| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| முரி 1 - தல் | muri- 4 v. intr. [K.muri.] 1. To break off, snap off; ஒடிதல். (சூடா.) 2. To perish; to be ruined; 3. To be scattered; 4. To go wrong; 5. To be defeated; 6. To separate, leave; 7. To lose one's position; 8. To be spoiled; 9. To bend; 10. To lack in strength; to be gentle, as in gait; | 
| முரி 2 - த்தல் | muri- 11 v. tr. Caus. of முரி1-. [T.muriyu M. murikka.] 1. To break off, snap off; ஒடித்தல். நன்சிலை முரித்திட்டம்பை வாடினன் பிடித்துநின்றான் (சீவக. 2185). 2. To ruin; 3. To defeat; 4. To manage, as a business; | 
| முரி 3 | muri n. <>முரி1-. [T. K. M. Tu. muri.] 1. Piece, bit, half; துண்டு. 2. Broken rice; 3. Anything short or dwarfish; 4. Scratch, blemish; 5. Curve, bend; 6. Written bond. See முறி, 4. Loc. 7. (Mus.) The closing section of a musical composition; 8. The curitakam at the close of a poem in nāṭaka-t-tamiḻ; | 
| முரிகம் | murikam n. <>முரி. [T. muri.] Woollen blanket; மயிர்ப்படாம். (சூடா.) | 
| முரிகிரந்தி | muri-kiranti n. <>முரி1-+. Disease becoming incurable because of the non-observance of the prescribed diet; பத்திய முறிந்ததால் தீராததாகும் நோய். (W.) | 
| முரிகிரந்திப்படு - தல் | murikiranti-p-paṭu- v. intr. <>முரிகிரந்தி+. To grow worse from neglect of the prescribed diet; பத்தியக்குறைவால் வியாதி மிகுதல். (W.) | 
| முரிச்சார்த்து | muri-c-cārttu n. <>முரி+. (Mus.) A kind of cārttu-vari; சார்த்துவரிப்பாட்டு வகை (சிலப். கானல். அரும்.) | 
| முரித்தல் | murittal n. (அரு. நி.) 1. Laughter; நகை. 2. Shining; | 
| முரிநிலை | muri-nilai n. <>முரி+. Closing part of a song; இயற்பாவில் இறுதியிற்பாடுந் தரவு. (சிலப். 6, 35, உரை.) | 
| முரிப்பு | murippu n. <>முரி2-. [T. mūppu.] 1. Breaking, bruising, cracking from external force; முரிக்கை. (W.) 2. Hump of an ox; | 
| முரிமுரி 1 - தல் | muri-muri- v. intr. <>முரி1-+. To bend, curve; வளைதலைச்செய்தல். புருவமும் முரிமுரிந்தவே (சீவக. 2310). | 
| முரிமுரி 2 | murimuri n. Nux vomica. See எட்டி. (சங். அக.) . | 
| முரியல் | muriyal n. <>முரி1-.. 1. Bit, fragment; துண்டு. (யாழ். அக.) 2. That which is brittle; | 
| முரிவரி | muri-vari n. <>முரி+. Closing part of a dance-song; வரிப்பாட்டுவகை. (சிலப். 3, 16, அரும்.) | 
| முரிவாய் | muri-vāy n. <>முரி1-+. 1. Opening made in a wall, used as entrance; இடித்து உண்டாக்கின வாசல். கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான் (திருவாலவா. 24, 4). 2. Opening made in house-breaking; 3. Pitted pial; | 
| முரிவு | murivu n. <>id. [K. murivu.] 1. Breaking, snapping; ஒடிகை. (யாழ். அக.) 2. Contracting; 3. Leaving, separation; 4. Trouble, difficulty; 5. Fate; 6. Greatness; 7. Fold; 8. Laziness; | 
| முருக்கம்புளி | murukkam-puḷi n. <>முருகு-+. Citric acid; எலுமிச்சம்புளிப்பு. (அமுதாகரம்.) | 
| முருக்கள்ளி | muru-k-kaḷḷi n. prob. முறுகு+. Prickly climbing cockspur. See காரிண்டு. (L.) . | 
| முருக்கன்மரம் | murukkaṉ-maram n. <>முருக்கு+. Bengal kino tree, Butea frondosa; மரவகை. | 
