Word |
English & Tamil Meaning |
|---|---|
| முழுநீறுபூசியமுனிவர் | muḻu-nīṟu-pūciya-muṉivar n. <>id.+. šaiva devotees who besmear sacred ashes all over their bodies, one of tokai-y-aṭiyār, q.v.; தொகையடியாருள் ஒருசாராரும் உடல் முழுவதும் திருநீற்றை அணிபவருமான சிவனடியார் கூட்டம். (தேவா. 738, 10.) |
| முழுநெறி | muḻu-neṟi n. <>id.+. 1. Full flower with the calyx; இதழொடிக்கப்படாத முழுப்பூ. (சிலப். 2, 14, உரை.) 2. Full flower without the calyx; |
| முழுநோக்கு | muḻu-nōkku n. <>id.+. Full aspect of a planet, one of four kiraka-nōkku, q.v.; ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை. கன்னிமதி முழுநோக்கெய்தி (பிரபுலிங். மாயையினுற்பத்தி. 58). |
| முழுப்பங்கு | muḻu-p-paṅku n. <>id.+. Whole or undivided share, as in land owned in definite shares; நிலத்துரிமையில் உட்பிரிவில்லாத தனிப்பங்கு. (W.) |
| முழுப்பாய்சுருட்டி | muḻu-p-pāy-curuṭṭi n. <>id.+பாய்2+. Swindler, great cheat; பெருமோசக்காரன். Colloq. |
| முழுப்பார்வை | muḻu-p-pārvai n. <>id.+. See முழுநோக்கு. (மங்களே. 3, 32, உரை.) . |
| முழுப்புரட்டன் | muḻu-p-puraṭṭaṉ n. <>id.+. 1. See முழுப்புளுகன். . 2. See முழுப்பாய்சுருட்டி. (W.) |
| முழுப்புளுகன் | muḻu-p-puḷukaṉ n. <>id.+. Downright liar; பெரும்பொய்யன். (W.) |
| முழுப்பொய் | muḻu-p-poy n. <>id.+. Downright lie; பெரும்பொய். |
| முழுப்பொருள் | muḻu-p-poruḷ n. <>id.+. The Supreme Being; கடவுள். மனவாக்கினுக்கு மெட்டாத முழுப்பொருளா முதல்வா (சிவரக. கணபதி குமர. 7). |
| முழுமக்கள் | muḻu-makkaḷ n. <>id.+. Fools, as barely satisfying the definition of human beings; அறிவிலார். முழுமக்கள் காதலவர். (திரிகடு. 9). |
| முழுமகன் | muḻu-makaṉ n. <>id.+. Fool; அறிவிலான். (திவா.) |
| முழுமணி | muḻu-maṇi n. <>id.+. 1. Unpierced gem; துளையிடா மணி. 2. Flawless gem; |
| முழுமதி | muḻu-mati n. <>id.+. Full moon; பூர்ணசந்திரன். முழுமதி புரைமுகமே (சிலப். 7, பாட்டு, 14). |
| முழுமன் 1 | muḻu-maṉ n. <>id.+prob. மகன். See முழுமகன். சனகியைக் கவர்ந்து போய முழுமனை (அரிசமய. குலசேகர. 143). . |
| முழுமன் 2 | muḻumaṉ n. <>முழு. Grain escaping unbroken in the process of grinding; அரைக்கும்போது சிதைபடாது விழும் முழுத்தானியம். Loc. |
| முழுமனசு | muḻu-maṉacu n. <>id.+. Entire willingness, full accord; whole-heartedness; முழுச்சம்மதம். Colloq. |
| முழுமனை | muḻu-maṉai n. <>id.+. Ground measuring 2400 sq. ft.; 2400 சதுர அடி கொண்ட நிலப்பகுதி. (W.) |
| முழுமிடறுசெய் - தல் | muḻu-miṭaṟu-cey- v. tr. <>id.+ மிடறு+. To drink in large mouthfuls; வாய்நிறையப் பருகுதல். முழுமிடறு செய் தனுபவித்து (ஈடு, 2, 3, 9). |
| முழுமுதல் | muḻu-mutal n. <>id.+. 1. God, as the Sole Cause; கடவுள். பொன்னம்பலத்தெம் முழுமுதலே (திருவாச. 21, 3). 2. Stem, as of a tree; |
| முழுமுற்றும் | muḻu-muṟṟum adv. <>id.+. See முழுதும். முழுமுற்றந் தானே விளக்காய் (சீவக. 1870). . |
| முழுமூச்சு | muḻu-mūccu n. <>id.+. 1. Utmost effort, as with full breath; முழுபலத்துடன் செய்யும் முயற்சி. Colloq. 2. Inflexible determination; 3. Breathlessness; |
| முழுமூடன் | muḻu-mūṭaṉ n. <>id.+. Great fool; பெருமுட்டாள். (திருவேங். சத. 49.) |
| முழுமை | muḻumai n. <>முழு. 1. Entireness, perfection, completeness; எல்லாம். (பிங்.) 2. Great size; |
| முழுவது | muḻuvatu n. & adv. <>முழு-மை. See முழுவதும். . |
| முழுவதும் | muḻuvatum <>id. n. All, whole; முழுமை. முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் (திருவாச. 3, 12) --Adv. Wholly, totally, completely; |
| முழுவல் 1 | muḻuval n. perh. முழுகு-. An aquatic bird; நீர்ப்பறவைவகை. ஒடுங்கு சிறை முழுவலும் (மணி. 8, 29). |
| முழுவல் 2 | muḻuval n. cf. உழுவல். Perfect love; விடாது தொடர்ந்த அன்பு. முழுவற்கடல் பெருத்தான் (தணிகைப்பு. நந்தியு. 6). |
| முழுவலயம் 1 | muḻu-valayam n. <>முழு+வளை-. Full circle; முழுவட்டம். (யாழ். அக.) |
