Word |
English & Tamil Meaning |
|---|---|
| முற்றூட்டு | muṟṟūṭṭu n. <>id.+ஊட்டு. 1. Land in the exclusive possession and enjoyment of the owner; பூர்ணானுபவமுடைய நிலம். இவ்விடம் எந்தையது முற்றூட்டு (திருக்கோ. 252, உரை.) 2. Land given in endowment, free of tax; 3. Anything which is exclusively enjoyed, as of right; |
| முற்றெச்சம் | muṟṟeccam n. <>id.+எச்சம். (Gram.) Finite verb, used participially; எச்சப்பொருளில்வரும் முற்று. (நன். 351.) |
| முற்றெதுகை | muṟṟetukai n. <>id.+எதுகை. (Rhet.) Rhyming of the second letter in all the feet of an aḷavaṭi verse; அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் எதுகைவரத் தொடுப்பது (யாப். வி. 48.) |
| முற்றெருத்தின்செவி | muṟṟeruttiṉ-cevi n. Style-plant; See எழுத்தாணி, 2. (யாழ். அக.) |
| முற்றை | muṟṟai adv. <>முன்1. [M. mutta.] Formerly, before; முன்பு. முற்றையு முடையமோ மற்றே (நற். 374). |
| முற்றொப்பு | muṟṟoppu n. <>முற்று+. Complete resemblance; முழுதுமொத்திருக்கை. (சிவசமவா. 55.) |
| முறக்கன்னன் | muṟa-kaṉṉaṉ n. <>முறம்+. Gaṇēša, as having winnow-like ears; [முறம்போன்ற காதுடையவன்] கணபதி. (நாமதீப. 27.) |
| முறண்டு | muṟaṇṭu n. See முரண்டு. (யாழ். அக.) . |
| முறண்டுகம் | muṟaṇṭukam n. A mineral poison; அவுபலபாஷாணம். (யாழ். அக.) |
| முறப்பா | muṟappā n. See முரப்பா. (பைஷஜ. 98.) . |
| முறம் | muṟam n. [K. mora M. muram.] 1. Winnow; தானிய முதலியவை புடைக்க உதவுங் கருவி. முறஞ்செவியானை (புறநா. 339). 2. The 16th nakṣatra as resembling a winnow; |
| முறமுற - த்தல் | muṟa-muṟa- 11 v. intr. Loc. 1. To be neat; சுத்தமாயிருத்தல். 2. To be rough or stiff; to be crisp; |
| முறமுறக்க | muṟamuṟakka adv. <>முறமுற-. Neatly, cleanly; சுத்தமாக. Loc. |
| முறமுறப்பு | muṟa-muṟappu n. <>id.+. Loc. 1. Cleanliness; சுத்தம். 2. Roughness, stiffness, as of washed cloth; crispness; |
| முறவளைவு | muṟa-vaḷaivu n. <>முறம்+. Elliptical arch; நிலை பலகணி முதலியவற்றின் மீது முறம்போல் வளைவாய்க் கட்டும் கட்டிடவேலை. (C. E. M.) |
| முறளச்சிப்பி | muṟaḷa-c-cippi n. perh. முரல்+. A kind of shell; சிப்பிவகை. (W.) |
| முறாக்கத்தலை | muṟākkattalai n. <>முறால்+. A sea-fish; கடல்மீன்வகை. (J.) |
| முறால் | muṟāl n. A sea-fish; கடல்மீன்வகை. (J.) |
| முறி 1 - தல் | muṟi- 4 v. intr. [T.murikonu K.muri M. murikka.] 1. To break, give way, as a branch; ஒடிதல். அச்சு முறிந்ததென் றுந்தீபற (திருவாச. 14, 2). 2. To be defeated, as an army; 3. To be discomfited; 4. To perish, cease to exist; 5. To change in one's nature; to be spoiled; 6. To exceed the proper stage, as in boiling or heating; 7. To become ineffectual, as medicine; 8. To fail, as a business concern; 9. To be ungracious; |
| முறி 2 - த்தல் | muṟi- 11 v. tr. Cause. of முறி1 -. [K. muri.] 1. To break, as a stick; ஒடித்தல். பொருசிலை முறித்த வீரன் (பாரத. கிருட்டிண. 141). 2. To cut; 3. To close; to discontinue; 4. To change the nature of, as milk, medicine; 5. To fold, turn back, as the warp in a loom; |
| முறி 3 | muṟi n. <>முறி2-. [T. K. M. muri.] 1. Piece; துண்டு. கீண்ட வளையின் முறியொன்றுகிடப்ப (ஞானவா. சிகித். 107). 2. Half; 3. Broken half of a cocoaunt; 4. Deed, written bond; 5. Receipt written on a piece of ola; 6. Piece of cloth; 7. Rough cloth; 8. Sprout, shoot; 9. Tender leaf; 10. Leaf; 11. Part of a village or town; 12. Room; 13. Corner; 14. See முறி திரிசூலை. (மூ. அ.) 15. Alloy of a superior quality, especially bell-metal; |
