Word |
English & Tamil Meaning |
|---|---|
| முல்லைக்குழல் | mullai-k-kuḻal n. <>id.+. A flute or pipe with mouth-piece made of mullai creeper; முல்லைகொடியால் அமைத்த வலையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் (சிலப், 17, பாட்டு, 3, உரை) |
| முல்லைச்சிலந்தி | mullai-c-cilanti n. See முலைச்சிலந்தி (இராசவைத். 98, உரை) . |
| முல்லைச்சூட்டு | mullai-c-cūṭṭu n. <>முல்லை+. Chaplet of mullai flowers, as the emblem of chastity; கற்பிற்கறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை. பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் (சிவக. 624). |
| முல்லைப்பண் | mullai-p-paṇ n. <>id.+(Mus.) Primary melody-type of the forest tract; முல்லை நிலத்துக்குரிய பெரும்பண்வகை (திவா.) |
| முல்லைப்பாட்டு | mullaip-pāṭṭu n. <>id.+. A poem in Pattu-p-pāṭṭu by Nappūtaṉār; பத்துப்பாட்டினுள் நப்பூதனார் பாடிய பாட்டு. |
| முல்லைமாறி | mullai-māṟi n. Pickpocket; முடிச்சுமாறி. Loc. |
| முல்லையர் | mullaiyar n. <>முல்லை See முல்லையாளர்(திவா.) . |
| முல்லையாழ் | mullai-yāḻ n. <>id.+.(Mus.) Primary melody-type of the forest tract; முல்லைப்பண். (பிங்.) |
| முல்லையாழ்த்திறம் | mullai-yāḻ-t-tiṟam n. <>முல்லையாழ்+.(Mus.) Secondary melody type of cevvaḻi class; செவ்வழிப்பண்ணினம். (பிங்.) |
| முல்லையாளர் | mullai-y-āḷar n. <>முல்லை+. Herdsmen and shepherds, as inhabitants of the forest tracts; முல்லைநிலமாக்கள் (திவா.) |
| முல்லையுரிப்பொருள் | mullai-y-uri-p-poruḷ n. <>id.+.(Akap) See முல்லை, 10. . |
| முல்வயன் | mulvayaṉ n. See முல்வாயன். (யாழ். அக.) . |
| முல்வாயன் | mul-vāyaṉ n. perh. முள்+. A kind of white ant; கறையான்வகை (யாழ். அக.) |
| முலகாத் | mulakāt n. <>Arab. mulāqāt Interview, meeting; சந்திப்பு .Loc. |
| முலங்கம் | mulaṅkam n. Liquorice-plant . See அதிமதுரம்2, 1 (சங். அக.) . |
| முலமுலெனல் | mula-muleṉal n. Onom. expr. signifying humming, buzzing, as of flies; ஓரொலிக்குறிப்பு. (W.) |
| முலவை | mulavai n. cf. முவ்வை. Dog; நாய். (சங். அக.) |
| முலாகாத் | mulākāt n. See முலகாத்.Loc. . |
| முலாஞ்சனை | mulācaṉai n. cf. Arab mulāhizā. Favour; தயவு. Loc. |
| முலாம் | mulām n. <>Arab. mulammā. Gilding, electro-plating; பொன் வெள்ளிப்பூச்சு. |
| முலாம்பண்ணு - தல் | mulām-paṇṇu- v. tr.<>முலாம்+. See முலாம்பூசு-. (W.) . |
| முலாம்பழம் | mulām-paḻam n. <>E. melon+. Musk-melon, Cucumis melo. Loc. பழவகை. Loc. |
| முலாம்பூசு - தல் | mulām-pūcu- v.tr. & intr. <>முலாம்+ To gild; உலோகங்களின் மேல் வெள்ளி தங்கங்களை இளக்கி மேற்பூச்சிடுதல். (W.) |
| முலாம்போடு - தல் | mulām-pōṭu- v.tr. & intr. <>id.+. See முலாம்பூசு-. . |
| முலை | mulai n. [K. mole M. mula Tu. murei.] 1.Woman's breast; ஸ்தனம். முலையுமுகனுஞ் சேர்த்திக்கொண்டேன். (தொல். பொ. 77) 2.Beast's dug; |
| முலைக்கச்சு | mulai-k-kaccu n. <>முலை+. Bodice, stays for the breast; இரவிக்கை. |
| முலைக்கட்டி | mulai-k-kaṭṭi n. <>id.+. Mammary abscess; ஸ்தனத்தில் உண்டாம் கட்டி. |
| முலைக்கட்டு | mulai-k-kaṭṭu n. <>id.+. 1. See முலைக்கச்சு. (W.) . 2. Accumulation of milk in the breast; |
| முலைக்கடுப்பு | mulai-k-kaṭuppu n. <>id.+. Pain in the breast or udder, due to excessive secretion of milk; பால் அதிகம் தங்குவதால் ஸ்தனத்திலுண்டாம் வலி முலைக்கடுபுக்கெடக்கறந்து (திவ். திருப்பா.11, உரை) |
| முலைக்கண் | mulai-k-kaṇ n. <>id+. [M.mulakkaṇ.] See முலைக்காம்பு (திவா.) துணை முலைக்கண்டோய் சுவடு(திருவாச.29.5). |
| முலைக்காம்பு | mulai-k-kāmpu n. <>id.+ Nipple, teat; ஸ்தனத்தின் நுனிப்பகுதி.(C.G.) |
| முலைக்காம்புவீக்கம் | mulai-k-kāmpu-vīkkam n. <>முலைக்காம்பு+. Inflammation of the breast, Mastitis ஸ்தனம் வீங்குகை. (M.L.) |
