| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| முரம் | muram n. <>முரம்பு. Granite crushed to dust for road-making; கருங்கற்பொடி. (C.E.M.) | 
| முரம்பு | murampu n. cf. முரப்பு. [T. moramu.] 1. Mound of gravel or stone; பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம். முரம்பு கண்ணுடைந்த நடவை (மலைபடு. 432). 2. Mound, elevation; 3. Rock; 4. Rough, hard ground; 5. Backwater, creek, small arm of the sea; 6. Salt-pan; | 
| முரமுரவெனல் | muramuraveṉal n. See முரமுரெனல். . | 
| முரமுரெனல் | muramureṉal n. Onom. expr. of (a) foaming, effervescing; நுரைத்தற் குறிப்பு. முரமுரெனவே புளித்தமோரும் (தனிப்பா. i, 103, 34) (b) crackling in the mouth; (c) being clean and neat; | 
| முரரை | murarai n. prob. முரடு + அரை. Hard, stout trunk of a tree; மரத்தின் முருட்டரை. முரரை முழுமுத றுமியப் பண்ணி (பதிற்றுப், 5- ஆம் பத். பதி.). | 
| முரல்(லு) 1 - தல் | mural- 3 v. cf. murala. [K. moral.] intr. 1. To make sound; ஒலித்தல். மதுகரமுரலுந் தாரோயை (திருவாச, 5, 16). 2. To cry; 1.To sing; | 
| முரல் 2 | mural n. <>murala. Needle-fish, Syngnathus; மீன்வகை. (நாமதீப. 271.) | 
| முரல்வு | muralvu n. <>முரல்-. Soft sound, as of a lute; யாழின் மெல்லோசை. வண்டின் றெழுதி முரல்வு (பரிபா. 8, 36). | 
| முரலல் | muralal n. <>id. [T. mora K. more M. muralu.] 1. Sounding; ஒலிக்கை. (W.) 2. Confused noise; 3. High pitch; | 
| முரலி | murali n. See முரளி, 1. (W.) . | 
| முரவம் | muravam n. prob. முரல்-. 1. A drum; பறைவகை. முரவமொந்தை (தேவா. 385,5). 2. Noise; reverberation; resonance; | 
| முரவு 1 | muravu n. <>முரி1-. Break; broken condition, as of the mouth of a pot; முரிவு. முரவுவாய்க் குழிசி (பெரும்பாண். 99). | 
| முரவு 2 | muravu n. See முரவம், 1. முரவுந்தூம்பு முழங்குபு துவைப்ப (பெருங்.மகத.25, 16). . | 
| முரவை | muravai n. <>முரி1-. Streaks in unpolished rice; அரிசியிலுள்ள வரி. முரவை போகிய முரியா வரிசி (பொருந. 113). | 
| முரள் | muraḷ n. prob முரல். A shell-fish; இப்பிவகை. (தொல். பொ. 584.) | 
| முரளி | muraḷi n. <>muraḷī. 1. Flute or pipe made of bamboo; வேய்ங்குழல். (சது.) 2. A small flute, blown by the nose; | 
| முரளீதரன் | muraḷītaraṉ n. <>muraḷīdhara. Krṣṇa, as holding a flute; [வேய்ங்குழல் கொண்டவன்] கண்ணன். | 
| முரற்கை | muraṟkai n. <>முரல்-. 1. Sound; ஒலி. பாணர் நரம்புளர் முரற்கைபோல (ஐங்குறு. 402). 2. See முரற்சி, 2. 3. Kali verse; 4. (Mus.) A time-measure; | 
| முரற்சி 1 | muraṟci n. <>id. 1. Sound; ஒலி. கொன்றைத் தீங்குழன் முரற்சியர் (கலித். 106). 2. Song; | 
| முரற்சி 2 | muraṟci n. <>முரண். 3. Cord; கயிறு. பெண்டிர் கூந்தன் முரற்சியால் (பதிற்றுப். 5-ஆம் பத்.பதி.) | 
| முரற்று - தல் | muraṟṟu- 5 v. intr. <>முரல்-. 1. To make sound; ஒலித்தல். கிடப்பதோ முரற்றலின்றி (கம்பரா. மீட்சி. 308). 2. To cry; | 
| முரற்றுமம் | muraṟṟumam n. Water-pot; குடம். (அக. நி.) | 
| முரன் | muraṉ n. <>Mura. An Asura killed by Viṣṇu; திருமாலால் வதஞ்செய்யப்பட்ட ஒரசுரன். முரன் சிரமவை காலனொடுகூட (திவ். திருச்சந். 104.) | 
| முரன்றுபாடு - தல் | muraṉṟu-pāṭu- v. tr. <>முரல்-+. To elaborate a musical note or melody; ஆலாபனஞ் செய்தல். களிவண்டு முரன்று பாட (சீவக. 1959). | 
| முராந்தகன் | murāntakaṉ n. <>Murāntaka. Viṣṇu, as the slayer of Muraṉ; [முரனென்ற அசுரனைக் கொன்றவன்] திருமால். மற்றை முராந்தகன் முனிவன் முன்னா (கம்பரா. பிணிவீ. 115). | 
| முராரி | murāri n. <>Murāri. See முராந்தகன். விடுத்தலு முராரி யேகி (கந்தபு. ததீசி. யுத். 39). | 
