Word |
English & Tamil Meaning |
|---|---|
| முழுகாமலிரு - த்தல் | muḻukāmal-iru- v. intr. <>id.+. ஆ neg.+. To be pregnant ; கருப்பமாதல். அவன் பெண்சாதி மூன்று மாதமாய் முழுகாமலிருக்கிறாள். |
| முழுகிக்கிட - த்தல் | muḻuki-k-kiṭa- v. intr. <>id.+. 1.To be involved completely; முழவது முடங்கிக்கிடத்தல். அவன்சொத்து முழுவதும் வியாபாரத்தில் முழுகிக்கிடக்கிறது. 2. To be absorbed, engrossed; 3. To be under water; |
| முழுகிப்போ - தல் | muḻuki-p-pō- v. intr. <>id.+. 1. To sink, founder; to be drowned; அமிழ்தல். 2. To be ruined, swallowed up; 3. To be entirely lost beyond redemption; |
| முழுகு - தல் | muḷuku- 5 v. intr. [T. munugu K. muḻu M. muḻuguga.] 1. To bathe the entire body by dipping or pouring; ஸ்நானம் செய்தல். 2. To be entirely immersed, as in business; 3. To sink; 4. To be in menses; 5. To be irretrievably involved in debts; |
| முழுங்கு - தல் | muḻuṅku- 5 v. tr. [T. miṅgu.] Corr. of விழுங்கு-. . |
| முழுச்சவரம் | muḻu-c-cavaram n. <>முழு+. Shaving the body and not merely the head; உடல் முழுதுமுள்ள மயிர் கழிக்கை. Colloq. |
| முழுச்செம்பு | muḻu-c-cempu n. <>id.+. An ancient South Indian coin; தென்னிந்தியாவில் வழங்கிய பழைய நாணயவகை. (பணவிடு. 140.) |
| முழுச்சோம்பேறி | muḻu-c-cōmpēṟi n. <>id.+. Great sluggard; அதிகச் சோம்பலுள்ளவ-ள்-ன். |
| முழுச்சௌரம் | muḻu-c-cauram n. <>id.+. See முழுச்சவரம். (W.) . |
| முழுசு 1 - தல் | muḻucu- 5 v. intr. cf. முழுவு-. 1. To dive, dip, get in, enter; உட்புகுதல். முழுசிவண்டாடிய தண்டுழாயின் (திவ். பெரியதி. 2, 8, 7). 2. See முழுவு-. அழுந்தத் தழுவாதே முழுசாதே (திவ். பெருமாள். 9, 6). 3. To rub, strike against; |
| முழுசு 2 | muḻucu n. <>முழுது. Entirety; whole. See முழுமை, 1. Colloq. |
| முழுத்த | muḻutta <>முழு. adj.-adv. Fully developed; முதிர்ச்சி பெற்ற. முழுத்த வின்பக்கடல் (திருக்கருவை. கலித். அந்.).--adv. See முழுதும். |
| முழுத்தசுரம் | muḻutta-curam n. prob. முழுத்த+. A kind of fever; சுரநோய்வகை. (யாழ். அக.) |
| முழுத்தம் | muḻuttam n. <>muhūrta. See முகூர்த்தம். தாமரைச்சேவடி பணியு முழுத்த மீங்கிது (சிலப். 26, 30). . |
| முழுத்து - தல் | muḻuttu- 5 v. tr. prob. அமிழ்த்து-. [T. munugu.] To plunge, dip in, drown; அமிழ்த்துதல். துதிக்கை முழுத்திற்று (ஈடு, 3, 5, 1). |
| முழுத்தும் | muḻuttum adv. See முழுதும். முழுத்தும் பழுதற்ற முத்தமிழின் (சிலப். உரைச்சிறப். பக். 11). . |
| முழுத்துவி - த்தல் | muḻuttuvi- 11 v. tr. Caus. of முழுத்து-. See முழுத்து-. மன்னவரை. . . முழுத்துவிப்பன் செங்குருதிமுன் (பாரதவெண். 126.) . |
| முழுத்தேங்காய் | muḻu-t-tēṅkāy n. <>முழு+. Coconut not broken into two halves; உடைபடாத தேங்காய். (W.) |
| முழுத்தொகை | muḻu-t-tokai n. <>id.+. 1. Capital and interest; வட்டியுடன் கூடிய முதல். 2. Total; |
| முழுது | muḻutu <>முழு-மை. n.-adv. All, whole, entirety; எஞ்சாமை. --Adv. See முழுதும். (தொல். சொல். 326.) |
| முழுதும் | muḻutum adv. <>முழுது. Wholly, entirely; எஞ்சுதலின்றி. முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் (திவ். பெருமாள். 7, 8). |
| முழுதுமபாவம் | muḻutum-apāvam n. <>முழுதும்+. (Log.) Absolute non-existence, one of four apāvam, q.v.; அபாவம் நான்கனுள் முழுதுமின்மை. (தருக்கசங்.) |
| முழுதொருங்குணர்ந்தோன் | muḻutoruṅkuṇarntōṉ n. <>முழுது+ஒருங்கு+. 1. Arhat; அருகன். (திவா.) 2. God; 3. Siva; |
| முழுதோன் | muḻutōṉ n. <>id. God; கடவுள். முழுதோன் காண்க (திருவாச. 3, 29). |
| முழுந்து | muḻuntu n. <>id. See முழுமை, 1. முழுந்து சுகவடிவாம் (ஞானவா. சனக. 14). . |
| முழுநாயகம் | muḻunāyakam n. A creeper; கொடிவகை. (சங். அக.) |
| முழுநாள் | muḻu-nāḻ n. <>முழு+. Nakṣatra falling entirely within a zodiacal sign; ஓர் இராசிக்குள்ளாகவே முழுதும் அமையும் நடசத்திரம். (சங்.அக.) |
