Word |
English & Tamil Meaning |
|---|---|
| முற்று 2 | muṟṟu n. <>முற்று-. 1. Perfection, completeness; பூர்ணம். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினுங் கொடுப்பாரிலை (தேவா. 648, 9). 2. That which is complete; 3. Ripeness; maturity; 4. End, termination; 5. Finite verb; 6. See முற்றுகை. முற்றியார் முற்று விட (பு. வெ. 6, 25). |
| முற்றுகரம் | muṟṟkaram n. <>முற்று+. (Gram.) See முற்றியலுகரம். (நன். 94, உரை.) . |
| முற்றுகை | muṟṟukai n. <>முற்று-. 1. Blockade, siege; கோட்டை முதலியவற்றை வளைக்கை. 2. Surrounding; 3. Completion; 4. Distress, want; |
| முற்றுச்சொல் | muṟṟu-c-col n. <>முற்று+. (Gram.) Finite verb; வினைமுற்றாகிய பதம். (திருமுரு. 102, உரை.) |
| முற்றுணர்வு | muṟṟuṇarvu n. <>id.+. Omniscience; எல்லாமறியுந்தன்மை. முற்றுணர்வினனாதல். (சூடா.) |
| முற்றுத்தொடர்மொழி | muṟṟu-t-toṭar-moḻi n. <>id.+. A complete sentence, as consisting of a subject and a predicate; எழுவாயும் பயனிலையுங்கொண்டு பொருள் முடிவுபெற்று நிற்கும் வாக்கியம். (யாழ். அக.) |
| முற்றுத்தொடை | muṟṟu-t-toṭai n. <>id.+. (Rhet.) Versification in which mōṉai, etc., occur in all the feet of an aḷavaṭi verse; அளவடி நான்குசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.) |
| முற்றுப்பெறு - தல் | muṟṟu-p-peṟu- v. intr. <>id.+. To be finished; முடிவடைதல். |
| முற்றும் | muṟṟum adv. <>id. 1. Wholly, entirely; முழுதும். இன்றுமுற்று முதுகு நோவ (திவ். நாய்ச். 2, 2). 2. All |
| முற்றும்மை | muṟṟummai n. <>id.+ உம்மை. Connective particle; See உம், 1. முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும் (நன். 426). |
| முற்றுமடக்கு | muṟṟu-maṭakku n. <>id.+. (Rhet.) Repetition of the whole of the first line of a stanza, as the second, third and fourth lines, though conveying different meanings; ஒரு செய்யுளின் முதலடிமுழுதும் பின் மூன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணிவகை. (தண்டி. சொல். 4, உரை.) |
| முற்றுமுடுகுவெண்பா | muṟṟu-muṭuku-veṇpā n. <>id.+முடுகு-+. (Rhet.) A veṇpā which has a quickflowing rhythm in all the four lines; நான்கடியும் முடுக்குச்சந்தமாகவரும் வெண்பா. (சங். அக.) |
| முற்றுமுணர்தல் | muṟṟum-uṇartal n. <>முற்றும்+. Being omniscient, one of civaṉeṇ-kuṇam, q.v.; சிவனெண்குணத் தொன்றாகிய எல்லாம் அறியுந்தன்மை. (குறள், 80, உரை.) |
| முற்றுமுரண் | muṟṟu-muraṇ. n. <>முற்று+.(Rhet.) Versification in which muraṇ occurs in all the feet of an aḷavaṭi verse; அளவடியின் சீர்முழுதும் முரண்வரத் தொடுப்பது (யாப். வி. 48.) |
| முற்றுமோனை | muṟṟu-mōṉai n. <>id.+.(Rhet.) Versification in which alliteration of the initial letter occurs in all the feet of an aḷavaṭi verse; அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் மோனைவரத் தொடுப்பது (யாப். வி. 48.) |
| முற்றுருவகம் | muṟṟuruvakam n. <>id.+உருவகம். (Rhet.) Complete metaphor; metaphor in which there is similarity in all respects between the objects of comparison; அவயவமும் அவயவியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி. (தண்டி. 35, 13.) |
| முற்றுவமை | muṟṟuvamai; n. <>id.+உவமை.(Rhet.) Simile, in which comparison holds good in all respects; எல்லாவகையினும் உவமான வுவமேயங்கள் ஒத்துவர அமைக்கும் உவமை. |
| முற்றுவிடு - த்தல் | muṟṟ-viṭu- v. tr. <>id.+. To cause a siege to be raised; முற்றுகை நீக்குவித்தல். முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலும் (தொல். பொ. 181, உரை). |
| முற்றுவினை | muṟṟu-viṉai n. <>id.+. (Gram.) Finite verb; வினைமுற்று. முற்றுவினைப் பதமொன்றே (நன். 324). |
| முற்றுழிஞை | muṟṟuḻiai n. <>id.+ உழிஞை. (Puṟap.) A theme describing the excellence of the uḻiai garland which šiva wore when He destroyed tiri-puram; திரிபுரங்களை அழித்தபோது சிவபெருமான் சூடிய உழிஞைப்பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை. (பு. வெ. 6, 8.) |
