| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| முயிறு | muyiṟu n. See முசிறு, 1. முயிறுமூசுகுடம்பை (நற். 180). | 
| முரகரி | murakari n. <>Mura-hari. See முராந்தகன். (சங். அக.) . | 
| முரங்கினம் | muraṅkiṉam n. Pepper; மிளகு. (சங். அக.) | 
| முரச்சு - தல் | muraccu- 5. v. tr. Caus. of முரஞ்சு-. To accomplish, make ready; முற்று வித்தல். முரசுசெய முரச்சி (பதிற்றுப். 44, 16). | 
| முரசக்கொடியோன் | muraca-k-koṭiyōṉ n. <>முரசம்+. Dharmaputra, as having the emblem of a drum on his banner; [முரசத்தைக் கொடியிலுடையவன்] தருமன். (பிங்.) | 
| முரசகேது | muraca-kētu n. <>muraja-kētu. See முரசக்கொடியோன். கேட்டிநீ முரசகேது (பாரத. அருச்சுனன்றவ. 16). | 
| முரசபந்தம் | muraca-pantam n. <>muraja-bandha. A kind of cittira-kavi; மிறைக்கவி வகை (தண்டி, 96, உரை.) | 
| முரசபலம் | muraca-palam n. <>muraja-phala. Jack-tree. See பலா1. (யாழ். அக.) . | 
| முரசம் | muracam n. <>muraja. 1. Drum, tabour; பறைப்பொது. (சூடா.) ஆனக முரசஞ் சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு. 3). 2. A drum of the agricultural tracts; 3. War drum; | 
| முரசல் | muracal n. perh. முரஞ்சு-. That which is brittle; ஒடியக்கூடிய முருடுள்ளது. இந்த வெற்றிலை முரசல். Loc. | 
| முரசவாகை | muraca-vākai n. <>முரசம்+. (Puṟap.) Theme describing the ceremony of offering oblations to the vīra-muracu in a king's palace; அரசனது மாளிகையிற் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை (பு. வெ, 8, 4.) | 
| முரசவுழிஞை | muraca-v-uḻiai n. <>id+. (Puṟap.) Theme describing the vīra-muracu being decorated with a garland of uḷiai flowers made of gold and being offered goat-sacrifice; பொன்னாலே செய்த உழிஞைமாலையணிந்து ஆடுவெட்டியிடும் பலியை நுகரும் வீரமுரசின் நிலைமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6,4.) | 
| முரசறை - தல் | muracaṟai- v. intr. <>முரசு2+. 1. To announce by beat of drum; யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல். 2. To proclaim; | 
| முரசு 1 | muracu n. The gums; பல்லினடித்தசை. (J.) | 
| முரசு 2 | muracu n. <>முரசம். 1. See முரசம். இடியென முழங்கு முரசின் (புறநா. 17). . 2. The 26th nakṣatra. See உத்திரட்டாதி (திவா.) | 
| முரசுகட்டில் | muracu-kaṭṭil n. <>முரசு2+. Dais for the royal drum; அரசற்குரிய முரசு வைக்கும் ஆசனம். (புறநா. 50, தலைப்பு.) | 
| முரசுயர்த்தோன் | muracuyarttōṉ n. <>id.+ உயர்2-. See முரசக்கொடியோன். முரசுயர்த்தோ யுனதருளுக் கஞ்சினேனே (பாரத. கிருட்டிணன் றூ 13) . | 
| முரசுவைத்தல் | muracu-vaittal n. <>id.+. Possessing or being allowed to keep drums, as a paraphernalia; பேரிகையுடன் செல்லும் மரியாதையுடைமை. (W.) | 
| முரசை | muracai n. <>Murajā Wife of Kubera; குபேரன் மனைவி. (அபி. சிந்.) | 
| முரஞ்சு 1 - தல் | muracu- 5 v. intr. 1. To mature; to be old, ancient; முதிர்தல். முரஞ்சன் முதிர்வே (தொல். சொல். 333). 2. To gain strength; 3. To be full or abundant; | 
| முரஞ்சு 2 | muracu n. <>முரஞ்சு-. 1. Maturing; முதிர்கை. முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே (மலைபடு. 144). 2. Rock, ledge; | 
| முரட்கை | muraṭkai n. Kali verse. See முரற்கை, 3. (சது.) . | 
| முரட்டடி | muraṭṭaṭi n. <>முரடு+. Rough, rude, reckless, lawless behaviour; இணக்கமற்ற குணம். முரட்டடித் தவத்தக்கன்றன் வேள்வி (தேவா. 710, 5). | 
| முரட்டாட்டம் | muraṭṭāṭṭam n. <>id.+. See முரட்டடி. (யாழ். அக.) . | 
| முரட்டுக்கழுத்து | muraṭṭu-k-kaḻuttu n. <>id.+. 1. Stiff neck, as of an ox not broken to the yoke; நுகம்பூணா எருத்தின் கழத்து. (W.) 2. See முரட்டடி. (யாழ். அக.) | 
| முரட்டுக்குணம் | muraṭṭu-k-kuṇam n. <>id.+. See முரட்டடி. (W.) . | 
| முரட்டுத்தனம் | muraṭṭu-t-taṉam n. <>id.+. See முரட்டடி. . | 
