
| மும்மணிக்கோவை | mummaṇi-k-kōvai n. <>id.+. 1. Necklace of three strings of beads; மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை. (W.) 2. A poem of 30 stanzas, in which akaval, veṇ-pā and kali-t-tuṟai occur serially one after another in āntāti-t-toṭai, one of 96 pirapantam, q.v.; |
| மும்மணிமண்டலம் | mummaṇi-man-ṭalam n. <>id.+. See மும்மண்டலம். (பொருட். நி.) . |
