Word |
English & Tamil Meaning |
|---|---|
| முளரிப்பகை | muḷari-p-pakai n. <>முளரி+. Moon, as the enemy of the lotus; சந்திரன். |
| முளரிப்பாவை | muḷari-p-pāvai n. <>id.+. Lakṣhmī, as seated on a lotus; [தாமரையில் இருப்பவள்] இலக்குமி. பவளவாய் முளரிப்பாவை (பாகவத, i, பரிட்சித்துவின். 64) . |
| முளரியான் | muḷariyāṉ n. <>id.+ Brahmā, as seated on a lotus; [தாமரையில் இருப்பவன்] பிரமன். |
| முளவு | muḷavu n. <>முள். 1. Porcupine, Hystrix leucura ; முள்ளம்பன்றி. முளவுமாத் தொலைச்சிய (புறநா. 325, 5). 2. Goad ; |
| முளா 1 | muḷā n. <>id. See முளவு, 1. (நாமதீப. 221). . |
| முளா 2 | muḷā n. cf. mūlaka. See முள்ளங்கி. (மலை.) . |
| முளி 1 - தல் | muḷi- 4v. intr. [K. muḷi]. 1. To dry; உலர்தல் முளிமுதல் முழ்கிய வெம்மை (கலித்.16). (பிங்). 2. To burn; to be scorched; 3. To perish; 4. To mature; 5. To curdle ; |
| முளி 2 - த்தல் | muḷi- 11 v. intr. <>முளி1-. 1. To dry; உலர்தல். (நாமதீப. 757.) 2. To become dried; 3. To become scorched; |
| முளி 3 | muḷi n. <>id. 1. Dryness; உலர்ச்சி. முளிவெள்ளெலும்பும் (தேவா. 326, 6). 2. Faded condition; 3. That which is dry; |
| முளி 4 - தல் | muḷi- 4 v. intr. prob. மிளிர்-. To boil up; பொங்குதல். சாதம் முளிந்து வருகிறது. |
| முளி 5 | muḷi n. cf. முழி2. 1. Joint of the body; உடல்மூட்டு. திகழ்முச்சாணென்பு முளியற (தத்துவப். 133). 2. Knot in trees; 3. Ankle; |
| முளி 6 | muḷi n. <>முள். Thorny nail-dye. See செம்முள்ளி, 2. (தைலவ. தைல. 72.) |
| முளு - தல் | muḷu- 4 v. intr. See முளி4-. சோறு முளுந்துவருகிறது. Loc. . |
| முளை 1 - த்தல் | muḷai- 11 v. intr. cf. mūl. [T.molaṭsu K. moḷe M. muḷai.] 1. To spring; to grow, as horns, hair; to sprout, as shoots; to germinate, as seeds; முளைமுதலியன தோன்றுதல். ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10, 8). 2. To rise, appear, come to light; |
| முளை 2 - தல் | muḷai- 4 v. intr. <>முளை1-. See முளை1-. அந்த விதை இன்னும் முளையவில்லை. . |
| முளை 3 | muḷai n. <>முளை1-. [T. molaka K. moḷe M. muḷa Tu. muḷe.] 1. Shoot, tender shoot of trees or plants; seed-leaf; வித்தினின்று வெளிப்படுவது. (சூடா.) வித்திய வெண்முளை (ஐங்குறு. 29). 2. Tenderness; 3. Young tender plant; seedling; 4. See முளையான். Colloq. 5. Bamboo; 6. Son; 7. Core of a boil; 8. Piles. 9. Club with knobs; 10. Peg, stake; 11. Handle, as of a millstone; 12. Pivot, as of a millstone; 13. Wedge-shaped piece of wood used for tightening or securing; 14. Pivot, pin of door; 15. Staple of a padlock; 16. Die; 17. An ancient coin; 18. Sharp end or point; |
| முளைக்கட்டு - தல் | muḷai-k-kaṭṭu- v. tr. <>முளை+. To season pigeon-pea by mixing it with wet red loam, in preparing dholl; செம்மண் கொண்டு துவரையைப் பதப்படுத்துதல். |
| முளைக்காற்கோதை | muḷai-k-kāṟ-kōtai n. <>id.+கால்1+. A garland of paddy-sprouts; நெல் முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை. முளைக்காற் கோதை துயல்வர (பெருங். இலாவாண. 5, 23). |
| முளைக்கீரை | muḷai-k-kiṟai n. <>id.+.[T. molakkūra.] A kind of greens, Amarantus blitum; கீரைவகை. (பதார்த்த. 587.) |
| முளைக்குச்சி | muḷai-k-kucci n. <>id.+. Pin, as of a yoke; நுகத்திற் பூட்டுங்கோல். Colloq. |
| முளைக்குச்சு | muḷai-k-kuccu n. <>id.+. See முளைக்குச்சி.Loc. . |
