| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| முருக்கிஷம் | murukkiṣam n. See முருங்கிஷம். (சங். அக.) . | 
| முருக்கு 1 - தல் | murukku- 5 v. tr. Caus. of முருங்கு-. 1. To destroy, crush, ruin; அழித்தல். விறல்வேன் மன்னர் மன்னெயில் முருக்கி (சிறுபாண். 247) 2. To kill; 3.To break in pieces; 4. To melt; 5. To dissolve; | 
| முருக்கு 2 | murukku n. <>முருக்கு-. Killing; கொலை. (அரு. நி.) | 
| முருக்கு 3 | murukku n. 1. See முள்ளுமுருக்கு. 1. . 2. Palas-tree. See பலாசம்1, 4. 3. Sour lime; 4. Italian lemon; 5. White fig; | 
| முருக்குத்தடி | murukku-t-taṭi n. prob. முறுக்கு+. A piece of wood, used in climbing palm-trees; பனையேறிகள் பனைமூட்டிற் சார்த்தி மிதித்தேறுவதற்கு வைக்கும் தடி. Nāṉ. | 
| முருகக்கடவுள் | muruka-k-kaṭavuḷ n. <>முருகன்+. Skanda; குமரக் கடவுள் | 
| முருகநாயனார் | muruka-nāyaṉār n. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) | 
| முருகயர் - தல் | murukayar- v. intr. <>முருகு+. 1. To offer worship to Skanda; முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல். 2. To dance while under possession by Skanda; 3. To give feast, as in sacrifice; | 
| முருகவுருட்டிசுறா | murukavuruṭṭi-cuṟā n. A sea-fish; கடல்மீன்வகை. (J.) | 
| முருகவேள் | muruka-vēḷ n. <>முருகன்+. See முருகக்கடவுள். (பட்டினப். 158, உரை.) . | 
| முருகன் | murukaṉ n. <>முருகு. [K. muruga M. murugan.] 1. Youth; கட்டிளமையோன். (திவா.). 2. See முருகக்கடவுள். (திருமுரு. பக். 56, உரை.) 3. One possessed by Skanda; 4. Chief of the desert tract; 5. An inebriating preparation. See மாஜூன். Loc. | 
| முருகனாடல் | murukaṉ-āṭal n. <>முருகன்+. Skanda's dance, of two kinds, viz., tuṭi and kuṭai; துடி குடை என்ற இருவகைக் கூத்து. (பிங்.) | 
| முருகியம் | murukiyam n. <>முருகு + இயம்1. Drum used in the worship of Skanda, in hilly tracts; குறிஞ்சி நிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல். பொ. 18, உரை.) | 
| முருகு 1 | muruku n. 1.Tenderness, tender age; youth; இளமை. (திவா.) 2. Skanda; 3. Fragrance; 4. [T. muruvu.] Beauty. 5. Divinity, god; 6. Dancing while under possession by Skanda; 7. Sacrificial feast; 8. Festival; 9. Flower-salver; 10. Honey; 11. Toddy; 12. Sour lime; 13. Elevation, height; 14. Eagle-wood. See அகில், 1. (திவா.) 15. A poem in Pattu-p-pāṭṭa. See திருமுருகாற்றுப்படை. 16. cf. முருடு. Fuel; | 
| முருகு 2 - தல் | muruku- 5 v. intr. <>முறுகு-. 1. To be ripe or mature; முதிர்தல், முருகு காதலின் (கம்பரா. அகலிகை. 54). 2. To exceed the proper limit in heating; | 
| முருகு 3 | muruku n. perh. முறுக்கு-. [T. K. murugu.] An ornament worn in the helix of the ear; காதணிவகை. வச்ர முருகை யெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703). | 
| முருகேசன் | murukēcaṉ n. <>முருகு + ஈசன். See முருகக்கடவுள். (யாழ். அக.) . | 
| முருகை | murukai n. A kind of stone; ஒருவகைக் கல். (J.) | 
| முருகைநண்டு | murukai-naṇṭu n. prob. முருகை+. A kind of crab; நண்டுவகை. (J.) | 
| முருங்கன் | muruṅkaṉ n. A coarse kind of kār paddy sown in āvaṇi and maturing in four months; ஆவணியில் விதைக்கப்பட்டு நான்கு மாதங்களில் விளைவாகும் கார்நெல்வகை . | 
| முருங்கிஷம் | muruṅkiṣam n. Bowstring hemp. See பெருங்குரும்பை. (சங். அக.) . | 
| முருங்கு 1 - தல் | muruṅku- 5 v. intr. [T. murugu.] 1. To perish; to be destroyed; அழிதல் அமரு ளேற்றார் முரண் முருங்க (பு. வெ. 1, 7). 2. To break; 3. To simmer; | 
